தலைப்பு

புதன், 7 ஜூலை, 2021

'அம்மா' என்று கதறி அழைத்த அடுத்த நொடி மாணவனின் வேதனை தீர்த்த சாயி மாதா!

அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை என்பார்கள். அன்னை தெய்வமாக இருப்பது சிறப்பு தான்.. ஆனால் தெய்வமே நமக்கு அன்னையாக இருப்பது சிறப்பிலும் சிறப்பு... பெரும்பாக்கியம். யாருக்கும் வாய்க்காத பெரும் பேறு. பக்தர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமல்ல தன் மேல் பக்தியே இல்லாது போயினும் அவர்களுக்கும் எவ்வாறு சுவாமி அன்னையாக இருக்கிறார் என்பதற்கான நெகிழ்வான அனுபவம் இதோ!!


2002ல் ஒரு மாணவன் மிருதங்கம் ஆரம்பப் பயிற்சி பெறுவதற்காக பர்த்தி வந்து சுவாமியின்  இசைக் கல்லூரியில் சேர்ந்தான், அவன் பாபாவை அதற்கு முன் பார்த்ததே இல்லை! பாபாவின் பக்தனும் அல்ல! 

இப்படி இருக்கையில் ஜூலை மாதம் அங்கே தங்கியிருந்த அவனுக்கு கடுமையான வைரஸ் ஜுரம் ஏற்பட்டது. டாக்டர்கள் வைத்தியம் செய்தும் பலனில்லை! ஜுரம் குறையவில்லை! வாந்தி இருந்ததால் உணவு உட்கொள்ளவும் முடியவில்லை! தனிமையில் தவித்த வண்ணமிருந்தான்... ஆறுதலுக்கு அருகே யாருமில்லாதது போல் உணர்ந்தான்... அந்த நேரத்தில் சுவாமியின் பக்தர்களோ சுவாமியை நினைத்தபடி இருப்பார்கள்.. சுவாமி நாமம் ஜபிப்பார்கள். சுவாமி பக்தர்கள் அவர்களே அறிந்தோ அறியாமலோ தனிமையாக இருக்க வாய்ப்பே இல்லை. காரணம் பக்தர்களின் உள்ளும் புறமும் இருக்கிறார். இது ஏதோ ஆறுதல் வார்த்தை இல்லை. அனுபவ சத்தியம். ஆனால் இந்த மாணவனோ சுவாமி பக்தனில்லை என்பதால் சுவாமியின் சர்வ வியாபகத்தன்மையை உணர முடியவில்லை. 


ஒருநாள் பாபா பஜன் ஹாலினுள் நுழைந்த 'ஸ்ரீராம் என்ற மாணவன் உடல் நலமின்றி சிரமப்படுகிறான்... அவன் எப்படி இருக்கிறான்?' என்று கேட்டார். ஒருவருக்கும் ஸ்ரீராம் யார் என்றே தெரியவில்லை... மேலும் Band Leader ஒருவன் அதே பெயரில் உள்ளான்... ஆனால் அவன் இல்லை என்றார் சுவாமி! ஒருவருக்கும் இந்த ஸ்ரீராமை தெரியவில்லை! ஏதும் பேச இயலாது முழிக்கின்றனர். 


பிறகு சுவாமியே “நேற்று இரவு 2 மணிக்கு அவன் வலியால் துடித்து 'அம்மா' என்று அழுது கூவினான். நான் அங்கே சென்று அவன் அருகே அமர்ந்து தைரியப்படுத்தி தூங்க வைத்துவிட்டு வந்தேன்! இன்னும் 3 நாட்களில் குணமாகி விடுவான்” என்றார். உலகம் முழுவதையும் கவனித்துக்கொள்ளும் ஸாயி இவனை பிரத்யேகமாக வந்து பார்த்துக்கொண்டார்! அவன் “அம்மா” என்று கூறிவிட்டான் அல்லவா? அதான் தூய்மையான தாயன்பு!!!

ஆதாரம்: Sai Chandana P 53


🌻இந்த அனுபவத்தில் வாசிப்பவர்கள் ஒன்றை நன்றாக கவனிக்க வேண்டும். அந்த மாணவனோ சுவாமி பக்தன் இல்லை.. அவன் சுவாமி பெயரையோ .. பிற தெய்வங்களின் பெயரையோ கூறவில்லை.. அம்மா என்று தான் அழைத்தான்.. சாயி என்ற சொல்லும் அம்மா என்ற சொல்லும் ஒன்று தான் என்பதும் அவன் அறிய வாய்ப்பில்லை.. இப்படி இருக்கையில் சுவாமி அவன் அறைக்கு பிரஸன்னமானார்... அவனிடம் கருணை பொழிந்தார் எனில் சுவாமி இறைவன் என்பது இதன் மூலம் உணர முடிகிறதல்லவா.. !!! அது சுவாமியே தாயுமானவர் என்பதை உணர்த்துகிறது. சுவாமி நம் அகத்தையே கவனிக்கிறார். நம் குண மாற்றங்களே அவருக்கு தேவை.. வேறெதுவுமில்லை.. இப்படி ஒரு இறைவன் இதுவரை இதிகாசத்தில் கூட இல்லை.. அப்பேர்ப்பட்ட மகாகருணையாளர் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி!! 🌻

1 கருத்து:

  1. [சுவாமி பக்தர்கள் அவர்களே அறிந்தோ அறியாமலோ தனிமையாக இருக்க வாய்ப்பே இல்லை. காரணம் பக்தர்களின் உள்ளும் புறமும் இருக்கிறார்]

    Very true. That confirms belief

    பதிலளிநீக்கு