பிரசாந்தி நிலையம் செல்பவர் அனைவரும் பரம பக்தியுடன் பிரசாதமாக பெறுவது பாபாவின் விபூதி பொட்டலங்களைத்தான். சர்வ ரோக நிவாரணியாக, சர்வ ஐஸ்வர்களின் பிரதிபலிப்பாக , சங்கட நாசினியாக பக்தர்கள் அணிவது இந்த பாபா விபூதியைத் தான். இந்த பர்த்தி பாபா விபூதி எவ்வாறு தயாரிக்கப் படுகிறது என்பதை இனி காண்போம்...
பரமம் பவித்ரம் பாபா விபூதிம்!
பரமம் விசித்ரம் லீலா விபூதிம்!
பரமார்த்த இஷ்டார்த்த மோக்ஷ ப்ரதாதம்!
பாபா விபூதிம் இதமஸ்ரயாமி!
எந்தப் பொருளையும் தீயிலிட்டால் கருப்பாக மாறும். அதை அக்னிப் புடம் போட்டால் வெண்மை நிறத்தில் சாம்பலாக மாறும். இதுவே முடிவான நிலையாகும். உலகம் நிலையற்றது. தோன்றியது அனைத்தும் அழிவை சந்தித்தே தீரவேண்டும். முடி சார்ந்த மன்னரும் முடிவில் ஒரு பிடி சாம்பல் ஆவது தானே நித்திய சத்தியம். அழிவின் சாட்சிமான சாம்பல், ஆத்மானுபூதியான விபூதியாக பரிணமித்து, பரம பவித்ரமாக பாபாவின் கரத்திலே உத்பவிக்கிறது.
🌹ஹரஹர ஹரஹர சாம்ப சிவா விபூதி சுந்தர சாயி சிவா:
பிரசாந்தி நிலையம் உருப் பெற்ற பிறகு பக்தர்கள் கூட்டம் பெருகத் தொடங்கியது. உலகின் அனைத்து பிராந்திய, மதங்களின் சங்கமிப்பாக , புனித யாத்திரை தலமாக புட்டபர்த்தி மாறியது. பகவானின் அருட் பிரசாதமாக அவரது உள்ளங்கையில் விபூதி ஸ்ருஷ்டியாகி பல சமயங்களில் பலருக்கு கிடைத்தாலும், இந்த அரிய பிரசாதம்அனைவருக்கும் கிடைக்க, பாபா திருவுள்ளம் கொண்டார். ஆகவே தம் கரத்தில் உற்பவம் செய்த விபூதியை தானே உற்பத்தியும் செய்ய ஆரம்பித்தார். ஸ்வாமி தானே பசுஞ் சாணத்தை சுத்திகரித்து , உலர்த்தி, பஸ்பமாக்கி சலித்து விபூதி தயாரித்தார். பிறகு அதை சிறு சிறு பாக்கெட்டுகளில் நிரப்பி , பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்பட்டது.
இந்த சிறு விபூதி பொட்டலம் பக்தர்கள் மற்றும் அவர் குடும்பத்தினர் தேவைக்கு போதுமானதாக இல்லை. அவர்கள் பெரிய பாக்கெட் விபூதியை விரும்பினர். அவர்களின் கோரிக்கையை அச்சமயம் பர்த்தி ஆசிரமத்தின் கூட்டுறவு கடையை நிர்வகித்த திரு. கியால்தாஸ், பகவான் பாபாவிடம் கூறினார். மேலும் அதிக அளவில் விபூதி தயாரிக்க ஒரு உற்பத்தி அமைப்பிற்கு அனுமதி தருமாறு பாபாவை வேண்டினார். பாபாவும் கருணையுடன் இதற்கு அனுமதி வழங்கினார்.
🌹பரமம் பவித்ரம் பாபா விபூதிம்:
1986ம் ஆண்டிலிருந்து, பாபா விபூதி தயாரிக்க ஒப்புதல் அளித்தார். மூலப் பொருட்களாக உமி மற்றும் பசுஞ் சாணக் கலவை உபயோகப் படுத்தப்பட்டு , பஸ்மாக்கப்பட்டு பின்னர் சலித்த மெல்லிய விபூதி தூள்கள் 50 கிலோ பைகளில் அடைக்கப்பட்டு , பழனியிலிருந்து புட்டபர்த்தி வருகின்றன.
🌹பரமம் விசித்ரம் லீலா விபூதிம்:
இனி ஆரம்பமாகிறது பகவானின் கண்காணிப்பு. ஸ்வாமி தாமே தேர்ந்தெடுத்த வாசனையூட்டிகளை ( திட வாசனையூட்டிகள் இரண்டு, திரவ வாசனையூட்டிகள் இரண்டு) அந்த விபூதி பைகளில் உள்ள விபூதியில் கலக்குமாறு பணித்தார். இதற்காக 40 பைகளில் உள்ள விபூதி குவிக்கப்பட்டு, வாசனையூட்டிகளில் சில தேக்கரண்டிகள் சேர்த்து கலக்கிய பின், 100 கிராம் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தன.
பாபா கூறிய கலவையின் விகிதம் பரம ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு, முதன் முதலில் புஜம்மா என்கிற தொண்டரால் மட்டும் விபூதி கலவை பணி மேற்கொள்ளப் பட்டது. சிறிது நாட்களுக்கு பிறகு விபூதியின் மணத்தைக் கூட்ட புஜம்மாவிடம் சிலர் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கைக்கு அவர் மனம் உடன்படவில்லை. அவரது மனக்குக்குழப்பத்திற்கு விடையாக பகவான் அவரது கனவில் தோன்றினார். கொடுக்கப்பட்ட விகிதத்தை அதிகரிக்கக் கூடாது என எச்சரித்த பகவான், அதற்கு நேர் மாறாக அதை பாதியாகக் குறைக்கும் படி கட்டளையிட்டார். அவ்வாறே செயல்படுத்தப்பட்ட மாற்றம் அன்றிலிருந்து இன்றுவரை அவ்வாறே உள்ளது.
🔥 புட்டபர்த்தி சாயி நாதரின் விபூதியை ஆன்லைனில் வாங்க விரும்பும் அன்பர்கள் கீழ் காணும் லிங்கை க்ளிக் செய்து order செய்யவும்...
👇 👇
விவரக்குறிப்பு:
> 1 யூனிட் = 10 பாக்கெட்டுகள் (1000 கிராம்)
>1 யூனிட் விலை: ₹20
>ஆர்டர் Qty.: குறைந்தபட்ச 1 யூனிட் மற்றும் அதிகபட்சம் 5 யூனிட்கள்
>இந்தியாவுக்குள் மட்டுமே டெலிவரி.
ஆதாரம்: https://media.radiosai.org/journals/vol_12/01FEB14/vibhuti-the-Making-of-the-Wondrous-Holy-Ash.htm
தமிழாக்கம்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர்
அருமை. புகைப்படங்களுடன் pack செய்யப்பட்டுள்ள இந்த விபூதி பதிவு சிறந்த editing க்கு எடுத்துக் காட்டு.
பதிலளிநீக்குWhether packets are available now? If so, how to get the same?
பதிலளிநீக்கு