-வியந்து விவரிக்கிறார் திரு.கே. வைத்யநாதன் (முன்னாள் ஆசிரியர், தினமணி)
1996-ம் ஆண்டு. பொதுத் தேர்தல் முடிவுகள் அப்போதுதான் வெளிவந்திருந்த நேரம். அன்றைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா ஆட்சி அமைப்பதற்கு அடல் பிகாரி வாஜ்பாய்க்கு அழைப்பு அனுப்பிவிட்டிருந்தார். இன்னும் பதவி பிரமாணம் ஆகவில்லை, அவ்வளவே.
அந்த நேரத்தில் பெங்களூருவில் ஒரு விழா. அன்றைய கர்நாடக முதல்வர் தேவ கெளடா உள்ளிட்ட பலரும் மேடையில் வீற்றிருக்கிறார்கள். பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா அருளாசி வழங்க இருக்கிறார்.
‘மாண்புமிகு பிரதம அமைச்சர் அவர்களே’ என்று தனது உரையைத் தொடங்குகிறார் பகவான். உடனே ஒருவர் அவரிடம் சென்று, ‘முதல் அமைச்சர்’ என்று திருத்திச் சொல்கிறார்.
முதல்வர் தேவ கெளடாவை பகவான் ஒரு வினாடி சிரித்தபடி பார்க்கிறார். மீண்டும் ஒரு முறை ‘மாண்புமிகு பிரதம அமைச்சர் அவர்களே’ என்று கூறி நிருத்துகிறார். சபையில் கரகோஷம், சிரிப்பு. கூட்டம் தொடர்ந்து முடிந்தது.
இந்த சம்பவம் நடந்த 24ம் நாள் அன்றைய கர்நாடக முதல்வர் தேவ கெளடா இந்தியப் பிரதமாகிறார்.
இடையில் வாஜ்பாய் தலைமையில் 13 நாள் அமைச்சரவை கவிழ்ந்தது. பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்வரிசையில் இருந்த ராமகிருஷ்ண ஹெக்டேவும், ஜோதி பாசுவும் பின்தள்ளப்பட்டு என்னென்னவோ நடந்துவிட்டன. பகவான் பாபாவின் வாக்கு பலித்ததா இல்லை பகவானின் ஆசி பலித்ததா?
அந்த கூட்டத்தில் இருந்தவர்களில் நானும் ஒருவன். பக்தனாக அல்ல. பத்திரிக்கை நிருபராக. பகவானின் பார்வை பட்டால் எதுவும் நடக்கும் என்பதை நான் அன்றுதான் உணர்ந்து கொண்டேன்.
🌻சுவாமியின் வாக்கு பலித்ததா இல்லை ஆசி பலித்ததா? என கேட்டிருக்கும் பத்திரிகை ஆசிரியருக்கு சுவாமி சங்கல்பம் பலித்தது என இந்நேரம் புரிந்திருக்கும். சுவாமி சங்கல்பமே இந்த அண்ட சராசரமும்.. நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும்... நடத்துவதே சுவாமி என்பதால் நடந்ததும் நடப்பதும் நடக்கப்போவதும் சுவாமி அறிவார் என்பதால் மனித மனம் அமைதியாகி மனித ஆன்மா அவர் பாதம் சரணாகதி அடைவது மட்டுமே உயர்ந்த ஆன்மீகம் எல்லாம்...!🌻
ஓம் சாயிராம்
பதிலளிநீக்கு