தலைப்பு

சனி, 3 ஜூலை, 2021

🇸🇻 பாபாவின் அனுக்கிரகத்தால் கிடைத்த அதிபர் பதவி!

42nd President of El Salvador

Francisco Guillermo Flores Pérez
 was a Salvadoran politician who served as President of El Salvador from 1 June 1999 to 1 June 2004 as a member of the conservative Nationalist Republican Alliance (ARENA).

எல் சல்வடோர்(El Salvador) மத்திய அமெரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடபசிஃபிக் கடல்,  குவாட்டமாலா மற்றும் ஹொண்டூராஸ் ஆகியவை அமைந்துள்ளன. மக்கள் தொகை, கிட்டத்தட்ட 6.9 மில்லியன். அமெரிக்கக் கண்டத்தில் இதுவே மிகவும் ஜனத்தொகை அடர்ந்த நாடாகும். இதன் தலைநகரமான சான் சல்வடோர், மத்திய அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகராகும். ஸ்பானிய  மொழி பேசும் இவர்கள்  பெரும்பான்மையாகக்  கிறிஸ்துவ  மதத்தையே பின்பற்றுகிறார்கள்.


பகவான் ஸ்ரீ சத்யபாபா, எல் சல்வடோர் அதிபர் மாளிகையில், அதிபர் முதல் பல மந்திரிகள் வரை வெற்றி கொண்டுள்ளார் (தன்பால் கவர்ந்துள்ளார்). பிரான்சிஸ்கோ ஃப்ளோரர்ஸ் அவர்கள் ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் தீவிர பக்தர். இவர் 1999 முதல் 2004 வரை அந்நாட்டின் அதிபராக இருந்தவர். அவருடைய 22ஆவது வயதில் அதாவது 1981ல் பாபாவை தரிசிக்க  புட்டபர்த்தி வந்திருந்தார். தன் நாட்டைச் சேர்ந்த அன்பர்களோடு வரிசையில் அமர்ந்திருந்த அவர், பாபாவின் தரிசனத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருந்தார். பின்னர் தரிசனம் தர வந்த பாபா மூன்றாவது வரிசையில்  அமர்ந்திருந்த அவரிடம் சென்று,  “உங்களது நாட்டை, நீங்கள் முன்நடத்திச் செல்வீர்கள்” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றார். 


அவருக்கோ ஒன்றும் புரியவில்லை.  பாபா யாரைக் குறிப்பிடுகிறார்,  தன்னையா? இல்லை தன் அருகில் இருந்த நண்பரையா? ஒன்றும் புரியவில்லை. பின்னர் புட்டபர்த்தியில் இரண்டு நாட்கள் தங்கியபின் குழப்பத்தோடு தன் தாய்நாட்டிற்குத் திரும்பினார்.  அப்படியே ஒரு பதினெட்டு ஆண்டுகள் சென்றன. தேசியவாதக் குடியரசுக் கூட்டணிக் (Nationalist Republican Alliance)  கட்சியில் பணியாற்றி வந்த அவரை, 1999ல் அந்தக் கட்சியின் மூத்த அரசியல் தலைவர்கள் ஒன்றுகூடி, அதிபர் வேட்பாளராகத் தேர்வு செய்தனர். பின்னர் அவர் வெற்றி பெறுகிறார்.


நாட்டின் அதிபரான  பிறகும்கூட அவர்கள் நாட்டில் நடந்த சாயி கருத்தரங்குகளில் வழக்கம்போல முடிந்தவரை பங்கு கொண்டார். அப்படி அவர் அதிபரான பிறகு பங்குகொண்ட முதல் சாயி கருத்தரங்கில் உரையாற்றிய போது, "தனக்கு இந்த அதிபர் வாய்ப்புக் கிடைத்தது பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் அனுக்கிரகத்தால்தான்" என்று  குறிப்பிட்டு, தனது அனுபவத்தை அங்கு குழுமியிருந்த அன்பர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

ஆதாரம்:



Transforming Humanity: Sri Sathya Sai Baba (Glimpses of Divine Incarnation) By Dinesh Chandra Bhargava

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக