தலைப்பு

சனி, 17 ஜூலை, 2021

நேர்காணல் அறையிலிருந்து ஆஸ்திரேலியா சென்ற பக்தர்!


இடமும் காலமும் வெறும் மாயை. மனதின் பிறழ்வுகள்.. இறைவனே மெய்யானவர். அந்த பரிபூரண பரம்பொருளான இறைவன் சத்யசாயிக்கு எல்லா இடமும் ஒரே இடமே. காற்றையே நிர்வகிக்கும் கடவுளுக்கு இதய ஈரம் உண்டே தவிர தூரம் என்ற ஒன்றே இல்லை... 

மெக்கா சம்பவத்தைப் போன்றதொரு அற்புதம் இது. ஒரு சமயம் பிரசாந்தி நிலையத்தில் 10 பக்தர்களுக்கு ஸ்வாமியிடமிருந்து நேர்காணல் கிடைத்தது. அதில் ஒரு பக்தர் மாத்திரம் மிகுந்த துயரத்துடன் காணப்பட்டார். ஸ்வாமி அந்த பக்தரிடம் அவரது துயரத்திற்கான காரணத்தைக் கேட்டபோது, எனது மனைவி மரணப்படுக்கையில் இருக்கிறாள் என்று பதிலளித்தார். சுவாமி உடனே எதிரில் இருந்த சுவற்றில் ஒரு விமான நிலையத்தை காண்பித்து  அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆகாய விமானத்தில் ஏறிக் கொள்ளுமாறு சொன்னார் அந்த பக்தரும் சுவாமி சொன்னபடியே அந்த விமானத்தில் ஏறினார்.


பின்னர் அந்த விமானம் உடனே கிளம்பி ஆஸ்திரேலியாவில் போய் இறங்கியது. அந்த பக்தர் ஒரு வாடகைக் காரில் ஏறி தனது வீட்டை அடைந்து மனைவியைப் பார்த்தார். நடந்த அனைத்தையும் நேர்காணல் அறையினுள் அமர்ந்திருந்த மற்ற 9 பக்தர்களும் இந்த அதிசயத்தைக் கண்டு வியந்து போயினர். இதெல்லாம் இந்த கலியுகத்தில் சாத்தியமா என்று குழம்பிப் போயினர்... இவ்வாறு சுவாமி துயருற்று இருந்த தனது பக்தரை சில நிமிடத்திற்குள் ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைத்தார். 

காலம் என்பது ஸ்ரீ சத்ய சாயியின் முழுமையான ஆதிக்கத்தில் உள்ளது. அவரது திருவுளப்படி அவரால் அதனை குறுக்கவும் இயலும். நீட்டவும் இயலும்.

10 பக்தர்கள் சுவாமியின் நேர்காணல் அறைக்குள் நுழைந்தனர். ஆனால் வெளியே வந்ததென்னவோ 9 பக்தர்கள் மாத்திரமே... 

🌻 இறைவன் சத்ய சாயியால் ஆற்றமுடியாத செயற்கரிய செயல்கள் ஏதேனும் உள்ளதா? இறைவன் சத்யசாயிக்கு இவை எல்லாம் சர்வ சாதாரணமானவையே. காலங்களைப் படைத்தவனுக்கு தெரியாதா கால -- தேச --  இட வர்த்தமானங்களை மாற்றி அமைக்க? 🌻

ஆதாரம்:- Sanathana Sarathi  2004
தமிழாக்கம் :- ரா வரலட்சுமி,  குரோம்பேட்டை,  சென்னை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக