ரஷ்யாவைச் சேர்ந்த உலகப்புகழ் பெற்ற 'ஆரா’(aura) ஆராய்ச்சியாளர் திரு. டாக்டா் ப்ராங் பாரனோஸ்கி பாபாவின் 'ஆரா'வை ஆராய்ச்சி செய்ய இந்தியாவுக்கு வந்த பின்னணி கதை:
அப்போது சுவாமிக்கு 10 வயது. கமலாபுரம் என்ற ஊரில் படித்துக் கொண்டிருந்தார். அவருக்கு ரமேஷ், ரகு என்ற இரண்டு நண்பர்கள். மூன்று பேரும் மாலையில் ரயில்வே ஸ்டேஷனுக்கு போவார்கள். அங்கு அனந்தப்பூர் - கடப்பா ரயில் வண்டி ஒன்று வந்து நிற்கும். அது கிளம்பும் வரை இருந்து வேடிக்கை பார்த்துவிட்டு திரும்புவார்கள். இது பல நாட்கள் நடந்து வந்த வாடிக்கையான விஷயம். ஒரு நாள் இதே போல் ஸ்டேஷனுக்கு போயிருந்தார்கள். அந்த வண்டியில் ஒரு வெள்ளைக்காரர் (வெளிநாட்டவர்) இருந்தார். பெயர் உல்ஃப் மெஸ்ஸிங்.
அவர் சுவாமியை பார்த்தார். பார்த்தவருக்கு மனதில் பளீரென்று ஏதோ தோன்றி இருக்க வேண்டும். வண்டி கிளம்ப மணியடித்துவிட்டனர். சிக்னல் கொடுத்தாகிவிட்டது. உல்ஃப் புறப்பட்ட வண்டியிலிருந்து வெளியே குதித்து விட்டார். சத்யாவை நோக்கி வந்தார். அப்போது வெளிநாட்டவர்கள் பிள்ளைகளை கடத்தும் பீதி பரவி இருந்த நேரம். ரமேஷ், ரகு இரண்டு பேரும் பயந்துபோய் சிறுவன் சத்யாவையும் இழுத்துக்கொண்டு ஓடி வந்து, வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்ற சத்தியம் வாங்கிக் கொண்டு, தங்கள் வீட்டிற்கு போய் விட்டனர்.
உல்ஃப் மெஸ்ஸிங்
இந்த உல்ஃப் மெஸ்ஸினின் பழைய கதையை கொஞ்சம் பார்ப்போம். இவர் பிறந்தது 1899 செப்டம்பர் 10. ரஷ்யாவில் பிறந்தார். இவர் முகத்தில் எப்போதும் சிரிப்பு மாறாமல் இருக்கும். ஆறாவது வயதிலேயே தியானம் செய்யத் துவங்கினார். பெற்றவர்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம். உல்ஃப்பிற்கு 9 வயது இருக்கும் போது, அவர் வீட்டின் பின்புறம் உயரமாக பெரிய வெள்ளை அங்கி போட்டிருந்த, தலையில் துணி கட்டி இருந்த, தாடி வைத்திருந்த ஒரு வயோதிகர் வந்தார். உல்ஃப் ஐ பார்த்து, நீ உலகியலான பௌதிக படிப்புடன், ஆன்மீகம், வேதாந்தம், நல்ல பழக்கங்கள் எல்லாம் கற்று தரும் பள்ளியில் சேர். உன்னுள் ஆன்மீகம் வளருகிறது. அதனாலேயே உனக்கு இந்த யோசனையை கூற வந்தேன் என்று சொல்லிவிட்டு, மறைந்து விட்டார்.
அந்த காமிராவுடன் 1936 ஆம் ஆண்டு உல்ஃப் இந்தியா வந்தார். அப்படி வந்து அனந்தப்பூர் - கடப்பா வண்டியில் அமர்ந்த போதுதான் அவர் சத்யாவை ஸ்டேஷனில் பார்த்தார். அவரது சாதாரண பார்வைக்கே 'சத்யா'வை சுற்றி இருந்த 'ஆரா' என்கிற திவ்ய சக்தி கதிர்கள் தென்பட்டன. அதனால்தான் காந்தம் கவர்வது போன்ற ஈர்ப்புடன் சிறுவன் சத்யாவை தொடர்ந்து வீடு வரை சென்றார். சில காலம் கழித்து உல்ஃப் கண்ணுக்கு தெரியாத கதிர்களை கண்டுபிடித்து அதற்கான பயிற்சி வகுப்பு ஒன்றை தனது ஊரில் நடத்தினார். அதில் இருந்த மாணவர்களில் ஒருவரை அழைத்து, பாரத நாட்டில் ஆந்திரப்பிரதேசத்தில், அனந்தபூர் மாவட்டத்திற்கு சென்று, இத்தகைய தேஜஸ் உள்ள ஒருவரை தேடும்படி அனுப்பினார். அப்படி அனுப்பப்பட்டவர் பெயர் டாக்டர் ப்ராங் பாரனோஸ்கி. அவர் கையில் கொண்டு வந்த கேமராதான் கிர்லியன் கேமரா.
இதை சுவாமி மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறார். உல்ஃப்பை பற்றி சொல்லும் போது, அன்று ரஷ்யாவிலிருந்து கையில் வெறும் எட்டணா மட்டுமே வைத்துக் கொண்டு இந்தியாவிற்கு வந்தான். யாரும் அவனை பணம் கேட்கவில்லை. அவனை யாரும் தடுக்கவில்லை. அவனது எண்ணம் உத்தமமான தாக இருந்ததால் அவனுக்கு எந்தவித குறையும் இல்லாமல் நான்(சுவாமி) பார்த்துக் கொண்டேன், என்று மாணவர்களிடம் சொன்னார்.
ஆதாரம்: திருவடி சங்கமம். பாகம் -3 / ஆசிரியர்: சாயிசரஜ்
ரஜினி நடித்த 2.0 திரைப்படத்தில் டாக்டா் ப்ராங் பாரனோஸ்கி பற்றி இடம்பெற்ற காட்சி மற்றும் பாபா உடனான ஆராய்ச்சியாளர் பாரனோஸ்கின் அனுபவம்.
👇👇
👇👇
சர்வாதிகாரிகளான 🇩🇪ஹிட்லர்.. 🇷🇺ஸ்டாலின் கண்களிலேயே விரலை விட்டு ஆட்டிய உல்ஃப் மெஸ்ஸிங்ன் (பாரனோஸ்கின் ஆசிரியர்) சத்ய சாயி அனுபவம்!
👇👇
Divine experience. We have felt .Thank you sairam.wonderful.
பதிலளிநீக்கு