திருச்சியிலிருந்த ஒரு ரயில்வே அதிகாரி, ஸ்வாமியின் தெய்வீக மேன்மையை கேள்வியுற்று, தன் குடும்பத்தோடு புட்டபர்த்திக்குக் காரில் வந்தார். மகிழ்ச்சியுடன் தங்கி, ஸ்வாமியின் லீலைகளைப் பார்த்து மகிழ்ந்தார்.ஆனால் ஸ்வாமியுடன் பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை!
மூன்றாம் நாள் காலை 10 மணிக்கு ஸ்வாமி மந்திரை விட்டு வெளி வந்து நேராக இந்த ஆபிசரின் காருக்கு அருகே வந்து ஒரு கல்லால் பெட்ரோல் டாங்கை தட்டினார்.ஆபீசர் பிரமிக்கும் வகையில்,அத்தனை பெட்ரோலும் பழுதான பெட்ரோல் டேங்க்கின் வழியே, வெளியே வழிந்தோடி விட்டது.மிகவும் சங்கடத்திற்கு ஆளாகிவிட்டார் அந்த ஆபிசர்! காரை சரிசெய்ய அனந்தபூர் தான் செல்ல வேண்டும். போய் வருவது மிகமிக தூரம். இரண்டு மூன்று நாட்களுக்கு தன் விதியை நொந்துகொண்டு அமர்ந்திருந்தார்.
ஒரு நாள் காலை ஸ்வாமி அவரிடம் வந்து, "ஐயோ பாவம்" என்று கூறிவிட்டு கார் அருகே சென்றார். சித்ராவதியிலிருந்து நீர் கொண்டுவரச் செய்தார். அதை டேங்க்கிற்குள் ஊற்றச் செய்தார். ஆச்சரியப்படத்தக்க வகையில் அந்த ஓட்டை தானே மறைந்து விட்டது. ஊற்றிய நீர் பெட்ரோலாக மாறிவிட்டது! ஆபீசர் கண்களில் நீர் மல்க நன்றி தெரிவித்து, ஸ்வாமியின் மகிமை புரியாமல், மூன்று நாட்களாக அவரைப்பற்றி எல்லாரிடமும் புகார் கூறியதற்கு மன்னிப்பும் கேட்டார்.
அவருடைய மன்னிப்பை ஏற்றுக் கொண்ட வகையில் ஸ்வாமி அவரை பெங்களூருக்கு அனுப்பி மந்திருக்கு வேண்டிய சில பொருட்களை வாங்கி வருமாறு கூறினார். கடவுளின் அன்பு மழைத்துளி போன்றது. பாரபட்சமின்றி எல்லா இடங்களிலும் விழும்.
ஆதாரம்: 'Nectarine leelas of Bhagawan Sri Sathya Sai Baba', R. Balapattabi, Page no 21
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக