தலைப்பு

செவ்வாய், 28 ஜனவரி, 2020

பால பட்டாபியின் உயிரைக் காப்பாற்றிய பகவான்!


தமிழ்நாட்டிலிருந்து வந்த ஆரம்ப கால பக்தர்களில் கரூரைச் சேர்ந்த பால பட்டாபி மிகவும் முக்கியமானவர் ஆவார். பால பட்டாபி அவர்களின் வாழ்வில் பகவான் பல அற்புதங்களை நிகழ்த்தி உள்ளார். கீழ்காணும் இந்த அற்புதத்தை பகவான் நிகழ்த்தும்போது அவருக்கு வயது வெறும் 21. 

வெளியே சொல்லாத துயரங்களை பால பட்டாபி வாழ்வில் அனுபவித்துள்ளார்.  இக்கட்டான சமயங்களில் ஸாயி தான் அவருக்கு அருள் புரிந்து பாதுகாப்பு அளித்துள்ளார். பட்டாபியின் மேல் உள்ள கருணையால் எப்படி அவரது  உயிரைக்  காப்பாற்றினார் என்பதை விளக்கும் நிகழ்வே இது!  பட்டாபியின் தொழில் மிகவும்  நலிவு அடைந்து விட்டது,  இனி  தாக்குப் பிடிக்க முடியாது என்று உணர்ந்து ஒரு சில நகைகளை எடுத்துக் கொண்டு, வீட்டை விட்டு ஓடி விட்டார்.


நாட்டை விட்டு வெளியேறுவதாக முடிவு செய்து, சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சூர செட்டியாரிடம் வந்து தங்கினார். வெளிநாட்டுப் பயணத்திற்கான வரைமுறைகளை செய்து முடித்தார். சூர செட்டியாரும் ஒரு பாபா பக்தர் தான்!  கஸ்டம்ஸ் ஆபீஸ் செல்லும் போது வெறும் 200 ரூபாய் மட்டுமே அவரிடம் இருந்தது. பர்மா செல்ல டிக்கெட்டுக்கான பணம் அதுவும் தொலைந்து விட்டது. பட்டாபி அதிர்ச்சியாகி விட்டார். அதற்காக பயணத்தை ரத்து செய்ய விரும்பாத பட்டாபி, மீண்டும் சூர செட்டியாரிடம்  பணம் வாங்கிச் செல்ல வந்தார். 

வீட்டில் செட்டியார் ஒரு கடிதத்தை பட்டாபியிடம் கொடுத்தார், கடிதத்தின் மேல் இருந்த கையெழுத்தைப் பார்த்து பட்டாபி அதிர்ச்சியானர்.  அது  பாபாவின் அழகான கையெழுத்து! நெஞ்சு துடிக்க, கடிதத்தைப் பிரித்து பார்த்து படித்தார்.


    “அன்புள்ள பட்டாபி, என் வார்த்தைகளைக் கேள்! வீட்டிற்குத் திரும்பிச் செல். மீண்டும் வீட்டிற்கே போய் விடு, உன் நலத்திற்காகத்தான் கூறுகிறேன், வீட்டிற்குத் திரும்பிச் செல்” –பாபா.

பட்டாபி உணர்ச்சிகள் மேலிட ஸ்தம்பித்து விட்டார். பர்மா செல்ல வேண்டுமென்ற ஆவல் மறைந்து விட்டது,  ஆனால் உணர்ச்சிகள் உந்த,  வீட்டிற்கு செல்லாமல் புட்டபர்த்திக்குச் சென்றார். ஆனால் பர்த்தியில் பாபா இவரை ஏறெடுத்து கூட பார்க்க வில்லை!. 3 நாட்கள் அங்கு தங்கிய பிறகு பாபாவிற்கு தன்னை அவரது திருவடிகளில் ஏற்றுக் கொள்ளுமாறு கூறி,  கடிதம் எழுதி பாபாவின் அறை அருகில் வைத்து விட்டு சென்றுவிட்டார்.   அவர் தற்கொலை செய்து கொள்ள தயார் ஆகிவிட்டார்.

சித்ராவதி நதிக்குச் செல்லும் வழியில், ஒரு திறந்த கிணறு உண்டு. அவர் அந்த கிணற்றின் விளிம்பிற்குச் சென்று, 3 முறை 'ஸாயிராம்' என கூறி விட்டு கிணற்றில் குதித்தார். ஒரு க்ஷணத்தில் அவரை வேகமாக பின்னுக்கு இழுத்து, ஒரு இரும்புக்கரம் ஒரு அறைக்குள் அவரைத் தள்ளியது!.  


அவர் எழுந்திருந்த பொழுது அவர் “பாத மந்திரில்” (சாயி பகவானின் பழைய மந்திர் இன் பெயர்) இருப்பதை உணர்ந்தார் பாபா ஒன்றுமே நடக்காதது போல் அமைதியாகத் தூங்கிக் கொண்டு இருந்தார், பட்டாபி கைகளை பாபாவின் கட்டில் மேல் வைத்துக்  கொண்டு தூங்கியே போய் விட்டார். பாபா காலை 5 மணிக்கு எழுந்தார் பட்டாபியை  வீட்டிற்குத் திரும்பிப் போகச் சொன்னார். வீட்டிற்குச் சென்ற  பிறகு, தான் பயந்த  அளவிற்கு  நிலைமை  மோசமாக இல்லை என்பதைக்  கண்டு  கொண்டார்!.

ஆதாரம்: BABA SATHYA SAI, PART 1, PAGE NO 236
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக