தலைப்பு

வியாழன், 2 ஜனவரி, 2020

'ராமாயணத்தில் மகளிர்!' - சாயி பார்வையில்


அவதார ராமாயணத்தை கலியுக அவதாரமே விவரிக்கும் போது இதோ ஆன்மீக ராமாயணமாகிறது! பகவத் ராமாயணத்தை இறைவன் பாபாவே விவரிப்பதால் மட்டுமே அது பரவச ராமாயணமாக திகழ்கிறது... திரேதாயுகத்தில் வாழ்ந்த அதே பரப்பிரம்மம் ஸ்ரீ சத்ய சாயியாய் கலியிலும் வாழ்வதில் ஸ்ரீமத் ராமாயணம் ஸ்ரீ சாயி ராமாயணமாய் உயிர்ப்பிக்கிறது! அதிலும் சுவாமி அருள்கிற மகளிர்க்கான போதனை ஞானமாய் திருவிளக்கு ஏற்றுகிறது இல்லத்தரசிகளின் இதயத்தில் இதோ..

மக்களின் நல் வாழ்வும் வளர்ச்சியும் ராமாயணத்தின் முக்கிய நோக்கங்கள்  ஆகும். ராமாயணத்தில் வரும் ஒவ்வொரு பெண் கதாபாத்திரங்களும் இந்த  குறிக்கோளை மாறுபட்ட வடிவங்களில் அடிப்படையாக கொண்டவை.

மன்னர் தசரதனுக்கு கௌசல்யா, சுமித்ரா, கைகேயி என மூன்று மனைவிகள்.  அவர்கள் மூவரும் சகோதரிகள் போல மிக நெருக்கமானவர்கள். அவர்கள்  மூவருமே தசரதனுக்கு குழந்தை வரம் கொடுத்து அவரின் விருப்பத்தை நிறைவேற்ற தசரதனை மணந்தவர்கள். வசிஷ்ட முனிவரின் ஆலோசனைப் படி  தசரதன் புத்ர காமேஷ்டி யாகம் செய்தார். யக்ஞப் பாயாசப் பிரசாதத்தை தனது  மூன்று மனைவிகளுக்கும் அளித்தார். தசரதன் தனது மனைவிகள் தலைக்கு  குளித்து விட்டு வந்தவுடன் பிரசாதத்தை எடுத்துக் கொள்ளுமாறு கூறினார். தசரதனின் இரண்டாவது மனைவியான சுமித்ரா பிரசாதம் உள்ள தங்க  கிண்ணத்தை கையில் வைத்துக் கொண்டு பின் வருமாறு யோசித்தார்.

"கௌசல்யை மூத்த ராணியாவார். அவருக்கு பிறக்கும் மகனே எதிர்கால ராஜா ஆவார். தசரதன் கைகேயிக்கு கொடுத்த வாக்கின் அடிபப்டையில் கைகேயிக்கு பிறக்கும் மகனுக்கு ராஜா ஆக வாய்ப்பு உள்ளது. எப்படி பார்த்தாலும், எனது  மகன் ராஜா ஆக வாய்ப்பு இல்லை. யார் ராஜா ஆகிறார்களோ அவருக்கு சேவை
செய்யும் வாய்ப்பு தான் என் மகனுக்கு கிடைக்கும்."

அவரது கையில் இருந்த பிரசாதத்தை ஒரு பருந்து தட்டி விட்டு, பிரசாதம் கீழே விழுந்தது. குல குரு வசிஷ்டருக்கும் தசரதனுக்கும் இது தெரிந்தால் ஏற்படும்  விளைவுகள் பற்றி அவர் அஞ்சினார், கௌசல்யாவும் கைகேயியும் அவருக்கு  ஆறுதல் கூறி தங்களின் பிரசாதத்தில் ஆளுக்கொரு பங்கை சுமித்ராவுக்கு  அளித்தனர்.

 கௌசல்யாவிற்கு ராமனும், கைகேயிக்கு பரதனும், சுமித்ராவிற்கு  லக்ஷ்மணன், சத்ருக்னன் என இரட்டையரும் பிறந்தனர். ராமரின் நிழலாக  லக்ஷ்மணரும், பரதனுடன் எப்போதும் சத்ருக்னரும் இருந்தனர். மூன்று ராணிகள்  இடையே எந்த கருத்து வேறுபாடும் இன்றி சகோதரிகள் போல் அன்பாக இருந்தனர். இது அவர்கள் உலகிற்கு உணர்த்திய பாடம் ஆகும்.

இவர்கள் மூவர் தவிர ராமாயணத்தில் நாம் சந்திக்கும் மற்ற மூன்று பெண்கள் தாடகை, அகல்யா மற்றும் சீதை. இவர்கள் மூவரும் மனிதர்களின் மூன்று  பண்புகளை உணர்த்துபவை. தாடகை தமோ குணத்திற்கு எடுத்துக்  காட்டாகவும்,  அகல்யை ரஜோ குணத்திற்கு எடுத்துக் காட்டாகவும், சீதை  சத்வ குணத்திற்கு எடுத்துக் கட்டாகவும் விளங்கினர். தமோ குணத்தை  அழித்ததை தாடகை ராமரால் கொல்லப் பட்டதை கூறலாம்.
பொல்லாத ராக்ஷ்ச இயல்பு கொண்டது தமோ குணம்.

அகல்யை கௌதம முனிவரின் மனைவி. அடிபணியாமை, ஆத்திரம்  கொள்ளுதல், உணர்ச்சி வசப்படுதல் ஆகியவை ரஜோ குணத்தின் இயல்பு.  அகல்யை கௌதமரின் வாக்கிற்கு கட்டுப்படவில்லை. எனவே சாபத்திற்கு  உள்ளானாள். ராமர் அவளது ரஜோ குணத்தை அழித்து அவளுக்கு சாப  விமோசனம் கொடுத்தார். கல்லாக சாபமேற்ற அகல்யைக்கு ராமர் பாதம்  பட்டவுடன் சாப விமோசனம் கிடைத்தது.

பக்தி, இளகிய மனது, அமைதி போன்ற நல்ல இயல்புகள் கொண்டவர் சத்வ  குணம் கொண்டவர்கள். சத்வ குணம் கொண்ட சீதையை ராமன் மணந்து  கொண்டார்.

'ஸ்திரீ' என்ற வார்த்தையில் மூன்று எழுத்துக்கள் உள்ளன. அவை ஸ, த, ரி  ஆகும்.

என்பது ஸத்வ குணம். (இது அமைதி, பொறுத்துப் போதல், இரக்கம், போன்றவை) 

என்பது தமோ குணம். (உணர்ச்சிக்கு ஆட்படுதல்,  தயாளம், குடும்பத்திற்காக தியாகம் செய்தல்  போன்றவை)

ரி என்பது ரஜோ குணம். (வெட்கப் படுதல், தயக்கம் போன்றவை)

ஒவ்வொரு பெண்ணிடமும் இந்த மூன்று குணங்களும் இருக்கும். இந்த செய்தியை ராமாயணம் பெண் பாத்திரங்கள் மூலம் காட்டுகிறது.

மூலம்: வேதங்களும் பாபாவும்- பகவான் ஸ்ரீ சத்ய சாயி விளக்கம்
தமிழாக்கம்:  Prof N.P. ஹரிஹரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக