தலைப்பு

வியாழன், 30 ஜனவரி, 2020

பானு பாயின் கண் நோய் குணப்படுத்தப்பட்டது!


தவறுகள் நிறைந்த மனித சமூகத்தினரிடையே எல்லையற்ற கருணை கொண்ட பாபா எவறுடைய பலஹீனத்தையும் தவறையும் நேரிடையாக குத்திக்காட்டமாட்டார்.   யாரைத் திருத்த வேண்டும் என நினைக்கிறரோ அவர்களுக்கு ஒரு குறிப்பின்  மூலமோ, எப்படியோ, செய்தி அவர்களுக்கு சென்று சேருமாறு அருள் புரிவார்.   

இத்தகைய அன்பு தான் USAயில் இருக்கும் திரு. பானு பாய் படேல் அவர்கள் மீது பொழியப்பட்டது. இத்தனைக்கும் அவர் ஸாயி பக்தர் அல்ல! அவரது சகோதரர் UKயில் இருப்பவர் – திரு ப்ரகாஷ் பாய் அவர்கள் தான் பாபாவின் பக்தர்.  திரு. ப்ரகாஷ்  டாக்டர். காதியா குழுவினருடன் புட்டபர்த்தி செல்ல இருந்தார். 

இதற்கிடையில், பானுபாய்க்கு கண்ணில் ஒரு மோசமான கோளாறு ஏற்பட்டு, டாக்டர்கள் 1 மாதத்திற்குள் அறுவை சிகிச்சை  செய்யாவிட்டால் இன்னும் கோளாறுகள் ஏற்பட்டு விடும் என்றனர். ஆனால் USAயில் வைத்யம் செய்த கொள்ள செலவு அதிகம், கட்டுபடி ஆகாது.   எனவே இந்தியா சென்று அறுவை   சிகிச்சை செய்து கொள்வது ஒன்றே ஒரே வழியாக இருந்தது.

அவரது சகோதரர் ப்ரகாஷ், பானுபாயின் நிலையை அறிந்து தன்னுடன் புட்டபர்த்தி வந்து விட்டு, பிறகு கண் டாக்டரைப் பார்க்கலாம் என கூறினார், மேலும் ப்ரகாஷ்பாய், பானுபாயிக்கு விருப்பம் இல்லாவிடில் தர்ஷனுக்கு வர வேண்டாம், அறையிலேயே தங்கிக் கொள்ளலாம் என்றும் சொன்னார். எப்படியாவது பர்த்திக்கு தன் சகோதரனை வரவழைத்து பாபாவின் தாமரைப் பாதங்களைப் பார்க்க வைத்து விட வேண்டும் என்பதே ப்ரகாஷ்பாயின் நோக்கம்!.

கடைசியில் பானுபாயும், புட்டபர்த்தி  செல்லும் குழுவோடு இணைந்து கொண்டு விட்டார். ஆயிரக்கணக்கான  பக்தர்கள், உலகின் பல பாகங்களில் இருந்தும் வந்து குவிவதைப் பார்த்து, மிகுந்த ஆர்வம் காரணமாக,  தர்ஷன் சமயத்தில், ஹாலின் கடைசி பின் பகுதியில் அமைதியாக உட்கார முடிவு செய்தார். முதல் தர்ஷனிலேயே மிகவும் ஈர்க்கப்பட்டு தொடர்ந்து தினமும் வர ஆரம்பித்தார். சில நாட்கள் சென்றதும், Dr காதியா குழுவிற்கு நேர்காணலுக்கு அழைப்பு வந்தது,    முதலில் பாபா பொதுவாகப் பேசினார்,  பிறகு பானுபாயின் பக்கம் திரும்பி ,  “எப்படி இருக்கிறாய்”  என வினவே , “நலமாக இருக்கிறேன்”, “இல்லை நீ நலமாக இல்லை.  3 கெட்ட பழக்கங்களை நீ விட்டு விட வேண்டும்” என்றார்.

 பாபா குறிப்பில் உணர்த்தியதை பானுபாய் புரிந்து கொண்டார்.   ஒவ்வொருவரும் போட்டோக்கள் எடுத்துக் கொண்டார்,  ஒவ்வொருக்கும் மகிழ்ச்சி!  தனித்தனியே  பாபாவுடன் ஃபோட்டோ எடுத்துக்  கொண்டதில்.

ப்ரகாஷ்பாயும், பானுபாயும் தங்கள் குடும்பத்தினருடன் பரோடா சென்றனர்.   அங்கே கண் டாக்டரிடம் கலந்தாலோசித்னர், USAயில் டாக்டர்கள் கொடுத்த சோதனை குறிப்புகளைப் பார்த்தனர். ஆனால் அவருடைய கண்கள் முற்றிலும் நன்றாக உள்ளன என்றனர்!.

பானுபாய், பாபவின் கருணை தான் தன் கண்களைக் குணபடுத்தியது என்பதை உணர்ந்தார். நன்றி தெரிவிக்கும் முகமாக பாபாவின் கட்டளைகளை ஏற்று புகைத்தல், மது அருந்துதல், மாமிசம் உண்ணுதல் மூன்றையும் விட்டு விட்டார்! பாபாவின் அன்பு அவரை மாற்றி, புனிதராக்கி விட்டது.

ஆதாரம்: Sai Smaran, Page no 281                                                                                                                                   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக