தலைப்பு

செவ்வாய், 14 ஜனவரி, 2020

❌ வெள்ளைச் சர்க்கரை வேண்டவே வேண்டாம்! - சத்ய சாயி பகவானின் தெய்வீக அருளுரை


சில வெளிநாடுகள் அணு ஆயுதப் பரிசோதனைகளைக் கடலிலும், விண்வெளியிலும், தரையிலும் நடத்தியுள்ளன. இதனால் காற்று மண்டலம் முழுவதும்நஞ்சு நிறைந்துவிட்டது. புல், பூண்டுகள் மேற்கண்ட பரிசோதனைகளால் நஞ்சு நிறைந்தவையாகிவிட்டன. பசுக்கள் இந்தப்புல்லைத் தின்கின்றன. பால் கெட்டு, நஞ்சுள்ளதாகிறது. வெண்ணெய், நஞ்சு நிறைந்ததாகிறது. பசுக்களுக்கும் கேன்சரும், இதய நோய்களும் வருகின்றன.

சில மருத்துவர் புகைப்பிடிப்பது கேன்சருக்கு காரணம் என்கிறார்கள்.உண்மையில் புகைபிடிப்பது காசநோய்க்கு(TUBERCULOSIS) காரணமாகிறது. புகைப் பிடிக்காதவர்களுக்கும் கேன்சர் நோய் வருகிறது. சமீபத்தில் ஒரு புகழ்பெற்ற ஞானி புற்று நோயால் அவதிப்பட்டார். ஏனெனில் தினமும் அவர் 10 அல்லது 15 கோப்பைத் தண்ணீர் சர்க்கரை கலந்து குடித்தார். வெண்மை நிறம் பெற, எலும்பு மஜ்ஜை சர்க்கரையுடன் சேர்க்கப்படுகிறது.


நீரிழிவு நோயாளிகள் சர்க்கரைக்குப் பதிலாக 'சாக்ரின்'(saccharin) பயன்படுத்துகிறார்கள். இது செயற்கைச்சத்து.செயற்கைச் சத்துக்களெல்லாம் கெடுதலைத் தருபவை. நீரிழிவு நோயாளிகள் மன உறுதியுடன் சாக்கரின், சர்க்கரை இரண்டையும் பயன்படுத்தாமலிருப்பது நல்லது. கடந்த 60 வருடங்களாக நான் இனிப்புப் பண்டங்களை தொட்டதில்லை. மனிதனுக்கு இயற்கை உணவு மிகச் சிறந்தது. அரிசியின் மெல்லிய மேற்புறத்தில் வைட்டமின்கள் இருக்கின்றன. சிலர் அரிசி பாலிஷ் செய்கிறார்கள்.மெல்லிய மேற்பாளம் அரிசியிலிருந்து வெளிவருகிறது. வைட்டமின் எதுவுமில்லாத அத்தகைய அரிசியை உட்கொள்கிறார்கள். கிராமத்தில் மக்கள் கைக்குத்தல் அரிசியை உட்கொள்கிறார்கள். அவற்றில் வைட்டமின்கள் இருக்கின்றன. இயற்கை உணவை உட்கொள்வதால் இரத்தம் ஆரோக்கியமாகவும் தூயதாகவும் இருக்கிறது. செயற்கை உணவின் காரணமாக, ரத்தத்திலுள்ள கலவை விகிதம் மாறுகிறது. சில சமயங்களில் மக்கள் நிறக்குருடை (colour blindness) அடைகிறார்கள்.
               
ஆதாரம்: சாயி அருளமுதம் கொடை -1994
(தொகுக்கப்பட்ட அருளுரைகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக