தலைப்பு

செவ்வாய், 14 ஜனவரி, 2020

🇧🇪 பெல்ஜிய நாட்டு இளவரசி ஆஸ்ட்ரிட்னின் மெய்சிலிர்க்கும் சாயி அனுபவங்கள்!


நித்தமும் இயேசுவை வணங்கி வந்த  பெல்ஜிய நாட்டு இளவரசி ஆஸ்ட்ரிட்னின்  வாழ்வில் பாபா எவ்வாறு நுழைந்தார் என்பதைப் பற்றியும் மேலும் பாபாவை நம்பாமல் கேலி செய்த இளவரசியின் மூத்த மகனான அம்மிடியோவுக்கு பாபா  தன்னுடைய அற்புதத்தால் எவ்வாறு பாடம் புகுத்தினார்  என்பதனை பற்றிதான் இந்த பதிவில் நீங்கள் வாசிக்க இருக்கிறீர்கள்...

பெல்ஜியம்  நாட்டு இளவரசி ஆஸ்ட்ரிட் ஜோசபின் சிறுவயதிலிருந்தே ஒரு கிறிஸ்துவர்... அவர் எப்போதுமே தன் கடமையை சரிவர செய்து வருபவர். பகவான் பாபா அவர்களிடம் பிற்பாடு  இதுவே தர்மம் என சொல்லி இருக்கிறார். அடிக்கடி பாபா அவர்களின் கனவில் தோன்றி புட்டபர்த்திக்கு வருமாறு அழைப்பு விடுத்தும், இளவரசியோ பகவான் பாபாவிடம் செல்வது தான் மேற்கொண்ட கிறிஸ்துவ நம்பிக்கைக்கு எதிரானது என நினைத்து தயங்கியபடியே செல்லாமல் இருந்தார். அவர்கள் இந்தியாவில் இருந்து வெகு தொலைவில் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்தார்.
இங்கே வருவதற்கான வாய்ப்பே இல்லாமல் இருந்தது. ஒருமுறை இளவரசியின் தோழி அவர்களை சந்திக்க வருகிறார். இருவரும் உலாவும்போது தான் இந்தியாவுக்கு சென்றதாகவும், இங்கே இருக்கின்ற ஒரு ஆன்மீக மகானை குருவாக ஏற்றுக்கொண்டதாகவும் தோழி சொல்கிறார். அதைக்கேட்டு இளவரசி சாய்பாபா என்ற ஒருவர் புட்டபர்த்தியில் இருக்கிறார், அவரை கேள்விப்பட்டிருக்கிறாயா என இளவரசி கேட்கையில் அவரது தோழி மிகவும் ஆச்சரியப்பட்டு தான் அவரைப் பற்றி தான் சொல்ல வந்ததாகவும் தன் குரு அவரே எனவும் சொல்கிறார். பகவான் பாபாவின்புகைப்படம் ஒன்றை காட்டுகிறார். தன் கனவிலும் வந்தவர் இவரே என தெளிவுபடுத்தி அவரைச் சந்திக்க வரச் சொன்ன சம்பவம் குறித்தும் இளவரசி யோசித்து, எதை நோக்கி நகர்தல் என புரியாமல் மௌனத்தில் உறைகிறார்.

ஒரு வாரம் கழித்து அந்த தோழி இந்தியா புறப்பட்டார். தோழியோடு இளவரசியும் மிகவும் ஆர்வமாக பகவானை சந்திக்க புறப்பட்டார். பயண வழி எல்லாம் பகவானைப் பற்றிய  பேச்சே!!! பகவானின் மகிமைகளை தோழி எடுத்துரைத்தார். புட்டபர்த்தி யை நெருங்க நெருங்க இதயம் இளவரசிக்கு படபடத்தது. யார் சாய் பாபா? இவருக்கு நம்மைப் பற்றி எப்படி தெரியும் ?என மனம் ஆச்சரிய வினாவை சுமந்தது.


புட்டபர்த்திக்கு வந்து இறங்கிய முதல் தன் புறப்பாடு க்கு எவ்வித முன்னேற்பாடு இன்றியும்கூட தன் பெல்ஜியம் நாட்டு வெளியுறவுத்துறை அறிவிப்பாலும், தன்தேசம் செல்லும்வரை இளவரசியோ விருந்தினர் மாளிவாஸம் செய்தார். அடுத்த நாள் காலை குல்வந்த் ஹாலில் பகவானுக்காக காத்திருந்தார். காற்று முழுவதும் பஜனை வாத்திய இசை முழங்க மெதுமெதுவாய் சிவந்த சூரியனாய் சிரித்த வண்ணம் அசைந்தார் பகவான். மகிளாஸ் குழுவின் நடுவிலே வந்து ஒருவரிடம் பேச பக்கத்தில் இருந்த இளவரசி  பகவானின் காலில் சடாரென விழுந்தார். விழுந்த இளவரசியின் தலை மேல் கை வைத்து ஆக வந்து விட்டாய் என்று சொல்லி நேர்காணல் அறைக்கு இளவரசியையும் அவரது தோழியையும் அழைத்தார். இன்னும் அருகில் வர சொன்னார் பகவான். வந்தவுடன் கைகளை வேகமாக அசைத்து இரண்டு மெடல்களை வரவழைத்தார். ஒன்றில் இயேசு  சிலுவையில் அறைந்து இருக்கும் உருவத்தை தோழிக்கும் இன்னொன்றை இயேசுவின் மார்பளவு உருவத்தை தாங்கிய மெடலை இளவரசிக்கும் அளித்தார்.

வெற்று காற்றில் தெய்வீகமா என வியப்பதற்குள்
பகவான் பேசினார் இளவரசியிடம். இயேசுவின் மேல் மிகப் பிரியம் உள்ளவள் சிறு வயதில்.. jesus of nazareth  என்ற திரைப்படம் பார்க்கையில் இயேசுவை சிலுவையில் அறையும் போது கதறி அழுதாய்.. இரண்டு நாளும் வீட்டில் துக்கமாய் இருந்தாய் அதனால்தான் உனக்கு மட்டும் இயேசுவினுடைய மார்பளவு  மெடலை வழங்கினேன்... நீ அழுவதை நான் விரும்பவில்லை என்றார்.


தனக்கு மட்டும் தெரிந்த சிறுவயது சம்பவங்களை எப்படி பகவான் பாபா அறிந்து வைத்திருக்கிறார் என்று யோசிக்கையில், பகவானிடம் கனவில் நீங்கள் வந்தது வெறும் கற்பனை என்றும் பிரம்மை என்றும் நினைத்தேன்.. ஆனால் நீங்கள் அனைத்தும்  அறிந்திருக்கிறீர்கள் என்று இளவரசி கூறியவுடன் பகவானும் நீ நல்ல இதயம் கொண்டவள், என்ற காரணத்தினாலே உன்னை இங்கு வரவழைத்தேன் மேலும் இயேசுவின் மீது நீ மிகுந்த அன்பும் உன் கடமையையும்  தவறாது செய்து வருவதாலும்.... அந்தக் காரணத்தினால்தான் என்று.... வேற என்ன வேண்டும் கேள் என்றார்.

அப்போது தன் மனதில் குழந்தைகள் பற்றிய எண்ணமும் அவர்கள் ஹார்வேர்டில் படிப்பதும் இருவருக்கும் இயேசுவின் மீது நம்பிக்கை இல்லாத தன்மையும் மனதில் தோன்றியது. அதை தயங்கியபடி சொல்வதற்குள் பகவானே  ஹார்வர்டில் படிக்கும் உன் இரண்டு மகன்களுக்கு இயேசு மீது நம்பிக்கை இல்லை அதைத்தானே கேட்க வருகிறாய் என்று சொல்லவும், இன்று இரவு  அவர்களிடம் என்னைப் பற்றி தொலைபேசியில் பேசு என்று சொல்லி விடை அனுப்புகிறார்... நேர்காணல் முடிகிறது. பகவான் சொல்லியபடியே இளவரசி தன் மகன்களிடம் பேசுகிறார். இருவரும் உன் சாய்பாபாவை உன்னோடு வைத்துக் கொள் எங்களுக்கு எதுவும் தெரிந்து கொள்ள தேவையில்லை என்று தொலைபேசியை துண்டிக்கிறார்கள்.



மிகவும் வருத்தம் அடைகிறார் இளவரசி. அடுத்த நாள் காலை பகவான் தரிசனம் மீண்டும் நேர்காணல்.. பகவானிடம் நடந்ததை சொல்கையில்... கவலை வேண்டாம் அவர்களுக்கு ஒரு அனுபவம் நிகழ்த்துகிறேன், இன்று இரவு பேசு அவர்களிடம் என்று ஆணையிட்டு நகர்ந்தார். பேசுகிறார் இளவரசி.. மகன்களுக்கு அனுபவங்கள் மீது எந்த ஆர்வமும் இல்லை என்பதை உணர்ந்து மீண்டும் வருந்துகிறார். அடுத்த நாள் தரிசனம் பகவான் நடக்கிறார் .. இளவரசி அருகில் வரும்போது இன்று இரவு பேசு என்று மீண்டும் ஆணையிடுகிறார். போர் அனுபவம் அவர்களுக்காக காத்திருக்கிறது என்று சொல்லி செல்கிறார்.

அன்று இரவு பேசுவதற்கு அவர் தொலைபேசியை அழைக்கும் பொழுது ஒரு மிகுந்த அனுபவத்தை இரண்டு மகன்களும் சொல்ல, ஆச்சரியப்பட்டு அதை அடுத்த நாள், அனுபவங்களை சுமந்து தரிசனத்திற்கு வருகிறார். அடுத்த நாள் தரிசனம், பகவான் நடக்கிறார்... இளவரசி அருகில் வந்து ஆரஞ்சு வெளிச்சம் கண்டார்களா என்று கேட்க ,இளவரசியோ பகவானின் கண்களை ஆழமாக பார்த்து புன்னகைத்து தலையாட்டினார். தொலைபேசியில் நடந்த அனுபவம் சொல்ல இரு மகன்களும் மிகுந்த ஆச்சரியத்துடனும்  ஹார்வர்ட் மாணவர்கள் அனைவரும் பகவானை சந்திக்க ஆவலாய் உள்ளதையும் இளவரசி பகவானிடம் தெரிவிக்க அவர்களை நான் விரைவில் அழைக்கிறேன்  என்கிறார் பகவான்.. அந்த அனுபவமானது  மிகுந்த அலாதியானது ஆரஞ்சு வெளிச்சமாய் இளவரசியின் மூத்த மகன் முன்பு தோன்றி இருக்கிறார் பகவான். பிரபஞ்ச ரகசியமான நாம் பகவானின் அந்த வெளிச்சத்தை அணுகும் ஆவலில் அதை நோக்கி முன் நகர்கிறார் இளவரசியின் மூத்த மகன் அந்த ஆரஞ்சு வெளிச்சமும் ஹாட் வேர்ட் முழுவதும் வட்டமிட்டு மாணவர்களிடையே தன்னுடைய சாந்நித்தியத்தை உணர்த்தி அங்கிருந்து மறைந்து விட்டது இளவரசியின் மகன் பாபாவை உணர்ந்தபடி மிகுந்த ஆர்வத்துடனும் சந்தோஷத்துடனும் இளவரசியிடம் பகிர்ந்ததை எல்லாம் இளவரசி மிகுந்த ஆழமான இதயத்தில் உணர்ந்து கொள்கிறார் அன்று இளவரசி புட்டபர்த்தியில் தங்கிய நாட்கள் மாணவர்களால் மறக்க முடியாது மிகுந்த குழப்பத்துடன் வந்தவர்கள் தெளிந்த ரசமாய் ஆன்மீக பரவசமாய் தன்னிறைவு பெற்ற தனிப்பெரும் பக்தையாய் இருந்து புறப்பட்டதில் முக வெளிச்சம் பகவானின் பாதத்தில் நன்றி தெரிவித்தது இன்னமும் எங்களால் மறக்க முடியாது.

Wikipedia:
Princess Astrid of Belgium, Archduchess of Austria-Este
Prince Amedeo of Belgium, Archduke of Austria-Este

Releated Articles: https://sathyasaiwithstudents.blogspot.com/2017/05/conversations-on-easwaramma-day-in.html
http://media.radiosai.org/journals/Vol_04/01JUL06/The_UNESCO_Story.htm
http://www.chakranews.com/sathya-sai-baba-the-divine-alchemist/1213

தமிழில் தொகுத்தளித்தவர்: கவிஞர்  வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக