தலைப்பு

வெள்ளி, 24 ஜனவரி, 2020

பணம் வேண்டாம். அன்பு ஒன்றே வேண்டும்!

பாபாவின் வாழ்விலிருந்து ஒரு சம்பவம். பேராசிரியர் திரு. அனில்குமார் அவர்கள் பகிர்ந்துகொண்ட சாயி அனுபவம்.

ஒருநாள் ஸ்வாமி ஒரு கத்தை கடிதங்களுடன் அமர்ந்திருந்தார். ஒரு குறிப்பிட்ட கடிதத்தை காண்பித்து, திரு. அனில்குமாரிடம் அதைப் பிரித்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார் என்றார். உள்ளே ரூ37,500 க்கு ஒரு செக் காசோலை இருந்தது. அது ஒரு பழைய மாணவன் அனுப்பியிருந்தான். 

தனது அன்பு மற்றும் நன்றிக்காக ஸ்வாமிக்கு தனது முதல் சம்பளத் தொகையை அனுப்பியிருந்தான். அதை அனுப்பிய மாணவனும் அன்று அங்கு வந்துள்ளான். ஆனால் பெயரைக் குறிப்பிட வேண்டாம். அவனுக்கு சங்கடமாகப் போய்விடும். ஏனெனில் இந்த சந்தர்ப்பத்தில் அவர் வெளியிட விரும்பிய கருத்து யாதெனில், பழைய மாணவர்களோ, ஆசிரியர்களோ இவ்வாறு பணம் அனுப்ப வேண்டாம். அவர்களுடைய அன்பு ஒன்றுதான் ஸ்வாமி விரும்புவது. அவர்களது பிறவியையே அவர்களுக்கு ஸ்வாமி பரிசாக அளித்திருப்பதாகவும், அதையே திரும்ப பரிசாக தனக்கு தந்து விடுவதே ஸ்வாமி விரும்புவதாகவும் கூறினார். (பயனுள்ள பிறவி என்ற வாழ்க்கை வாழ்ந்து காட்ட வேண்டும்) வேறு எதுவுமே வேண்டாம்" எனக்கூறி அந்த காசோலையை துண்டு துண்டாக கிழித்து எறிந்து விட்டார். உலகிலுள்ள பல குருமார்கள் ஆன்மீக சொற்பொழிவிற்காக பணம் வசூலிக்கின்றனர். ஆனால் பிரசாந்தி நிலையத்தில் பகவான் சத்ய சாயி என்ற ஒரே கடவுள்தான். அவருக்குப் பணம் வேண்டாம். அன்பு ஒன்றே வேண்டும்" என்றார்.

ஆதாரம்: Prof.Anil Kumar - Gems of Sai,Story No:65

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக