தலைப்பு

திங்கள், 20 ஜனவரி, 2020

ஆன்மிகத்தை விட ஒருசில மக்கள் சடங்கு சம்பிரதாயங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்!

பாபாவின் வாழ்விலிருந்து ஒரு சம்பவம்! 

ஏகாதசி விரதத்தைப் பற்றி நடந்த நிகழ்ச்சி ஒன்று:

இது பல வருடங்களுக்கு முன் NVP திரு.N. ரமணி அவர்களால் பகிர்ந்து கொண்டது. ஒரு சமயம் ஸ்வாமி அவர்கள் ப்ருந்தாவனத்தில் தங்கியிருந்தார். அப்பொழுது ஒரு பெரியவர் ஸ்வாமியை பார்க்க வந்திருந்தார். வந்திருந்தவர் ஜோதிஷம்,நாடி ஜோதிஷம் என்று பல ஸாஸ்திரங்களை அறிந்தவர். வந்தவர் ஸ்வாமியிடம் தங்களுக்கு தான் நாடி ஜோதிஷம் பார்க்க விரும்புவதாகவும் தனியே அதைப்பற்றி கூறவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அப்பொழுது ஸ்வாமியின் அருகில் பலர் இருந்தனர். ஸ்வாமி வந்தவரிடம் பரவாயில்லை இங்கேயே கூறுங்கள் என்றார். வந்தவர் நாடி ஜோதிஷம் கூற ஆரம்பித்தார். முதலில் கூறினார், இந்த நாடி ஆரம்பிக்கும் பொழுது நாகத்திற்கு தலைவன் பெயர் கொண்டவர் அருகிலிருப்பார் என்றார். அப்பொழுது திரு.ரமணி அவர்களின் தகப்பனார் திரு.நாகராஜன் அவர்கள் அங்கு இருந்தார். இதைக் கூறியவுடன் ஸ்வாமி,அவரிடம் மிக்க சரி என்றார். அடுத்து வந்தவர் ஸ்வாமியிடம் இந்த நாடி படிக்கும்போது நூற்றுக் கணக்கான சக்கரங்கள் சுழலும் என்றார். அப்பொழுது அந்த சமயம் ஒரு ரயில் வண்டி அந்தப் பக்கம் கடந்து சென்றது. அதற்கும் ஸ்வாமி மிக்க சரி என்றார். பிறகு வந்தவர் ஸ்வாமியைப் பார்த்து நீங்கள்தான் சிவன்,ப்ரும்மா,விஷ்ணு, ஶ்ரீமன் நாராயணன் என்றெல்லாம் கூறினார். இவையெல்லாம் முடிந்த பிறகு ஸ்வாமி வந்தவரிடம் ஒரு வெள்ளி டம்ளரில் பால் கொடுத்து அதை குடிக்கும் படி கூறினார். வந்தவர் ஸ்வாமியிடம் இன்று ஏகாதசி,ஏகாதசியன்று எதுவும் உட்கொள்ளுவதில்லை என்று கூறி எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டார். பிறகு ஸ்வாமி வந்தவரை விடை கொடுத்து அனுப்பிவிட்டார்.

வந்தவர் சென்ற பிறகு அங்கிருந்த மற்றவர்களிடம் ஏகாதசி விரதம் என்றால் என்ன என்று கேட்டார். யாரும் பதில் கூறவில்லை. பிறகு ஸ்வாமி கூறினார்,பகவானை தரிசிப்பதற்காக ஏகாதசியன்று உபவாசமிருந்து மறுநாள் த்வாதசியன்று பகவானை தரிசனம் செய்து உபவாசத்தினை முடிப்பர். வந்தவர் என்னைப் பார்த்து நீங்கள்தான் விஷ்ணு, நாராயணன் என்றெல்லாம் கூறினார். நான் என் கையால் பால் கொடுத்து அதை அருந்தி விரதத்தை முடிக்க நினைத்தேன் ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் மறுத்து விட்டார். Peoples are more ritual than spiritual என்று ஸ்வாமி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக