தலைப்பு

வெள்ளி, 3 ஜனவரி, 2020

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் திரு.ரத்தன் டாடா பகவான் பாபாவை தரிசனம் செய்தபோது!

 “உங்கள் மீது யாரேனும் கற்கள் வீசினால், அதைக் கொண்டு கட்டடம் எழுப்புங்கள்!" - இதைச் சொல்லியவர் இந்தியாவில் மட்டுமே காலூன்றியிருந்த ஒரு வியாபார குழுமத்தை உலகெங்கும் எழுப்பி, அக்குழுமத்தையே உலக சந்தையில் இந்தியாவின் அடையாளமாய் மாற்றிய ரத்தன் நாவல் டாடா. நம் உணவில் உப்பாய், தேநீராய், நம் கையில் கடிகாரமாய், நம் செல்போனில் சிம் கார்டாய், நம் வீட்டுத் தூணில் இரும்பாய், நாம் பயணிக்கும் காராய், நம் டிவியில் டி.டி.எச்சாய், நாம் அணியும் நகையாய் ஒவ்வொரு இடத்திலும் கால் ஊன்றி தடம் பதித்த டாடா சன்ஸின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவின் சாயி அனுபவங்களை இந்த பதிவில் பார்க்கலாம். 

ஒருவர் செல்வம் பல பெற்றவராயினும் உயர் பதவி வகிப்பவராயினும் பணிவு என்கிற நற்குணம் இருந்தால் மட்டுமே இறை அருளையும் , சக மனிதர்களின் மதிப்பையும் பெற இயலும் இந்த வகையில் திரு.ரத்தன் டாடா அவர்களின் நற்குண மாண்பு அவரை மனித நேயம் மிக்க ஒரு சிறந்த தொழில் அதிபராக மிளிர வைக்கிறது.

இதயத்தில் உள்ள மாசுகளை ஈசன் நாமாவளியால் நன்கு சுத்தம் செய்தால்
பாபா என்னும் காந்தம் அதை ஈர்க்கிறது.

இப்படித்தான் பல பிரமுகர்களும் பக்தர்களும் பாபாவால் ஈர்க்கப்பட்டு ஆசீர்வதிக்க ப் பட்டுள்ளனர். அவர்களளுக்கு பாபா உரிய மதிப்பளித்து சிறப்பு வசதிகள் செய்தது அவர்களின் பிரபலத்தை கண்டு அல்ல. விருந்தினர்களை எப்படி உபசரிக்க வேண்டும் என்ற பாடத்தை நமக்கு கற்பிக்கத்தான். வேத நாயகன் பாபாவே நம்மை இப்படி உபசரிக்கும் போது , நாமும் மக்களை இவ்வாறு நடத்தவேண்டும் என்று அந்த பிரபலங்களுக்கு உணர்த்த
பாபா நடத்துவது இந்த வழிகாட்டுதல்.

இனி திரு.ரத்தன் டாடா அவர்கள் பாபாவைச் சந்தித்தபோது.. 


அது சாயி தினமான வியாழக்கிழமை 2009 டிசம்பர் மாதம் ஒன்பதாம் நாள். பாபாவின் ஆசிபெற டாடா அவர்கள் பிரசாந்தி நிலையம் வருகை தந்தார். அவ்வமயம் சத்யசாயி பல்கலை கழக மாணவர்களின் நாடக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அது பல்கலைக்கழக கலை அரங்கில் நடைபெற்றது.

பாபாவின் பிரியமான மாணவர்களின் மீது பாபா பொழிந்த அன்பு

நிகழ்ச்சி முடிந்த உடன் பாபா டாடா அவர்களை மேடைக்கு அழைத்து நாடகக்குழு மாணவர்களை அறிமுகம் செய்து வைத்தார். பிறகு சில மாணவர்களை அழைத்து சில பஜன் பாடல்களை பாடச் சொன்னார். அனைவருக்கும் அன்புப்பரிசாக கைக்கடியாரங்களை வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் பாபாவின் உரை...

பாவம் ராகம் தாளம் என்பதின் சேர்க்கையே பாரதம். இதில் பாவம்( உணர்வு) முக்கியமான அம்சம்.அதனால் என் மாணவர்கள் உணர்வுடன் கிராமங்களுக்கு சென்று  சேவை புரிய வேண்டும். தற்போதுள்ள மாசுற்ற சூழலை நீக்கி உலகை என் மாணவர்கள் தூய்மை செய்வர். இதுவே அவர்கள் எனக்கு ஆற்றும் கைமாறு.



விழா முடிந்ததும் திரு டாடா அவர்கள் பாபாவுடன் சேர்ந்து காரில் பயணிக்கும் பேறு பெற்றார். அவருடன் வந்திருந்த திரு.வெங்கடரமணன்( பாபா கல்லூரியின் முன்னாள் மாணவர்.. அப்போது திரு டாடாவின் செயல்துறை அலுவலர்) மற்றும் திரு.கிருஷ்ணகுமார் ( டாடா சன் நிறுவனத்தின் இயக்குனர்) அவர்களுக்கு பாபா பிரத்யேக பேட்டி அளித்து அருளினார்.

சாயி பகவானுடன் ரத்தன் டாடா, R.K. கிருஷ்ண குமார் மற்றும் ஆர்.வெங்கடரமணன் பிரசாந்தி நிலைய மந்திரில்.. 

பணியுமாம் என்றும் பெருமை:

மேன் மக்கள் என்றுமே 'பணிவு' என்ற நற்குணம் நிரம்பியவர்கள். கதிர் முற்றிய நெல்மணி தலை சாய்ந்திருக்கும். பழ மரங்களின் கிளைகளும் அவ்வாறே அல்லவா.

பாபாவின் 85வது(2010) பிறந்தநாள். வழக்கம்போல வெகு விமரிசையாக நடைபெற்ற நேரம் பங்கேற்ற லட்சக்கணக்கான பக்தர்களில் திரு.ரத்தன் டாடாவும் ஒருவர்.


பாபா தமது மெர்சிடஸ் காரை திரு. டாடாவின் உபயோகத்திற்காக அனுப்பி வைத்தார். ஐயன் அமர்ந்த வாகனத்தில் அடியேனா என்று டாடா மனம் உருகினார் போலும். காரில் ஏறும்முன் தனது காலணிகளை கழற்றி காரின் லக்கேஜ் பகுதியில் வைத்துவிட்டு வெறுங்காலுடன் அமர்ந்தார்.

கார் அவருக்கு ஒதுக்கப்பட்ட சாந்திபவன் என்கிற பிரபலங்கள் தங்கும் விடுதி சென்றடைந்தது. இறங்கிய திரு ரத்தன் டாடா.... பகவானின் காரை நமஸ்கரித்தபின்... காலணிகளை தானே
ஏந்தி விடுதிக்குள் நுழைய முற்பட்டார். ஓடி வந்த சேவா தளத் தொண்டர்கள்  'நீங்கள் உள்ளே செல்லுங்கள். நாங்கள் உங்கள் காலணிகளை எடுத்து வருகிறோம்' என்று கூறினர்.


திரு. டாடா அவர்கள் அதை மறுத்து "Apnaa Kaam Khud Karnaa Chahiye" (அவரவர் வேலைகளை அவர்களே செய்ய வேண்டும்) என்று கூறியவாறே விடுதிக்குள் சென்றார்.

பணிவும் , பக்தியும் ஒருவரை இறைவனுக்கு அருகில் அழைத்துச் செல்லும்.
பகட்டும் ஆடம்பரமும் அல்ல என்பதை இச்சம்பவம் விளக்குகிறது.
தொடரும்.. 

Source: Sri Sathya Sai Digvijayam (2006 – 2011)

மொழிமாற்றம்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக