தலைப்பு

திங்கள், 27 ஜனவரி, 2020

எனக்கு பிடிக்காதவர் இதயத்திலும் சுவாமி இருக்கிறார் என்பதை நான் எப்படி ஒத்துக்கொள்ள முடியும்?


ஹிஸ்லாப்: நம் மனதிற்குப் பிடிக்காத, நம்மால் ஒத்துக்கொள்ள முடியாத மக்களிலும் இறைவனைக் காண்பதற்கான, கைவந்த கலை என்ன?

பாபா: விரும்பத்தகாத குணமுள்ள மனிதர்கள் இதயத்திலும் கூட, இறைவன் இருப்பதை கண்டுகொள். இந்த உண்மையை மனத்திற்கொண்டு உனது முழுத் திறமைக்கும் உகந்த வகையில், அந்தக் கோணத்திலேயே அம்மனிதனை அணுகவும்.

காலக்கிரமத்தில் அம்மனிதன் இளகுவான்; அவனுடைய இயற்கை குணமும் மாறுதலடையும்.ஒருவன் ஒரு நபரை நல்லவனாகவோ, தீயவனாகவோ பார்ப்பது எதனால் என்றால் அவன் அந்நபரை முழுமையாக பார்க்காததாலும், அவரின் ஒரு பக்கத்தை மட்டிலுமே பார்ப்பதினாலுமே. ஒரு தாய் ஆறடி உயரம் இருப்பதாகவும், அவளுடைய சிறு குழந்தை நடக்க பழகாமல், தரையில் உட்கார மட்டுமே இயன்றதாகக் கொள்வோம். அந்தத் தாய் "நான் ஆறடி உயரம் உள்ளவள், நான் நிமிர்ந்து நிற்கிறேன். நான் இ
ந்தக் குழந்தைக்காக குனிந்துக் கொள்ள மாட்டேன்" என்று சொல்வாளா? அல்லது அக்குழந்தையின் மீதுள்ள அன்பின் காரணமாக, கீழே குனிந்து கொள்வாளா? மற்றொரு உதாரணம்; பல பட்டங்கள் வாங்கிய மனிதன் ஒருவன் சிறு குழந்தைகளுடன் இருக்கலாம்; தனக்கு படிப்பறிவு மிக அதிகம் என்பதற்காக அவன் அக்குழந்தைகளுக்கு உதவி செய்ய மறுப்பானா? அக்குழந்தைகள் அ,ஆ, இ,ஈ என்ற அக்ஷரங்கள் முதற்கொண்டு ஒப்புவித்து தங்கள் படிப்பை தொடங்க வேண்டும். அவர்களுடைய நிலையில் அவர்கள் பயில வேண்டும்.

ஹிஸ்லாப்: கண்கள் உடலைப் பார்க்கின்றன. இறைவனை ஒருவன் பார்ப்பது எப்படி?

பாபா: சந்திரனை பார்க்க ஒருவனுக்கு ஒரு கைவிளக்கு தேவையா? சந்திரனின் ஒளியினாலேயே நாம் சந்திரனைப் பார்க்கிறோம். இம்மாதிரியே, ஒருவன் கடவுளைப் பார்க்க விரும்பினால், இறைவனின் ஒளியாகிய அன்பின் மூலமாகவே அவனைப் பார்க்க முடியும்.
 
ஹிஸ்லாப்: பார்க்க கண்கள் அற்ற குருடன் போன்று,நாம்  நம்முடைய தெய்வத்துவத்தை பார்க்க இயலாத குருடர்களாக இருக்கிறோம். எந்தவிதமான பார்க்கும் சக்தி மூலம் ஒருவன் தன்னுடைய தெய்வத்துவத்தை பார்க்க முடியும்?

பாபா: ஒரு குருடன் அவனுடைய உடலைப் பார்க்க முடியாது. உனக்கு கண்கள் இருப்பதால் உன்னால் பார்க்க முடியும். ஆனால் உன்னுடைய ஆன்மீக உடலைப் பார்க்க உனக்கு கண்கள் இல்லை. எங்கும் எப்பொழுதும் உள்ள ஆன்மீக உடல் உனக்கு இருக்கிறது. அந்த உடலை ஆன்மீகக் கண்களுடன் பார்க்க முடியும்.

 ஹிஸ்லாப்: ஸ்வாமி ஆன்மீக கண்கள் பற்றி விளக்குவாரா?

 பாபா: ஆம், நிச்சயமாக. இந்த ஆன்மீகக் கண்ணே கடவுள். அவனை அடைந்தால் அந்த ஆன்மீகக் கண் திறக்கும்.

ஹிஸ்லாப்: ஸ்வாமி "ஒருவனுக்குள்ளேயே பார்க்கவும்" என்று சொல்வதின் பொருள் என்ன? "பார்க்கவும்" என்பதன் பொருள் என்ன?

பாபா: "உள்நோக்கி பார்த்துக்கொள்வது" தசையும், எலும்புகளும் உள்ள இந்த உடலை பார்ப்பதாகாது.அது ஆழ்ந்த தியான நிலை போன்று, புலன்களைக் கடந்த நிலையாகும்.

ஹிஸ்லாப்: ஒருவன் உள்நோக்கி திரும்பும் பொழுது அவன் உணர்ச்சிகளை சந்திக்கிறான். பெண்கள் இதயத்தைப் பற்றி பேசுகிறார்கள். ஸ்வாமி இதயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார். 'இதயம்' என்ற சொல் எதைக் குறிக்கிறது?

பாபா: இதயம் (Heart) உள்ளே இருக்கிறது. கலை(Art) வெளியே இருக்கிறது. இதயம் உள்ளே இருக்கிறது.

ஹிஸ்லாப்: இதயம் என்பது ஆத்மாவின் பிரதிபலிப்பே என்று ஸ்வாமி சொல்கிறார். அவர் மேலும் 'இதயம் உண்மையை பிரதிபலிப்பதற்கான சிறந்த கண்ணாடி' என்று சொல்கிறார். அந்த இதயம் எது? ஸ்வாமி எதை குறிப்பிடுகிறார்?

பாபா: இதயம் என்பது மனசாக்ஷியாகும்.

ஹிஸ்லாப்: பெண்களால் குறிப்பிடப்படும் இதயமும், ஸ்வாமியால் விளக்கப்படும் இதயமும் ஒன்றேதானா?

பாபா: இல்லை. அது அவர்கள் விருப்பங்களுடன் கலக்கப்பட்ட, அவர்களின் அடிமன எண்ணங்களாகும்.

ஹிஸ்லாப்: என்னுடைய சருமத்திற்கு அடியில் ஒரு அங்குலத்தில் ஒரு கண்ணாடி இருப்பது போல் தோன்றுகிறது. நான் பாபாவை வெளியில் பார்க்கும் பொழுது அவரை இந்த கண்ணாடியிலும் பார்க்கிறேன். இந்த கண்ணாடி, பாபாவின் ஒவ்வொரு அசைவையும், பிரதிபலிக்கிறது. என்னுடைய இரண்டு கண்களால் பார்க்கும் பாபா, என்னுடைய உள்ளே பிரதிபலிப்பில் பார்க்கப்படும் பாபா, இந்த இரண்டில் எது மிகவும் உண்மையானது?

 பாபா: மனசாக்ஷி ஒரு பிரதிபலிப்பாகும். அது சுத்தமானதாயிருந்தால் அது தெளிவான பிரதிபலிப்பு. பாபாவின் சங்கல்பத்தினால், இந்த பிரதிபலிப்பு பார்க்கப்படுகிறது.

ஹிஸ்லாப்: பிரார்த்தனைகளும் பக்தியும் உள்ளே இருக்கும் பாபாவிற்கு செலுத்தப்பட வேண்டுமா?

பாபா: பாபா உள்ளே பார்க்கப்படும்பொழுது, அவர் வெளியில் எங்கெங்கும் பார்க்கப் படுவார்.

ஹிஸ்லாப்: ஒருவன் ஆத்ம விசாரணை செய்யும் பொழுது 'நான்' என்பது 'நானே' எனக் காணப்படுகிறது. அந்த 'நான்' தான் ஒருவனே என்று எண்ணப்படுகிறது. ஆனால் எனக்குத் தோன்றுவது, அந்த 'நான்' என்பது நானே அல்லவென்றும் ஆனால் அது பாபாவே என்பதாகும்.

பாபா:  அதுதான் சரியான நிலை. 'நான்' என்பது பாபா. சந்தேகம் எதுவும் கொள்ளாதே. நீயும் பாபாவும் ஒன்றே. இது குணங்கள் சம்பந்தமானவற்றை குறிப்பதல்ல; ஆனால் 'நீ' எனப்படும் அடிப்படையும் பாபாவும் ஒன்றே, ஒரே விதமே. 'நான்' என்பது பாபாவே.

  ஆதாரம்: "பகவானுடன் உரையாடல்" என்ற புத்தகத்திலிருந்து.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக