தலைப்பு

வெள்ளி, 3 ஜனவரி, 2020

ஆத்மா உறைவதற்கு உடலில் ஒரு குறிப்பிட்ட இடம் இருக்கிறதா?

பக்தர் கேட்டவை பாபா அருளியவை

ஹிஸ்லாப்: ஆத்மா உறைவதற்கு உடலில் ஒரு குறிப்பிட்ட இடம் இருக்கிறதா? இவ்விடத்தில் தியானத்தின் பொழுது லயிக்கலாமா? ஆத்மாவுக்கு ஒரு குறிப்பிட்ட இடம், தங்குவதற்கு ஆசனம் இருக்கிறதா? 


பாபா: ஆத்மா எங்கும் இருக்கிறது. ஆனால் தியானத்தில் உட்காரு வதற்கான காரியத்திற்காக, வாழ்க்கையின் மூலமானது தொப்புளுக்கு 10 'அங்குலம்' மேலே, மார்பின் நடுவே இருப்பதாகக் கொள்ளலாம். இந்த அளவில் ஒரு அங்குலம் என்பது கட்டைவிரலின் முதல் முடிச்சின் அகலத்தை ஒத்ததாகும். 

ஹிஸ்லாப்: ஆத்மாவின் இருப்பிடம் மார்பின் நடுப்பகுதியின் வலதுபுறம் என்றுதான் படித்திருக்கிறேன். ஒருவன் தன்னைக் குறித்து சுட்டுவதும் இங்கேதான். 

பாபா: ஆத்மாவின் இருப்பிடம் வலதுபுறம் என்று  சொல்வது ஒரு கருத்து மட்டுமே. இடது கை பழக்கமுள்ளவர்கள் வேறுவிதமாக விளக்குவார்கள்.

ஆதாரம்: பகவானுடன் உரையாடல்... என்ற புத்தகத்திலிருந்து...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக