தலைப்பு

செவ்வாய், 28 ஜனவரி, 2020

சத்யசாயி சேவா நிறுவனங்கள் தோற்றமும் நெறிமுறைகள்!


1965 ம் ஆண்டு சத்யசாயி பாபா அவர்கள் சேவையின் புனிதத்தை, அதன் மகத்துவத்தை நெறிமுறைப்படுத்தி சத்யசாயி சேவா நிறுவனத்தைத் தோற்றுவித்தார். மனித குலம் ஒன்றே அதில் ஜாதி மத இன பாகுபாடுகள் இல்லை என்று சூறிய பாபா ஆன்மீக சேவை என்ற சித்தாந்த்தை இந்த நிறுவனத்தின் அடி நாதமாக வைத்தார். மனிதன் தன் உள்ளுறை இறைவனை
அடையாளம் கண்டு ஒன்றிட  இந்த நிறுவனம் உதவியாக இரூக்கும் என்றார் பாபா.

சத்யசாயி சேவா நிறுவனத்தின் குறிக்கோட்கள் யாவை? 

பாபா கூறுகிறார்.
"இந்த நிறுவனம் இறைவனிடமிருந்து மனிதனை வேறுபடுத்தும் தடைகளைக் களைந்து மனிதனை மாதவன் ஆக்கும்.

உண்மையில் மனிதன் வேறு கடவுள் வேறு அல்ல. இந்த நிறுவனம் மனிதனை மேம்படுத்தி இறை நிலைக்கு உயர்த்தும்."

( பாபாவின் அருட் சொற்பொழிவு.அகில இந்திய மாநாடு , பிரசாந்தி நிலையம்
 21 நவம்பர் 1970)



மேலும் பாபா கூறுவதாவது..

" மனிதனின் உள் உறைந்திருக்கும் தெய்வீகத்தை வெளிக் கொணரவேண்டும். இத் தெய்வீகம் மனிதனின் இயல்பேயன்றி வேறல்ல. ஆனால் இத்தெய்வீகம் திரையிட்டு மறைக்கப்பட்டுள்ளது. இது மனிதனால் வெளிப்படையாக உணரப்படுவதில்லை. அதை உணரச் செய்வதே சத்ய சாயி சேவா நிறுவனத்தின் முக்கியக் குறிக்கோள்."

( பாபாவின் தெய்வீக அருளுரை மும்பாய் 6 ஜனவரி 1975.)

பாபாவின் மேலும் கூறுகிறார்.

"எனது பெயரால் இயங்கும் இந்த நிறுவனத்தை , எனது புகழ் பரப்பவோ அல்லது எனது வழிபாட்டுக்காக பயன்படுத்தக்கூடாது. ஜெயம், தியானம் மற்ற ஆன்மீக சாதனைகள் மூலம் மனிதனை கடவுளை நோக்கி செலுத்த இதை பயன் படுத்த வேண்டும்.


பஜன் பாடல்கள், நாம சங்கீர்த்தனம், சத் சங்கம் இவைகளின் மூலம் மனித குலத்தை மகிழ்விக்க வேண்டும். தீனர்களுக்கும், உடல் பிணி உற்றவர்களுக்கும், மனச்சோர்வு அடைந்தவர்களுக்கும், மற்றும் பிறர்
உதவி தேவைப்படுபவர்களும் சேவை புரியவேண்டும்.அவ்வாறு செய்யப்படும்
சேவை விளம்பரத்திற்காகவோ, வெகுமதிக்காகவோ அல்லது நன்றியை
எதிர்பார்த்தோ செய்யக்கூடாது. சேவை என்பது தனவந்தர்களின், செல்வாக்கு உள்ளவர்களின் பொழுது போக்கு அல்ல. அது ஒரு சாதனை. என் உபதேசம், என் அறிவுரை எனது பிணி தீர்க்கும் செயல் போன்ற
வற்றால் நான் இதை வலியுறுத்துகிறேன்."

( பாபாவின் அருளுரை, பிரசாந்தி நிலையம்.  23  பிப்ரவரி 1968.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக