தலைப்பு

சனி, 25 ஜனவரி, 2020

தற்கொலை செய்ய இருந்த ஒரு தந்தைக்கு வாக்கு கொடுத்த சாயி பகவான்!


ஒருமுறை தர்ஷனின் பொழுது பாபா, திடீரென ஒரு பையனைப் பார்த்து "நீ டாக்டராக ஆகிறாயா?" என்றார். அப்பொழுது அம்மாணவன் வெறும் இன்டர்மீடியட் வகுப்பில் இருந்தான். அதற்கான பரிட்சையோ, மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வோ எழுதவில்லை!

பிறகு பாபா பெங்களூரில் இருந்த போது, ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் மிக அதிகத் தொகை வைப்புக் கட்டணம்(Capitation fee) செலுத்தி அம்மாணவனுக்கு இடம் வாங்கி விட்டார். பாபா தனது பல்கலை கல்லூரியிலேயே சிறந்த துறை ஒன்றில் சேர்த்து விட்டிருக்கலாம். இதை ப்ரொபசர் அனில்குமார் கேட்டபோது,' அவனை மருத்துவராக்க வேண்டும் என்பது அவனது தாயின் கடைசி ஆசை' அதை நிறைவேற்ற முடியாமல் அவன் தந்தை உயரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அப்பொழுது அவனுக்கு "குதிக்காதே குதிக்காதே" என்று ஒரு குரல் கேட்டிருக்கும். ஆம்! அவனைக் காப்பாற்றியது நான்தான். நான்தான் அவரை இங்கு அழைத்து வந்தேன். நான் அவனுக்கு வாக்கு அளித்திருந்தேன், அவனை மருத்துவராக்குவேன் என்று! அதன் காரணமாகவே அவனை மருத்துவ கல்லூரியில் சேர்த்தேன்" என்றார். அந்த பையன் இப்போது சிறப்புமிக்க மருத்துவராக இருக்கிறார்!!
       
ஆதாரம்: Vidyagiri,Divine vision,page:143

தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக