தலைப்பு

வியாழன், 30 ஜனவரி, 2020

ஒருபோதும் நன்கொடைகளை வேண்டாதீர்கள்!


பிரேம ஸ்வரூபங்களே!

உதவியற்றோர்க்கு உதவுங்கள். பசித்தோற்கு உணவிடுங்கள். இதற்காக அடுத்தவர் உதவியை நாடி செல்ல வேண்டாம். ஏதாவது உதவி தேவைப்பட்டால், என்னிடம் வாருங்கள். எந்த தயக்கமும் இன்றி ஸ்வாமி வழங்குகிறேன்.
நன்கொடையாக ஒரு நயாபைசாவையும் வசூலிக்க வேண்டாம். நூறு ரூபாய்களை நன்கொடையாக அளித்து, அதிலிருந்து ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சுய விளம்பரம் செய்து கொள்பவர்களும் உண்டு. அப்படிபட்ட செயல்களில் ஸ்வாமிக்கு இஷ்டம் இல்லை. மலை போல் ஸ்வாமி உங்கள் அருகில் நிற்கும்போது, அடுத்தவர்களிடம் இருந்து நீங்கள் ஏன் உதவியை நாடுகிறீர்கள்?  எவருக்கும் அடிப்பணியாதீர்கள். அவர்கள் வெறுமனே, உபயோகமில்லா தத்துவங்களை பிரசங்கிப்பார்கள்...
   
...ஸ்வாமிக்கு உலகாயதமான பொருட்கள் தேவையில்லை. ஸ்வாமிக்கு தூய்மையான அன்பொன்றே தேவை. அன்பை கொடுத்து அன்பை பெறுங்கள். அது ஒன்றே உண்மையான பரிமாற்றம். அந்த அன்பினை கொண்டு வாழ்வை முழுமையாக்குங்கள். அன்பை காட்டிலும் உயர்ந்த பக்தி இல்லை. அன்புடன் செய்யப்படும் சிறிய சேவையே போதுமானது.

~ பகவான் பாபா, 22.7.2002 (அகில உலக சேவை மாநாடு, பிரசாந்தி நிலையம்)

பகவானின் இந்த பேருரையை முழுமையாக படிக்க: http://sssbpt.info/ssspeaks/volume35/sss35-11.pdf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக