“எனது ஆற்றல் அளவற்றது; எனது சத்தியம் சொல்லுக்கடங்காதது, ஆழம் காண இயலாதது. அவசியம் ஏற்பட்டதால், என்னைப்பற்றி நானே கூறுகிறேன். இப்பொழுது நான் செய்வதெல்லாம், ‘விஸிட்டிங் கார்ட்’ போன்ற அருட்கொடைதான் . அவதாரங்களால் தெரிவிக்கப்படும் சத்தியத்தைப் பற்றிய அழுத்தமான அறிவிப்புகள், தெளிவாகவும் சந்தேகத்துக்கு இடமில்லாமலும் கிருஷ்ணனால் மட்டுமே கூறப்பட்டன என்று நான் கூற விரும்புகிறேன்.
அவ்வாறு அறிவித்த பின்னும் கூட, கிருஷ்ணன் தமது வாழ்க்கையில், முயற்சிகளிலும் பிரயாசைகளிலும் சில தோல்விகளைச் சந்தித்தார் என்பதைக் கவனித்திருப்பீர்கள். அவரே திட்டமிட்டு இயக்கிய நாடகத்தில் இந்தத் தோல்விகளும் ஒரு பகுதிதான் என்பதையும் நீங்கள் குறித்துக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக கெளரவர்களுக்கு எதிராக நடத்த இருந்த போரைத் தவிர்க்குமாறு பல அரசர்கள் கிருஷ்ணனிடம் மன்றாடிய போது, அவர் சமாதானம் பேசக் கெளரவர்கள் சபைக்குச் சென்ற முயற்சி ‘தோல்வியடைந்தது’ என்று ஒப்புக்கொண்டார். ஆனால் அது வெற்றி பெறவேண்டும் என்று அவர் திருவுள்ளங் கொள்ளவில்லை. போர் நடைபெற வேண்டுமென்றுதான் முடிவு செய்திருந்தார். கெளரவர்களது பேராசைக்காவும், அநீதிக்காவும் அவர்களைத் தண்டிக்க வேண்டும், உலகத்தின் முன் அவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்க வேண்டும் என்று விரும்பினார்.
இந்தச் சாயி அவதாரத்தின் போது, தோல்வி, அபஜெயம் போன்ற காட்சிகள் கொண்ட நாடகத்திற்கு இடமேயில்லை. நான் சங்கற்பித்தது நடந்தே தீரும்! நான் திட்டமிடுவது வெற்றி பெற்றேயாக வேண்டும். நானே சத்தியம். சத்தியம் தயங்கவோ, அஞ்சவோ, வளையவோ தேவையில்லை!
- தெய்வீகப் பேருரை, பிருந்தாவன், 19.06.1974 (சத்ய சாயி அருளமுதம், தொகுதி-12)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக