தலைப்பு

வெள்ளி, 31 ஜனவரி, 2020

வணிக நிர்வாகத்தில் மனித பண்புக்கூறுகள்!


சத்யம், தர்மம், சாந்தி, பிரேமை, அஹிம்சை என்று அடிப்படை மனித பண்புக்கூறுகளைப் பல வழிகளில் வணிகவியலின் அன்றாட செயல்பாடுகளில் கடைபிடிக்க முடியும்…

வணிகத்தில் ‘சத்யம்’:
சத்யம் என்று கூறுகையில், வியாபாரத்தில் நேர்மையுடன் செயல்பட்டால் பொருளை இழக்க நேரிடும் என்று அடிக்கடி பேசப்படுகிறது. அப்படி அல்ல. துவக்க காலத்தில் சில பிரச்சனைகள் இருந்தாலும், காலப்போக்கில் நேர்மையும் உண்மையும் நற்பலனையே கொடுக்கும். எம்.பி.ஏ. மாணவர்கள் தங்கள் நிறுவன உயர் அதிகாரிகளுக்கு, கணக்கு வழக்குகளிலும், கணக்காய்வுகளிலும் (தணிக்கை) நேர்மையை கடைப்பிடித்தல் நிறுவனத்திற்கு நல்ல பெயரை ஈட்டும் என்று உணரச் செய்ய வேண்டும். அவர்கள் ஓரளவு நியாயமான இலாபத்தில் திருப்தி அடைய வேண்டும். இந்தக் கொள்கை துவக்கத்தில் பயனளிக்காவிடினும், நீண்டகாலத்தில் மிகுந்த நற்பலனைக் கொடுக்கும். இதுவே நம்பிக்கையை தூண்டுவதற்கு சிறந்த வழி. வணிகத்தை நேர்மையாக நடத்துவது சமூக சேவை மற்றும் ஆன்மிக சாதனையின் ஒரு வடிவமாக கருத வேண்டும்.

வணிகத்தில் ‘தர்மம்’:
தர்ம நெறியை செயல்படும்போது, விற்பனை நடைமுறைகள் நுகர்வோர்க்கு நியாயமானதாகவும், பணியாளர்களை கையாள்வதில் நீதி தவறாமை இருக்க வேண்டும்.

வணிகத்தில் ‘சாந்தி’:
அமைதியை கடைபிடிக்கும்போது எம்.பி.ஏ. மாணவர்கள், எத்தகைய இடர்பாடுகளைச் சந்திக்க நேர்ந்தாலும் மனம் கலங்கக் கூடாது என்பதை உணர வேண்டும். அவர்கள் பொறுமை காத்து கலங்கிய நீரில் எண்ணெய் வார்த்தல் நலம். அத்தகைய சூழ்நிலைகளில் அவர்கள் அன்பு எனும் ஆயுதத்தை பயன்படுத்த வேண்டும்.

வணிகத்தில் ‘பிரேமை’:
வணிகத் தொழில்துறையில் தலைமை பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள், இத்துறையில் உள்ள நிர்வாகிகள், பணிபுரிவோர் மற்றும் யாவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வை வளர்த்துக்கொள்வது, அன்பு – பிரேமை வெளிப்படுத்தப்பட ஏதுவாகிறது.
எல்லோரிடமும் சகோதரத்துவ உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும். தொழில்துறையில் ஒருவருக்கொருவர் அன்புடனும் பண்புடனும் பழகுவதால் நல்லிணக்க உறவுமுறைகள் ஏற்படும்.

வணிகத்தில் ‘அஹிம்சை’:
அஹிம்சை அல்லது வன்முறை இன்மை என்பது தொழில் நிர்வாகத்தில் பிறர்க்கு தீங்கு இழைக்காததை மட்டும் குறிப்பதன்று. சமுதாயத்தின் பரந்த கண்ணொட்டத்தில் இருந்து நோக்கும்போது, ஒரு தொழிற்துறை நிர்வாகம் சுற்றுபுறச் சூழல் மாசுபடாமல் தவிர்த்தலும், ஆறுகள் போன்ற இயற்க்கை வளங்கள் பாழாகாமல் காத்தலும் கூட அஹிம்சையை கடைப்பிடித்தலாகும்.
இத்தகைய வேறுபட்ட வழிமுறைகளில் மக்களுக்கும் நாட்டிற்கும் பற்பல நன்மைகளை வணிக நிர்வாகிகள் செய்தல் இயலும். அதற்கு அவர்கள் வணிக உலகில் ஆன்மிக வழிமுறைகளை கையாளவும், அடிப்படை மனித பண்புகளை கடைப்பிடிக்கவும் வேண்டும்.

- பகவான் பாபா, 10.02.1990 (சென்னையில் நடைபெற்ற, சத்ய சாயி கல்லூரியில் பயிலும் எம்.பி.ஏ. மாணவர்களுகான கருத்தரங்கில் ஆற்றிய உரை)

மேற்கண்ட பேருரையை முழுமையாக படிக்க:
http://www.sssbpt.info/ssspeaks/volume23/sss23-03.pdf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக