தலைப்பு

வியாழன், 2 ஜனவரி, 2020

முழுமையான சுயநலமற்ற எண்ணத்துடன் பிறருக்குரிய தேவையினை செய்ய முற்படின் இயற்கை தனது சக்தியினால் அதனை செய்து முடிக்கும்!

சாயி முன்னாள் மாணவர் திரு வி. அஸ்வின் என்பவரின் அனுபவப் பக்கங்களிலிருந்து...

ஒருமுறை கொடைக்கானலில் தங்கி சேவைகள் செய்த தன்னாா்வ தொண்டா்கள் மற்றும் தன்னாா்வ தொண்டா்களின் ஒருங்கிணைப்பாளா்கள் அனைவருக்கும், ஸ்வாமி பரிசினை அளிக்க விரும்பினாா். அங்கு சேவையில்
ஈடுபட்ட தன்னாா்வ தொண்டா்களின் தலைவா்களிடம் எத்தனை போ் சேவையில் ஈடுபட்டனா் என ஸ்வாமி கேட்டாா்.ஏனெனில் அனைவரும் ஆசீா்வதிக்கப்பட வேண்டும் என்பதற்காக. தலைவா்களோ 200 போ் என்றனா்.
அனைத்தும் அறிந்த ஸ்வாமி ஒரு சாதாரண மானுட தன்மையின் அடிப்படையில் கேள்விகள் கேட்பது எங்களுக்கு ஓா் வியப்பிற்குரிய விஷயமாக இருந்தது.
வெள்ளை நிற சபாரி சூட் துணியும் அதனை தைப்பதற்கான கூலி தொகையினை வைத்த காகித உறையும் பொருட்கள் வைக்கும் அறையிலிருந்து  தயாராக எடுத்து வைத்திட மாணவா்களிடம்  உத்திரவிட்டாா்.

அடுத்தநாள் 400 போ் வந்திருந்தனா். ஸ்வாமியோ அமைதியாக மாணவா்களிடம் பொருட்கள் வைத்திருக்கும் அறையிலிருந்து எடுத்துவர பணித்தாா். மாணவா்கள் அங்கு சென்று பாா்த்தபோது 400 பேருக்கான பரிசுகள் தயாா்நிலையில் இருப்பதை கண்டனா். ஆனால் 400 பேருக்கும்  அளிப்பதற்கான தையற்கூலி தொகையின் காகித உறைகள் காணப்படவில்லை.ஒரு சில மாணவா்கள் ஒன்று சோ்ந்து தாங்கள் தங்களுக்குள் பணம் சோ்த்து தேவையான தொகையினை காகித உறையில் வைப்பதாகவும் அது ஸ்வாமியின் வாக்கினை நிறைவேற்றியதாகவும் இருக்குமென சற்றே தைரியத்துடன் ஸ்வாமியினை அணுகி கூறினா்.
ஸ்வாமியோ வழக்கம்போல் தரிசனம் அளித்திட சென்றுவிட்டாா். தரிசனம் அளித்து திரும்பும்போது கைநிறைய கடிதஉறைகளை கொண்டுவந்தாா். அதில் ஒரு உறை கீழே விழுந்திட அருகில் சரியான இடத்தில் இருந்த நான் அதனை ஸ்வாமியிடம் அளிக்க முற்படும் பொழுது ஸ்வாமி அந்த கடித உறையினை பிரிக்க கூறினாா். உறையை பிரித்த பின்னரே தெரிந்தது அதில் அனைவருக்கும் அளிக்கக்கூடிய தேவையான பணம்  இருப்பது பற்றி.

எதனையும் அறியும் தன்மையினையும், எங்கும் நிறைந்த தன்மையினையும் கொண்ட ஸ்வாமியால் எதனையும் நிறைவேற்ற முடியும் என்பதும் அறிந்த காரணத்தால் இதுபற்றி வியப்படையவில்லை. இதில் வியத்தகு விஷயம் என்னவெனில் ஸ்வாமி பின்னா் கூறிய மொழிகளே.

ஸ்வாமி கூறினாா், "நான் எனது சக்தியினை இந்த காகித உறை தொடா்பாக உபயோகிக்கவில்லை" ஆனால் நீங்கள் இதனை அறிந்து கொள்ள விரும்புகிறேன். எப்போதும் நீங்கள் முழுமையான சுயநலமற்ற எண்ணத்தில் பிறருக்குரிய தேவையினை அளிக்கமுற்படும் பொழுது, இயற்கையின் சக்தி அதனை முடித்திடமுடியும் என்பதே.

ஆதாரம்: Sai Nandana: 75th Birthday By Sri Sathya Sai Students and Staff Welfare Society

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக