பல்வேறு பக்தர்களுக்கு நிகழ்ந்த அற்புத சம்பவங்களும் - பக்தரே அல்லாதவர்களுக்கும் தனது பெருங்கருணையால் அருகழைத்து பாபா காட்டிய பரிவும் சாயி ஆரமாய் இதோ...!
அவர் பெயர் ஸ்ரீநிவாசன்! அவருடைய இல்லம் கேகேநகரில் இருக்கிறது! அவர் வீட்டு பின்புறத்தை அவர் ஒரு வாடகைக்கு விடுகிறார்! ஆனால் அந்த வக்கீலோ சில மாதங்களாய் ஸ்ரீநிவாசனுக்கு வீட்டு வாடகைப் பணம் தரவே இல்லை! இவருக்கோ கவலை! அவருக்கு ஒரு வக்கீல் நோட்டீஸும் விடுகிறார்! ஆனாலும் எந்தப் பலனும் இல்லை! உடனே பாபாவின் சிருஷ்டி மகிமைகள் நிகழும் வீடான சகுந்தலா அம்மாளின் வீட்டிற்கு வருகிறார்! பாபாவின் திருப்படத்தின் முன் நமஸ்கரித்து எழுகிறார்! தனக்கு இருக்கும் பிரச்சனை சகுந்தலாவிடம் விளக்கி - அந்த பிரச்சனை முடிந்தால் பாபாவுக்கு ஒரு பெரிய மலர்மாலை வாங்கி சாற்றுகிறேன் என்று வேண்டிக் கொள்ளும் அடுத்த நொடி - ஒரு பக்த தம்பதிகள் அங்கே பெரிய மாலையோடு சகுந்தலா வீட்டிற்கு வருகிறார்கள்! அவர்களுக்கு பதவி உயர்வு கிடைத்ததால் - அந்த நன்றி ஆரம்! அதை ஸ்ரீநிவாசன் கைகளாலேயே பாபாவின் திருப்படத்திற்கு சாற்றச் சொல்கிறார்! அவரும் சாற்றுகிறார்! அடுத்த நாளே வாடகை வீட்டில் இருந்த அந்த வக்கீல் மனம் மாறி ஸ்ரீநிவாசனுக்கு அதுவரை கொடுக்க வேண்டிய வாடகைத் தொகையை உடனே கொடுத்து விடுகிறார்!
ஒருமுறை உடல் நலம் குன்றிப் போகிறார் மூதாட்டி சகுந்தலா! அவர் உடல்நிலையை பரிசோதிக்க வருகிறார்கள் மூன்று மருத்துவர்கள்! அதில் இருவர் டாக்டர் விஜயகுமாரும் - கிருஷ்ண மூர்த்தியும்! அதில் கிருஷ்ணமூர்த்தி ஸ்ரீ சத்ய சாயி க்ளினிக் வைத்து நடத்துபவர்! அவர் கனவில் சென்று "சகுந்தலாவுக்கு உடல் நலம் சரியில்லை - போய் பார்!" என்று பாபா உத்தரவிட்ட பிறகே, விஷயம் அறிந்து வந்திருப்பதாக அவர் சொன்ன தகவலில் நெகிழ்கிறார் அந்த மூதாட்டி சகுந்தலா!
தன்னை மட்டுமல்ல இப்படித்தான் தனது பக்தர்கள் அனைவரையும் பேரிறைவன் பாபா காப்பாற்றி வருகிறார் என்பதையும் தனது அனுபவ புத்தகத்தில் பதிவு செய்கிறார்!
சரோஸா ஷாபுதின் எனும் ஒரு இஸ்லாமிய பெண்மணி! அவரது மகன் பெயர் ரஸாக்! அமெரிக்க சென்று படிப்பதற்கான ஏற்பாடு! ஆனால் விஸா வருகை தாமதமாகிறது! அதை சகுந்தலா வீட்டிற்கு வந்து சரோஸா வருத்தத்தோடு தெரிவிக்க.. சகுந்தலாவும் பாபாவிடம் வேண்டிக் கொள்கிறார்! பாபாவின் அருளால் வெறும் விஸா மட்டுமல்ல படிப்பதற்கு ஸ்காலர்ஷிப்பே கிடைக்கிறது!
அதை நெஞ்சார்ந்த உணர்ந்த பன்றியின் ரஸாக் - பாபாவை பற்றி கவிதை எழுதி சகுந்தலாவிடம் வாசித்து பாபாவுக்கு நன்றி தெரிவிக்கிறார்!
இதில் தனது தாயை பிரிந்து அமெரிக்கா சென்ற ரஸாக் மனமே சரியில்லை! புது செருப்பு காலைக் கடிப்பது போல் புது இடம் அது மனதிற்கு ஒப்பவில்லை! தனிமை கழுத்தை நெறிக்கிறது! உளவியலில் ஊசி வைத்து குத்துவது போல் வெறுமை வலி! இப்படி இருக்கையில் திடீரென முன்பின் தெரியாத ஒரு பெண்மணியை சந்திக்கிறான் ரஸாக்! அந்தப் பெண்மணியும் ரஸாக் குடும்பம் போல் தெலுங்கு பேசுகிறாள்! பேரன்போடு அவனை தேற்றுகிறாள் - ஆதரவான நம்பிக்கை மொழிகள் ஊட்டுகிறாள்! சிறந்த மாணவராகும் பண்புகளை எடுத்துச் சொல்லி அப்படியே மறைந்து போகிறாள்! திடுக்கிடுகிறான் ரஸாக்! தனது தாயிடம் விஷயத்தை தெரிவிக்கிறான்! வந்து போனது யார் என்பதை அந்த இஸ்லாமிய தாயும் உணர்ந்து மீண்டும் பாபாவுக்கு தான் எழுதிய கவிதையை கண்ணீர் மல்க வாசிக்கிறார்!
அந்த சந்தர்ப்பத்தில் தான் சுலோச்சனாவின் பெரிய அண்ணன் புட்டபர்த்திக்கு செல்வதாக இருக்கிறார் - தனது சகோதரி கணவரான அந்தச் சிற்பியையும் அழைத்துச் செல்கிறார்!
தரிசன வரிசையில் பாபா - நேராக சிற்பியின் முன் வந்து - நான்கு புறமும் திரும்பி- அவருக்கு தனது உடல் அமைப்பைக் காட்டி - கையில் தனது திருப்படமும் சிருஷ்டித்துக் கொடுத்து ஆசீர்வதித்துவிட்டு புன்னகையோடு நகர்கிறார்!
அந்தச் சிற்பியும் அதை மனதில் பதித்து சிற்பம் செய்து விற்கிறார்! அனைவரும் வாங்குகிறார்கள்! நன்றாக விற்பனையாகிறது! குடும்பம் அந்த ஊதியத்தில் நிம்மதியாக வாழ்கிறது!
இப்படி இருக்கையில் - சுலோச்சனாவிற்கு கேன்சர் அறிகுறி தென்படுகிறது! அதை சகுந்தலா தனது வீட்டு பூஜையறை பாபாவின் திருப்படத்தில் பொழியும் விபூதியை எடுத்து உண்ணச் சொல்ல - ஒரு சில தினங்களில் *கேன்சர் முற்றிலும் கேன்சல் ஆகிறது!* சுலோச்சனா மகளான பத்மாவுக்கு இருந்த விசா பிரச்சனையும் பாபாவால் தீர்க்கப்பட்டு வெளிநாடு செல்கிறாள்!
இப்படி சாட்சாத் குருவாயூரப்பனான புட்டபர்த்தி கிருஷ்ணன் அந்த சிற்பியின் குடும்பத்தை நல்ல வண்ணம் வாழ வைக்கிறார்!
நல்லவர்களுக்கு இரக்கம் காட்டுவது - சிற்ப சாஸ்திரம் போல் அதுவே சாயி சாஸ்திரம்!
(ஆதாரம் : "ஸ்ரீ சத்ய சாயி லீலாம்ருதம்" - பக்கம் 40 -48 பதிப்பாசிரியர் - டாக்டர் கே.டி.குமார் - பதிவு ஆண்டு 2004)
பக்தர்களின் அனுபவங்களை தொடர்ந்து வாசிக்கையில் ஏற்படும் நன்மைகள் என்ன?
நமக்கு சாயி பக்தி அதிகமாகிறது! பாபா பரம்பொருளே என்பதை உணர முடிகிறது! பாபா நம்மை காப்பாற்றிக் கொண்டு தான் இருக்கிறார் எனும் சத்ய நம்பிக்கைப் பிறக்கிறது! இதில் ஒரே ஒரு விஷயம் - சாயி அனுபவங்களை நெடுக வாசிக்கிற போது - நமக்கும் இப்படி எல்லாம் எப்போது நிகழுமோ? என்று எதிர்பார்க்காமல் - ஏக்கப்படாமல் தொடர்ந்து தூய பக்தியை மட்டும் பாபாவிடம் நாம் செலுத்தி வந்தால் நம் ஒட்டு மொத்த வாழ்க்கையே சாயி அற்புதமாக மாறிவிடுகிறது!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக