தலைப்பு

திங்கள், 14 ஜூன், 2021

முதன் முதல் மாருதி 800 காரில் ஏறி ஸ்ரீ சத்யசாயி ராமரே பவனி வந்தார்!

மாருதி நிறுவனம் கொடுத்து வைத்திருக்கிறது. அதன் முதல் தயாரிப்பு சுவாமியின் ஸ்பரிசம் பட்ட பின்னரே ஊர் உலகில் பவனி வந்தது என்பதன் சுவாரஸ்ய விளக்கப் பதிவு இதோ...


மகிழுந்து எனும் கார் இந்திய அரசாங்கம் மாருதி உத்யோக் எனும் பெயரில் முதன்முதலில் தயாரித்து டிசம்பர் 14 1983 அன்று விற்பனைக்கு துவக்கியது. அதற்கு ஒரு வாரம் முன்பே டிசம்பர் 9 1983 அன்று ஒயிட் ஃபீல்ட் பிருந்தாவனத்தில் இருந்த இறைவன் ஸ்ரீ சத்யசாயியிடம் சமர்ப்பித்தது.. சுவாமியும் கருணை கூர்ந்து அந்த மாருதி 800 'டில் கேம்பஸ் வெளியே பவனி வந்து அருளாசி வழங்கி மாருதி கம்பெனியை அனுகிரகம் செய்தார். 

பிறகு சுசூகி (Suzuki) எனும் ஜப்பானிய நிறுவனத்திற்கு 2003ல் விற்கப்பட்டது... பிறகே மாருதி சுசுகி ஆனது. மேலும் தற்போது மாருதி சுசுகி நிறுவனத்தின் MD & CEO Mr.Kenichi Ayukawa என்பவர் சுவாமியின் தீவிரமான பக்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

MD & CEO Mr.Kenichi Ayukawa 


🌻 பிரபஞ்சத்தையே இயக்குகிற இறைவன் ஸ்ரீ சத்ய சாயி மாருதி 800 ல் அமர்ந்து அதன் இயக்கத்தை ஆசீர்வதித்தார் என்பது சத்ய சாயி ராமன் மாருதியை ஆலிங்கனம் செய்து அரவணைத்ததைப் போல இதிகாச நிகழ்வாக நெஞ்சம். நிறைந்து பூரிக்கப்பட வேண்டியது!! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக