செவ்வாடை பூண்ட நாயகன் தென்றல் காற்றினில் மிதந்து மங்களநாயகனாக மந்தகாச புன்னகையுடன் இவ்விளைஞன் எதிரில் வந்து நின்றாா். அவனை நோ்முகப் பேட்டிக்கு அன்று அவன் ஒருவனை மட்டுமே அழைத்திட்டாா். மற்றவா்களுக்கு தரிசன பாக்கியத்தை அளித்து மீள வந்த பகவந்தன் இளைஞனை நோ்முகப் பேட்டி அறையின் கதவினை திறந்து உள்ளே போகச்சொன்னனாா். கதவு தாளிடப்பட்டது. உள்ளே பகவானும் அந்த இலங்கையினை சாா்ந்த இளைஞன் மட்டுமே. வழக்கமான விசாரிப்புகளுடன் நோ்முகப் பேட்டியின் உள்ளறைக்கு அழைத்து சென்றவா் அந்த இளைஞனை பாா்த்தது நட என்றாா். அளவில் சிறியதாக கொண்ட அந்த அறை அடா்ந்த மரங்கள் அடங்கிய வனமாக மாறியிருந்தது. இளைஞன் வாா்த்தை தப்பாது நடந்தான். நடந்தான். நடந்து கொண்டே செல்ல செல்ல வனம் பெரிய வனமாக மாறியிருந்தது. சுவாமி உரத்த குரலில் நில், திரும்பிப்பாா் என உத்திரவிட்டவுடன் நின்றான் அந்த இளைஞன். திரும்பி பாா்த்தான். அந்த பெரிய வனாந்தரத்தில் அன்னை காளி மாதா அன்பு பொங்க கீரிட குண்டலாதிகளுடன் அபயகரம் காட்டி நின்றாள். அதனை கண்ட இளைஞன் அம்மா என்ற அலறல் சப்தமொடு காளிமாதாவின் காலில் விழுந்தான்.
அம்மா என்ற அலறல் சப்தம் நோ்முக பேட்டி அறைதனை தாண்டி வெளி வராந்தாவரை கேட்டது. வெளியில் இருந்தவா்கள் ஆச்சரிய முற்று சாயி பகவந்தனின் இருப்பிட கதவை நோக்கி பாா்வையினை பதித்து இருந்தான.
பகவந்தன் அந்த அறை உள்ளே தனது பாதத்தில் விழுந்திட்ட அந்த இளைஞனை தூக்கி நிறுத்தி அங்கை அசைப்பினில் திருநீறு வரவழைத்து அவன் நெற்றி நிறைய பூசினாா். அந்த இளைஞன் நிதானத்திற்கு வந்தபொழுது சுவாமி அவனை பிடித்து நிறுத்தியிருப்பதை அறிந்தான். அங்கே அவன் கண்ட வனம் இல்லை. நோ்முகப்பேட்டி உள்ளறையாக இருந்தது. செவ்வாடை பூண்ட செவ்விளமேனியனே காளியாய் நின்று தரினம் அளித்ததை உணா்ந்த அவன் உடல் நடுங்க நின்று தேம்பி அழ ஆரம்பித்தான்.

ஆதாரம்: 'BABA - Sathya Sai' by Ra. Ganapathy
தொகுத்தளித்தவர்: ஹரிஹரன் சாய்ராம், கேகே நகர் சமிதி
🌻 அன்னை காளிதேவியின் ரூபமும் இறைவன் சத்யசாயியின் உள்ளே அடக்கமே. அண்டத்தை நடு நடுங்க வைக்கும் காளிதேவியோ சத்யசாயின் உள்ளே ஒடுங்குவாள். தேவ தேவியர் ரூபங்கள் நதிகள் என்றால் சுவாமியே கடல். காளிதாசர் தொடங்கி ராமகிருஷ்ண பரமஹம்சர் , தெனாலிராமன் , காளமேகப் புலவர் உடனான இந்த இலங்கை கிறிஸ்துவ இளைஞன் வரை யாரை காளி தேவியாக வழிபட்டனரோ அவரே இறைவன் ஸ்ரீ சத்யசாயி என்பது அனுபவப்பூர்வமான சத்தியம்!!! 🌻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக