ஸ்ரீ சிதம்பர கிருஷ்ணன் பெரும் பாக்யசாலியான இவர், அசாதாரண தெய்வீக மனிதர்... திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் பெரும் தனவானாக திகழ்ந்தவர், எங்கள் சுவாமி, பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபா அவர்களோடு நெருங்கிய ஆத்மானுபவங்களை பெற்றவர், 1964 முதல் 1973 வரை ஒவ்வொரு ஆண்டும் வெளியூர் பயணங்களின் போது ஸ்வாமி நெல்லை வருகை தரும் சமயத்தில் குறைந்தபட்சம் 3 நாட்கள் சுவாமி இவரது வீட்டை தங்குவதற்குப் பயன்படுத்துவார். மேலும், சுவாமி தமிழகத்திற்குச் வந்த அந்த நாட்களில் பெரும்பாலும் இவரது கார் மட்டுமே பயன்படுத்தப்பட்டுருக்கிறது.... இவரே ஓட்டுனராக செயல்பட்டு பகவானின் சம்பாஷனம், ஸ்பரிசம், நயன தீக்ஷைகளை பெற்று முக்தி பெற்றவர்...
திருநெல்வேலியில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில், முக்கூடல் எனும் ஊரில், சிதம்பர கிருஷ்ணன் என்ற இளைஞன் இருந்தார். மார்ச் 15ஆம் தேதி 1960 தேதிக்குள் அவர் இறந்துவிடுவார், என ஒரு பிரபல ஜோதிடர் கணித்துக் கூறினார். இது ஒரு தீவிர பதட்டத்தை அவருள் ஏற்படுத்தியது.
அந்த குறித்த தேதிக்கு ஒரு வாரம் முன்பாக, பாபா திருநெல்வேலி வழியாக திருவனந்தபுரம் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவரது நண்பர்கள், சிதம்பரம் கிருஷ்ணனை இந்த சந்தர்ப்பத்தில் ஒருமுறை பகவானை சந்தித்து விடுமாறு கூறினர். அதிர்ஷ்டவசமாக பாபா முக்கூடல் அருகே சுரண்டை எனும் ஊரில் தங்கினார். சிதம்பர கிருஷ்ணனுக்கு மற்றுமொரு பிரச்சனை இருந்தது. அவரது அண்ணன், தான் விரும்பும் பெண்ணை மணப்பதில் பிரச்சனைகள் எழுப்பினார். எனவே இந்த இரண்டு பெரிய பதட்டதோடு சிதம்பர கிருஷ்ணன் சுரண்டை சென்று பாபாவை தரிசிக்க உத்தேசித்து இருந்தார். இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட இவர் அண்ணனோ பாபாவை கூடை தலையன் என கிண்டல் செய்து பேசுகிறார். பிறகு எதனையும் பொருட்படுத்தாமல் இவர் பாபாவின் தரிசனத்திற்கு வருகிறார்.
காலை தரிசனத்தின்போது பாபா நேரே அவர் இருக்குமிடம் வந்து, அவர் கைகளைப் பற்றி வீட்டினுள் அழைத்துச் சென்று, அன்போடு கிருஷ்ணனை தட்டிக்கொடுத்து, "கவலைப்படாதே! உனக்கு நீண்ட ஆயுள் இருக்கிறது. ஜோசியர் கூறியபடி நீ இறக்க மாட்டாய். நான் உன்னை காக்கவே வந்துள்ளேன்." என்றார்.
கிருஷ்ணனுக்கு தன் காதுகளை நம்பவே முடியவில்லை. பேசவே நா எழவில்லை! கண்களில் நீர் வழிந்தோடியது! பாபா தொடர்ந்தார் "உன் கல்யாணம் என்ன ஆயிற்று?" கிருஷ்ணன் ஸ்தம்பித்து விட்டார்! எப்படி சாயிக்கு தெரியும் என உணர்ச்சியோடு வினவினார்!

பாபா புன்முறுவலோடு, "இந்தக் கூடைதலையனுக்கு எல்லாம் தெரியும் எதைப் பற்றியும் தீவிரமாக யோசிக்காதே! புட்டபர்த்தியில் உன் திருமணத்தை நடத்தி வைக்கிறேன். உன் அண்ணாவும் வருவார்". பாபா எல்லாவற்றிற்கும் உறுதி கூறிவிட்டு, தன் படம் பொறித்த தங்க டாலரை வரவழைத்து கொடுத்து, "இதை எப்பொழுதும் வைத்திரு. இது உனக்கு ஒரு ரக்ஷையாக அமையும்" என்று கூறி, "தெய்வ அனுகிரகம் இருந்தால் நவக்கிரங்கள் ஒன்றும் செய்யாது" என்றார். சிதம்பர கிருஷ்ணன் முற்றிலும் மாறிய மனிதனாக ஆகிவிட்டார். அவர் மனது முழுவதும் நம்பிக்கை நிறைந்தது. அவர் ஒரு பிரத்யக்ஷ போஷகரைக் கண்டு விட்டார்.
அதிலிருந்து மூன்று மாத அவகாசத்திற்குள் பிரசாந்தி நிலையத்தில் கிருஷ்ணனின் திருமணத்தை சாயி நடத்தினார். பாபா கூறியபடி அவரது அண்ணாவும் திருமணத்திற்கு வந்திருந்தார். பாபா, கிருஷ்ணனின் சொந்த ஊருக்கு இரு முறை விஜயம் செய்தார். மார்ச் 62ல் ஐந்து நாட்களும், 7 ஜூன் மாதம் 1963ல் இரண்டு நாட்களும் அவர் வீட்டில் தங்கினார். வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் வந்தபோதும் இறைவன் சாயியின் திருவடிகளை இறுக்கமாக பற்றி வாழ்ந்தனர்.
ஆதாரம்: Sathyam sivam sundaram Vol-05 Pg: 185
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர்

நன்றி: P.R.நாகமணியன் சாய்ராம்
திரு. சிதம்பர. கிருஷ்ணன் அவர்களின் மெய்சிலிர்க்கும் நேர்காணலை கேட்க...
திரு. சிதம்பர. கிருஷ்ணன் அவர்களின் மெய்சிலிர்க்கும் நேர்காணலை கேட்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக