தலைப்பு

புதன், 9 ஜூன், 2021

மேரி மாதாவை வழிபட்டவருக்கு அனுகிரகம் புரிந்த சாயி மாதா!


"எனக்கென்று தனிப்பெயர் ஏதுமில்லை. எல்லாப் பெயர்களுமே என்னுடயவைதான். எந்தப் பெயரால் அழைத்தாலும் நான் உடனேபதிலளிப்பேன். என்னை நீங்கள் அழைக்காவிடினும் உங்களுக்கு நான் தேவைப்பட்டால் உடனே ஓடிவருவேன்."
 -ஸ்ரீ சத்ய சாயி பாபா 

பெங்களூரை அடுத்து உள்ள White Field ஆசிரமத்தில் பாபா முகாமிட்டு இருந்த போது திடீரென்று அங்கு வந்திருந்த ஒரு பக்த தம்பதியை அழைத்து நீங்கள் கல்கத்தாவில் இருக்கின்ற உங்களுடைய மகளை உடனே இங்கு வரச்சொல்லுங்கள் என்று கூறிவிட்டுப் போய்விட்டார். அந்த தம்பதிக்கு ஏன் இப்படி சொன்னார் என்று புரியவில்லை என்றாலும் பகவானுடைய சொற்களில் ஏதாவது ஒரு அர்த்தம் இருக்கும் என்று நினைத்து நம்பிக்கை வைத்து கொல்கத்தாவில் இருந்த அவர்களுடைய மகளுக்கு உடனே பெங்களூருக்கு வருமாறு தந்தி அனுப்பினார்கள். 


அடுத்த இரண்டு தினங்களில் அவள் குடும்பத்தோடு வந்து சேர்ந்தாள். என்ன இவ்வளவு அவசரமாக வரச்சொன்னீர்கள் என்று கேட்டாள். எங்களுக்கு தெரியாது பாபாதான் வரச் சொன்னார் என்று கூறி பாபாவிடம் அழைத்துச் சென்றார்கள்.


 அவளிடம் பாபா "நீ தினமும் உருகி உருகி அழுது எனக்கு பிராத்தனை செய்கிறாயே அதனால் தான் இங்கே வரவழைத்தேன். நான் சொல்லும் வரை நீ இங்கேயே குடும்பத்தோடு இரு. உன் பிரச்சனையை முழுமையாக தீர்க்கிறேன்" என்று கூறி அவருடைய தங்குமிடத்திற்கு சென்ற விட்டார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த தாய் தந்தையருக்கு பிரச்சனை என்ன என்று தெரியாமல் தவித்த ர்கள். அப்போது சாவகாசமாக அவருடைய மகள் பிரச்சனையை விவரமாக சொன்னார்.


சில மாதங்களாகவே ஏதோ மூளை கோளாறு ஏற்பட்டு மனச்சிதைவினால் அவருடைய கணவர் அவதிப்பட்டு வந்தார். காரில் ஏறி வெகு தூரம் செல்லுவார். அந்த இடத்திலேயே காரை விட்டுவிட்டு எங்கே நடந்து போவார். காரை பற்றிய நினைவே இருக்காது. இப்படிதான் வீட்டிலும் நடந்து கொள்வார். அவர் வேலை செய்து கொண்டிருந்த கொல்கத்தா கோர்ட் ட்ரஸ்ட்டிலும் இப்படித்தான் தாறுமாறாக நடந்து கொள்வார். இந்த பெண்ணிற்கு ஒரே பயம் இப்படியே போனால் என்ன ஆகுமோ என்று, பல டாக்டர்களிடம் சென்றும் எதுவும் பயன் தரவில்லை. திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்று நம்பி அந்த பெண் தினமும் தன்னுடைய இஷ்ட தெய்வமான மேரி மாதாவிடம் அழுது அழுது தன்னுடைய கணவரை காப்பாற்றும்படி பிராத்தனை செய்து வந்தாள். ஏன் மேரி மாதாவிடம்? அவருடைய பெற்றோர் சாய் பக்தர்கள் ஆனாலும் அவள் கிறிஸ்துவ பள்ளியில் படிக்கும்போது மேரி மாதாவிடம் நம்பிக்கையும் பக்தியும் ஏற்பட்டு விட்டது. மேரி மாதாவே இஷ்ட தெய்வம் ஆகிவிட்டார். 

பெற்றோர்களுக்கும் இதையெல்லாம் தெரிவித்தது இல்லை. ஏனென்றால் ஒரே மகளான தனக்கு இவ்வளவு பெரிய பிரச்சனை இருப்பது தெரிந்தால் அவர்கள் அதிர்ந்து போவார்கள், அச்சத்தில் மூழ்கிவிடுவார்கள். அப்படி அவருடைய பெற்றோர் அதிர்ச்சி அடைவதை அவர் விரும்பவில்லை. ஆனால் எல்லா தெய்வங்களின் உள்ளும் இருக்கின்ற பாபா இதை நன்கு அறிந்து கொண்டார். எனவே தான் கொல்கத்தாவிலிருந்து அந்த பெண்ணின் குடும்பத்தை தன்னிடம் வரவழைத்துக் கொண்டார். நாட்களும் வாரங்களும் கழிந்தன. மெல்ல மெல்ல பெண்ணின் கணவர் குணமடைந்து விட்டார். இனி எந்த பிரச்சனையும் வராது என்று ஒரு நாள் சொன்ன பாபா உடனே கொல்கத்தாவிற்கு கிழம்புங்கள் உடனே என்றால் உடனே. அப்பொழுது அந்த பெண் சொன்னாள் சுவாமி இப்பொழுது சீட் கிடைக்குமா அப்படி கிடைத்தாலும் கூட டிக்கெட்டிற்கான  பணம் வேறு கையில் இல்லையே என்று புலம்பினாள். அதை எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் நீ கிளம்பு என்றார் பாபா. முதலில் விசாரித்தபோது டிக்கெட் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் பாபாவின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து மேலும் முயற்சி செய்த போது சீட்கள் கிடைத்துவிட்டன. நண்பர் ஒருவர் விஷயத்தை கேள்விப்பட்டு வேண்டிய பணத்தை தர முன் வந்தார். ஆகவே உடனே புறப்பட்டு சென்றார்கள். மறுநாள் காலையில் கணவர் தன்னுடைய அலுவலகத்திற்கு சென்றார். 

அப்போது தான் ஏன் பாபா இவ்வளவு அவசரமாக துரத்துவது போல் அனுப்பினார் என்று தெரிந்தது. அதாவது அதற்கு முந்திய நாளில் போர்டு மீட்டிங் ஒன்று நடந்திருந்தது. பல நாட்களாக லீவு போடாமல் மெடிக்கல் சர்டிபிகேட்டும் தராமல் வராமல் இருந்ததால் அவரை டிஸ்மிஸ் செய்ய தீர்மானித்திருந்தார்கள். அன்று மட்டும் போகவில்லை என்றால் அவருடைய வேலையே போய் இருக்கும்!


✅ இதிலிருந்து தெரிவது என்ன?

🌻 தன்னுடைய பக்தர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள், நண்பர்கள் யாராக இருந்தாலும் உள்ளம் உருகி பிராத்தித்தால் எந்த பெயரிட்டு அழைத்தாலும் உதவி கோரினாலும் உடனே பகவான் அவர்களை காப்பாற்ற விரைகிறார். எந்த பெயரிட்டு அழைத்தாலும் எங்கும் நிறைந்த பகவான் எல்லாவற்றையும் அறிந்த பகவான், எல்லாம் வல்ல பகவான், உதவிக்கு ஓடுகிறார் என்பதாகும். 🌻

ஆதாரம்: Sri Sathya Sai Digvijayam Part 1 (1926 – 1985)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக