தலைப்பு

திங்கள், 21 ஜூன், 2021

ஜாதக கட்டங்களையே பக்தர்களுக்கு சாதகமாக்கிடும் சுவாமி!

மனிதன் வருங்காலத்தை அறிந்து கொள்ள ஆசைப்படுகிறான். அதற்கு வானியல் விஞ்ஞான அணுகுமுறையால் ஜோதிட சாஸ்திரம் உதவுகிறது. அறிந்து கொள்கிறானே தவிர மனிதனால் அதை மாற்ற முடிவதில்லை. சுவாமியால் மட்டுமே ஜாதகக் கட்டங்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்கமுடிகிறது என்ற சத்தியம் விளக்கும் சுவாரஸ்யப் பதிவு.... 

ஸ்ரீ சத்ய சாயி ஹையர் இன்ஸ்டியூட் ஆஃப் ஹையர் லேனிங்கில்(Sri Sathya Sai Institute of higher learning) படித்து வெளிவந்த ஒரு மாணவி சுஜன்யா என்பவர், பாபா தனது குடும்பத்திற்கு செய்த ஒரு பெரிய ஆசீர்வாதத்தை வியப்புடன் விளக்குகிறார்... 

சுஜன்யாவின் தந்தை வழி பாட்டனார் குடும்பம் மிகவும் வைதீகமானது. அவர்களுடைய  நம்பிக்கையின்படி குடும்பத்தில் கன்யாதானம் பண்ணிக் கொடுக்க ஒரு பெண்ணும்,  இறுதி சடங்குகளை செய்ய ஒரு பையனும் கட்டாயம் பிறக்க வேண்டும். இப்படியே ஆதிகாலத்தின் நம்பிக்கை இருந்தது. ஆஸ்திக்கு ஆண் என்பதாக உணரப்பட்டது. பெண்ணாய்ப் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் என்ற சத்தியம் மக்களுக்கு போகப் போகவே புரிந்தது. ஆணை விட பெண்ணுக்கான தெய்வீகக் கருவியாக சுவாமி மாற்றியிருப்பதற்கான காரணமே அவளுக்கு இயற்கையிலேயே தாய்மைப் பண்பு அளித்திருப்பதால் தான்.

        

 சுஜன்யா அவள் அம்மாவிற்கு முதல் குழந்தை! இரண்டாவது முறை கருவுற்றிருந்த போழுது கோடி முறை சாயிராம் எழுதி, அடுத்து ஆண் பிள்ளை பிறந்து,  தனது புகுந்த வீட்டிக்கு உள்ளவர்களைத் திருப்திபடுத்த வேண்டுமென பிரார்த்தித்தேன். புகுந்த வீட்டின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய அவர்கள் எதிர்பார்த்திருந்த ஆண் குழந்தைக்காக பிரார்த்தனையோடு காத்திருந்தாள்.      


ஒரு வியாழக்கிழமை விடியற்காலை மூன்று மணிக்கு யாரோ கதவைத் தட்ட, இந்த அம்மாள் கதவை திறந்த உடன்...  பாபா நின்று கொண்டிருந்தார்.  உள்ளே அழைத்து மோர் அருந்தச் செய்தார். அந்தப் பெண்மணி! பாபா அவரிடம், ”உனக்கு தங்க மலரைத் தர இருக்கிறேன்; நீ ஏன் வெறும் வெள்ளி மலருக்கு ஆசைப்படுகிறாய்? மறுக்காமல் பெற்றுக் கொள்” என்று கூறி சென்றுவிட்டார்.

அந்த திருவார்த்தையின் தாத்பர்யம் அவளுக்கு சரியாக அந்த சமயத்தில் புரியவே இல்லை. ஒரு வாரம் கழித்து அவளுக்கு பெண் குழந்தையே பிறந்தது பெரிய ஏமாற்றத்தையே அளித்தது! சுவாமியை வேண்டிய பௌதும் கூட இப்படி நடந்துவிட்டதே என வருத்தமடைந்தாள். ஒன்று நிகழ்கிறது எனில் அது மட்டுமே சுவாமி சங்கல்பம் என பக்தர்கள் நினைப்பார்களானால் அது தவறு. ஒன்று நிகழவில்லை என்றாலும் அதுவும் சுவாமி சங்கல்பமே... அதை பக்குவ மனது புரிந்து கொள்கிறது.

   

“வருடங்கள் உருண்டோடின” சுஜன்யாவின் தங்கைக்கு 10 வயது ஆகும் போது ஒரு பெரிய நிபுணரை அழைத்து ஜாதகம் கணிக்க ஏற்பாடு செய்தனர். அந்த ஜோசியர் குழந்தை பிறந்த நேரம், காலம் எல்லாம் பார்த்துவிட்டு ஆச்சரியமடைந்தார், “இந்த குழந்தை புத்தி ஸ்வாதீனமில்லாத ஆண் குழந்தையாகப் பிறந்திருக்க வேண்டியது! இறைவனின் கருணையால் கிரக நிலைகள் மாறி  ஆரோக்கியமான பெண் குழந்தையாக பிறந்துள்ளது!” என்றார். 

சுஜன்யாவின் தாய் பத்து வருடங்களுக்கு முன்பு பாபா வந்து ஆசீர்வதித்ததை நினைவு கூர்ந்தார். தங்கத்தாமரையை தனக்கு அருளியுள்ளது யார் என்பதை நெஞ்சார உணர்ந்தார்.

ஆதாரம்: Sai Sparshan – P157

தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர். 


🌻 அது தான் சுவாமி. ஒருவருக்கு சுவாமி ஒன்றை வழங்கினால் அது அவரின் நன்மை கருதியே.. ஒருவருக்கு சுவாமி ஒன்றை வழங்கவில்லை என்றாலும் அதுவும் அவரின் நன்மை கருதியே!! சுவாமி நன்மையே செய்கிறார்.. அவை சுகம் என்றும் துக்கம் என்றும் பாகுபடுத்திப் பார்ப்பது மனித மனமே. எப்படி இரவு பகல் மாறிமாறி வந்து பூமியின் இயக்கத்திற்கு காரணமாக அமைகிறதோ... அப்படியே இருவித அனுபவம் நேர்ந்து மனித மனத்தை சுவாமி சங்கல்பம் பக்குவப்படுத்துகிறது! 🌻 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக