தலைப்பு

புதன், 2 ஜூன், 2021

எல்லா தெய்வ ரூபங்களிலும் காட்சி அளித்து ஐஸ்கட்டி வைத்தியம் செய்த சாயி!


Air Chief Marshal Nirmal Chandra Suri, PVSM, AVSM, VM, ADC (born 26 July 1933) was the 15th Chief of Air Staff of the Indian Air Force, from 31 July 1991 to 31 July 1993

இந்திய விமானப்படையின் முன்னாள் முதன்மைத் தளபதி திரு.நிர்மல் சந்திர சூரி அவர்களின் மெய்சிலிர்க்கும் சத்ய சாயி அனுபவங்கள்! 

சர்வ தேவதா அதீத ஸ்வரூப இறைவன் ஸ்ரீ சத்யசாயி என்பதற்கான உன்னதமான சான்றும்.. ஒரு பரமாத்ம பக்தருக்கு அவர் அளித்த நூதனமான வைத்தியமும் பரவசப் பதிவாக இதோ... 

திரு.நிர்மல் சந்திர சூரி அவர்கள், இந்திய விமானப்படையின் முதன்மைத் தளபதியாக 1991இல் இருந்து 1993 வரை பணியாற்றியவர். 1952இல் இளம் அதிகாரியாக விமானப் படையில் சேர்ந்த திரு.சூரி, 1965 மற்றும் 1971ல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரில், போர் விமானியாக பணியாற்றியவர். 42 வருடங்கள் இந்திய விமானப்படையில் பணியாற்றியவர் திரு.சூரி. 


இந்திய விமானப்படையை நவீனமயம் ஆக்கியதில் இவரது பங்கு அளப்பரியது. சிறந்த கருத்துருக்களை அரசாங்கத்திடம் சமர்ப்பித்து, பெண்கள் விமானப்படையில் சேர்வதற்கான வழிவகைகளை உருவாக்கியவர், திரு.சூரி. இவரது சிறப்பான சேவையை பாராட்டி, அரசாங்கம் இவருக்கு, "அதி வசிஸ்ட சேவா", "பரம வீர சக்கரா", விருதுகளை வழங்கி கௌரவித்தது. தனது பெருமைக்கும் சிறப்புக்கும், பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் கருணையும், அன்புமே காரணம் என்கிறார், திரு.நிர்மல் சந்திர சூரி.

பகவான் உடனான தனது அனுபவங்களாக திரு.நிர்மல் சந்திர சூரி, தனது வார்த்தைகளில் கூறுவதை காண்போம். "சுவாமி சர்வ வல்லமை பொருந்திய, எங்கும் நிறைந்த, பரம்பொருள். கடவுளர்களில், அவதாரங்களில், சுவாமி எனக்கு உச்சமான கடவுள். அத்தகைய பகவான் எனக்கு, நேரிலும், கனவிலும், எப்பொழுதும் வழிகாட்டி வந்துள்ளார்."


2003 ஆம் ஆண்டு, நான் என் பிறந்தநாள் ஆசீர்வாதங்களை பகவானிடம் இருந்து பெற, ஜூலை 20-ஆம் தேதி புட்டபர்த்தி சென்றேன். நான் தரிசன ஹாலில், சுவாமியிடம், "எனது பிறந்தநாள் ஜூலை 26-ஆம் தேதி. தங்களின் மேலான ஆசியை வேண்டி வந்துள்ளேன்.",என்றேன். சுவாமி, "நல்லது", எனக் கூறி சிரித்தபடி சென்றார். 

ஜூலை 26ம் தேதி, அதிகாலையில் 4 மணிக்கு, எனக்கு தூக்கத்திலிருந்து விழிப்பு ஏற்பட்டது. நறுமணமிக்க விபூதியின் மணம், அறை எங்கும் வீசியது. பின்னர், அறை முழுவதும் சம்பங்கி வாசம் நிறைந்திருந்தது. பின்னர் மீண்டும் விபூதியின் நறுமணம். சுவாமி என்னை ஆசிர்வதிக்க வந்துள்ளார் என்பதை நான் புரிந்து கொண்டேன். அன்று மாலை பகவான் என்னை நேர்காணல் அறைக்கு அழைத்து, விபூதி சிருஷ்டி செய்து, எனது இதயப் பகுதியிலும், தோள் பகுதியிலும், அவரே பூசிவிட்டார்.


சிறிது காலத்திற்கு முன், நான் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து திரு.நிர்மல் சந்திர சூரி. அதன் பின்னரும் எனக்கு இதயவலி ஏற்பட்டதால், மருத்துவர்கள், ஒரு நீண்ட பலகட்ட பரிசோதனைக்கு வரவேண்டி அறிவுறுத்தி இருந்தனர். நான் மிகவும் பயந்து போயிருந்தேன். ஆனால், பகவான், என் இதயத்தில் விபூதியை தேய்த்துவிட்ட பின், எனக்கு எந்த வலியும் இல்லை. அதன்பின் என்னை பரிசோதித்த மருத்துவர்கள், என் இதயத்தில் எந்த வித குறைபாடும் இல்லை என்று என்னை அனுப்பி விட்டனர்.

ஒருமுறை, நான் வீட்டில் படுத்திருந்த போது, அதிகாலையில், விபூதியின் நறுமணம், படுக்கை அறை முழுவதும் வீசியது. பகவான் வந்திருப்பதை அறிந்த கொண்ட நான், அவரை பார்க்க திரும்பிய போது, அங்கு உயரமாக, புல்லாங்குழலுடன், கிருஷ்ணன் நின்று கொண்டிருப்பதைக் கண்டேன். "இவர் கிருஷ்ணர். சுவாமி, நீ எங்கே ?", என்றேன். கிருஷ்ணரின் உருவம் மறைந்து, அங்கே சிவபெருமான், ஜடாமுடியுடன் நின்று கொண்டிருந்தார். 


"சுவாமி, இவர் சிவன். நீ எங்கே ?", என்றேன். சிவன் மறைந்து, பெருமாள் நின்றிருந்தார். இப்பொழுது, "சுவாமி, நீ எங்கே?", என நான் கேட்க வில்லை. ஏனென்றால், 'சுவாமி அனைத்து தெய்வங்களின் வடிவமானவர்.' என்பதை நான் புரிந்து கொண்டேன். பிறிதொரு சமயம், நான் prostate சுரப்பி குறைபாடு காரணமாக, சிறுநீர் கழிப்பதில், தாங்க முடியாத, வேதனையையும் சங்கடத்தையும் உணர்ந்தேன். மருத்துவர்கள், ஒரு அறுவை சிகிச்சைக் செய்யவேண்டும் என்றனர்.

நான், எனது வீட்டின் பூஜை அறையில் அமர்ந்து, பகவானை மனமார பிரார்த்தித்தேன். மறுநாள் அதிகாலை, விபூதியின் நறுமணம், என் படுக்கை அறையில் வீச, நான் பகவான் வந்து இருப்பதை அறிந்து கொண்டேன். என் தொப்புளில் இருந்து, கால் வரை, ஏராளமான ஐஸ்கட்டிகள் வைக்கப்பட்டன. வெகுநேரம் கழித்து, அந்த ஐஸ் கட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டன. பகவான் எனக்கு வித்தியாசமான முறையில் சிகிச்சை அளித்து இருப்பதை நான் உணர்ந்து கொண்டேன். மறுநாள் காலை முதல், எனக்கு சிறுநீர் கழிப்பதில், எந்த உபத்திரவமும் ஏற்படவில்லை. நான் சுகம் அடைந்தேன். சில மாதங்கள் கழித்து, பகவான் எனக்கு அளித்த நேர்காணலில், "உனது சிறுநீர் பிரச்சனைக்கு, வித்தியாசமான முறையில் நான் சிகிச்சை அளித்தேன்.", என்றார். அதிசயம் அடைந்த நான், பகவானுக்கு மிகவும் நன்றி கூறினேன்.

நான், எனது 75வது பிறந்தநாளின் போது, லண்டன் சென்றிருந்தேன். எனது பிறந்த நாள் விழா, லண்டனில் கொண்டாடப்பட்டது. பின்னர், நான் இந்தியா திரும்பியதும், சுவாமியை தரிசிக்க, புட்டபர்த்தி சென்றேன். சுவாமி எனக்கு நேர்காணல் கொடுத்தார். பேட்டி அறையில், சுவாமி, என் கையை பிடித்துக் கொண்டு, "சூரி, நான் உன் வாழ்க்கைக்கு தேவையான பணத்தை உனக்கு கொடுத்துள்ளேன். சரியா ?", என்றார். "ஆமாம், சுவாமி !", என்றேன். "உனக்கு போதுமான வசதிகளை, நான் தந்துள்ளேன். சரியா ?", என்றார். "ஆமாம், சுவாமி. நீங்கள் எனக்கு தேவைக்கு மிகுதியாகவே பணத்தையும், செல்வத்தையும், கொடுத்து உள்ளீர்கள்.", என்றேன். 

"அப்புறம் ஏன், ஒரு லாட்டரி டிக்கெட்டை வாங்கிக்கொண்டு வந்து, உனது வீட்டின் பூஜையறையில், எனது படத்திற்கு கீழே உள்ள, வெள்ளி பாதுகைக்கு அடியில், வைத்துள்ளாய் ?", என்றார், சற்றுக் கடுமையாக. நான் திடுக்கிட்டுப் போனேன். ஏனென்றால், லண்டன் சென்றிருந்த நான், அங்கு ஒரு லாட்டரி டிக்கெட்டை வாங்கி, வீட்டின் பூஜையறையில், சுவாமி படத்திற்கு கீழே, வெள்ளி பாதுகையின் அடியில், வைத்து இருந்தேன். சுவாமி, எங்கும் நிறைந்த பரம்பொருள் என்பதையும், சுவாமி,  எல்லாம் அறிந்தவர் என்பதையும், சுவாமியை நான் சங்கட படுத்தி விட்டேன் என்பதையும், புரிந்துகொண்டு, "சுவாமி ! என்னை மன்னித்து விடுங்கள்.", என்று சுவாமியின் பாதத்தை தொட்டேன். அதைக் கிழித்து அப்புறப்படுத்துவதாக கூறினேன். சுவாமி முகமலர்ச்சியுடன், "நல்லது பங்காரு !", என்று கூறி, என்னை ஆசீர்வதித்தார்.

இறுதியாக நான்கூற விரும்புவது என்னவென்றால், "சுவாமி, அன்பின் கடவுள். அவரது போதனையான,

"ஒரே ஒரு ஜாதிதான் உள்ளது, மனிதநேய ஜாதி !

ஒரே ஒரு மதம் தான் உள்ளது, அன்பின் மதம்!

ஒரே ஒரு மொழி தான் உள்ளது, இதயத்தின் மொழி!

இதனை பின்பற்றினால், உலகத்தில் சுபிட்சம் மலரும். போரோ, துயரங்ளோ, ஏற்படாது. ஏனென்றால், பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா, சர்வ சக்தியுள்ள, சர்வ வியாபியான, சர்வ ஞானியான, கடவுள்!", என்று முடிக்கிறார், ஏர் chief மார்ஷல். நிர்மல் சந்திர சூரி.

 பிட்டை தின்று கிழவிக்கு அருள் செய்த, சிவபெருமானே !

அவலை தின்று குசேலனுக்கு அருள் செய்த, ஸ்ரீ கிருஷ்ணனே!

மூன்றடி நிலம் தானமாகப் பெற்று, மகாபலிக்கு அருள் செய்த, ஸ்ரீமன் நாராயணனே !

நம் சுவாமி ! பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா ! அவரே பக்தர்களின் இதயத்து நியாயமான பிரார்த்தனைக்கு அருள் பாலிப்பவர்!

ஜெய் சாய்ராம்!

ஆதாரம் : The devotee's article in the special souvenir Tribute published by the Sri Sathya Sai Books & Publications Trust on the occasion of the 80th Birthday of Bhagavan.

தமிழில் தொகுத்தளித்தவர்: திரு. S. Ramesh, Ex-Convenor, Salem Samithi, Salem.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக