தலைப்பு

செவ்வாய், 29 ஜூன், 2021

போர்க்களத்தின் எல்லையில் பெரும் நெருப்பை அணைத்து தன் பள்ளித் தோழர்களைக் காப்பாற்றிய பால சாயி!


சுவாமி அவதரிப்பதற்கு முன்பே சாட்சாத் பரிபூரண இறைவனே.. அவதார பிரகடன வைபவத்திற்கு முன்பும்.. 1918 முதல் 1926 வரையிலான இடைப்பட்ட காலத்திலும் அவர் பரிபூரண பரம்பொருளே.. உருவம் / அருவம் என்பது சுவாமிக்கொரு பொருட்டல்ல... எங்கிருப்பினும்.. எத்தகைய தீமையாயினும் தன்னை நம்புபவரை காப்பாற்றுவது கடவுள் சத்யசாயியின் இறை சுபாவமே என்பதற்கான மெய்சிலிர்க்கும் அனுபவம் இதோ...

பகவான் 'சத்யா' சிறுவனாக இருந்த பொழுது, புக்கபட்டினத்தில் ஒரு பள்ளியில் படித்தார். அவருடைய வகுப்பு ஆசிரியர்களில் ஒருவரான ஸ்ரீ சுப்பண்ணா அவர்களுக்கு ஸ்ரீ நாகேஸம், ஸ்ரீ சத்ய நாராயணா என்ற மகன்கள் இருந்தனர். அவர்களும் சத்யாவுடன் வகுப்பில் படித்து வந்தனர். 1940 ஆம் ஆண்டு மத்தியில் தான் ஒரு அவதாரம் என வெளிப்படையாக தனது 4 நண்பர்கள் குழாமில் கூறியபொழுது இந்த இருவரைத் தவிர, யாருமே நம்பவில்லை!


இருவரும் இரண்டாவது உலக யுத்தத்தில் ஜவான்கள் ஆக சேர்ந்தனர். வடகிழக்கு ஹிமாச்சலத்தில் இவர்கள் படை கேம்ப் போட்டு இருந்த பொழுது, ஒரு பெட்ரோல் பங்க் தீப்பற்றி விட்டது! நாகேஷும் சத்யநாராயணா இருவரும் தனது பழைய நண்பர் ராஜுவை (சத்யா) நினைத்துக் கொண்டனர். பாபா இவர்களது பிரார்த்தனைகளை கேட்டு, காப்பாற்ற ஓடினார். அருவமாக சென்று NEFA பார்டரை அடைந்து, சக மாணவர்களின் கூடாரத்தை நெருப்பு நெருங்காமல் காப்பாற்றினார். நெருப்பு சுவாமியின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு நின்றது!


எப்பொழுதாவது தான் அருவமாக செய்யும் பயணங்களை பாபா விவரிப்பது உண்டு! தான் இவ்வாறு ஹிமாச்சலுக்கு செல்ல வேண்டிய சம்பவத்தை விவரித்தார் 1945ல் அதே வகுப்பு தோழர்கள் பர்த்தி வந்தபோது, அதே நிகழ்ச்சியை விவரித்து, பாபா காப்பாற்றியதை கூறினார்.

ஆதாரம் : BabaSathya Sai - Part 1 - P. 80 Ra. Ganapathy
தமிழாக்கம் : திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம்.


🌻 பஞ்சபூதங்கள் இறைவன் சத்ய சாயியின் ஊடகமே.. பிரபஞ்ச நிகழ்வுகள் யாவும் அவரின் நாடகமே.. இந்த மெய்யுணர்வு சத்தியத்தை உணரும் சுவாமி பக்தர்கள் கவலையின்றி வாழ்க்கையை சுவாமி பாதத்தில் பூரணமாய் ஒப்படைத்து எளிமையாய் ... மிக மகிமையாய் சுவாமிக்கு நன்றி செலுத்திய படி வாழ்ந்து வருவர்!!! 🌻


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக