தலைப்பு

சனி, 19 ஜூன், 2021

மீண்டும் பிறந்து வந்த கடவுளின் நண்பர்கள்!

The Story of Jack & Jill - Swami's Beloved Pets 

சாக்ய (நட்பு ) பக்தி, நவவித (ஒன்பது)பக்திகளில் ஒன்று. நாம் சாயிமாத பிதா தீனபந்து சகா என்று கூறுவதில்லையா? பகவான் பாபாவின் பள்ளிப் பருவத்தில் அவருடன் மற்ற மாணவர்கள் அனைவரும் அன்பான நட்புடன் பழகி வந்தனர். அதில் சிலர் அவரை உயிரைவிட மேலாக நேசித்தனர். அர்ஜுனன் கிருஷ்ணரிடம் வைத்த சக்ய பக்திக்கு நிகரான பக்தியை பாபாவிடம் வைத்த இரு மாணவர்களின் உன்னதக் கதை. இது உள்ளம் உருக்கும் நிகழ்வு. பக்தி வெள்ளம் பெருக்கும் பகிர்வு... 

நம்மில் பலர்பர்த்தி சென்றதுண்டு. பாபாவின் கருணை விழி அசைவை , புன்னகையை, நளின நடை அழகை, காக்கும் கர அசைவை கண்டு கண்டு மனம் உருகி நின்றதுண்டு. ஊர் திரும்ப மனமின்றி உருகியதுண்டு. சில கணங்களே பாபாவுடன் இருந்த நமக்கே இப்படி என்றால் , அவருடன் கூடி, ஆடி, ஓடி விளையாடி, நாம சங்கீர்தனம் கற்று, நற்குணங்கள் பெற்று இன்புற்ற பள்ளிப்பருவ நண்பர்கள் அவர் பிரிவை எப்படி சகிப்பர்?

🌹இனி, பாபா உறவுகொண்டா பள்ளியை விட்டு நீங்கியபோது நடந்த சம்பவங்களைப் பார்ப்போம்:

இனி நான் உலகிற்கானவன் என்ற பாபா, தன் உரவகொண்டா பள்ளிப் படிப்பை விட்டு விலகினார். இடியோசை கேட்ட நாகம்போல் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் நடுங்கி கண்ணீர் சிந்தினர். ஆயினும் தன் முடிவில் மாற்றமின்றி பாபா இயங்கினார். மறுநாள். காலை கடவுள் வணக்கம் பாட சத்யா இல்லை. வேறு ஒரு மாணவன் வந்தான். மேடை ஏறினான். பாடலுக்குப் பதில் கண்ணீர் பிரவாகம் பெருக தேம்பி அழுதான்.பள்ளியே துயருற்றது. விடுமுறை விடப்பட்டது. இதன் பிறகு நடந்தது என்ன? 


பாபா கூறுகிறார்... "என் அருமை நண்பன் ரமேஷ் என்பவன் என் பிரிவை தாங்க இயலாமல் ஒரு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டான். மற்றொரு தோழன் பரேஷ் மனப் பிரமை பிடித்து மருத்து மனையில் சிகிச்சை பெற்றான். ஆயினும் அவனும் சிறிது காலத்தில் உயிர் நீத்தான்" 

🌹லில்லியும்.. பில்லியும் 
ஜாக்கும்.. ஜில்லும் 
நாயல்ல.... நற்தவத்தோர்: 

அனைத்து ஜீவராசிகளும் பரமன் படைப்பல்லவா? அவைகளில் உயர்வேது தாழ்வேது..சமம் அல்லவா?

சுவாமி பழைய மந்திரில் வளர்த்த ஜாக் மற்றும் ஜில் 

பாபா முதலில் இரண்டு நாய்களை வளர்த்தார். லில்லி பில்லி என்ற விசித்திர பெயருடன். அதில் பில்லி இரு குட்டிகளை ஈன்றது. அதற்கு ஜாக் மற்றும் ஜில் என்ற பெயர் சூட்டினார். தம் பிரிவு தாங்காமல் உயிர் துறந்த ரமேஷ்  பரேஷ் என்ற பள்ளிப் பருவ நண்பர்களின் மறுபிறவிதான் இவை என்று பாபா கூறினார். இப்பிறவியில் தன் நண்பனைவிட்டு பிரியக்கூடாது என்று அந்த இரு புனிதப் பிறவிகள், ஒன்று பாபாவின் தலைமாட்டிலும், மற்றொன்று கால் மாட்டிலும் கதியாகக் கிடந்தன. 

🌹ஜாக்கும் ஜில்லும் அடைந்த oகதி மோட்சம்: 


பாபா மேலும் கூறுகிறார்... "மைசூர் மகாராணி என் தரிசனத்திற்கு ஒரு சமயம் வந்திருந்தார். ஆற்றின் அக்கரையில் உள்ள கர்நாடகப்பள்ளி என்ற ஊரில் தன் காரை விட்டு விட்டு நடந்தே பர்த்தி வந்தார். அவரது காரோட்டி அன்று இரவே பர்த்தியிலிருந்து கர்நாடகப்பள்ளி திரும்பி காரில் உறங்க எண்ணினார். இருளில் வழிகாட்ட ஜாக்கை நான் அனுப்பி வைத்தேன். ஜாக் அன்றிரவு கார் அடியில் உறங்க, காலையில் காரை இயக்கிய ஓட்டுனர் தவறுதலாக ஜாக்மீது காரை ஏற்றிவிட்டார். வலி தாங்காத ஜாக் , குற்றுயிரும் குலை உயிருமாக கதறியபடி, பர்த்திவரை இழுத்துக் கொண்டே வந்தது. நான் சத்தம் கேட்டு வெளிக் கேட்டை திறந்து வந்ததும் என் காலடியில் ஜாக் விழுந்து உயிர்விட்டது.ஜில் லும் சிறிது காலத்திற்குப் பின் மறைந்தது." 

🌻சாக்ய பக்திக்கு அன்று எடுத்துக்காட்டு அர்ஜுனன். இன்றோ பாபாவின் பள்ளித் தோழர்களான ரமேஷ் மற்றும் பரேஷ். என்ன சாயி அன்பர்களே. . படித்தவுடன் இதயம் நெகிழ்கிறதா? அதுவே பர்த்தீசனின் பரம கருணையான லீலை. 🌻

ஆதாரம்: Dasara discourse of Bhagwan - October 2000 & Conversations with Bhagawan Sri Sathya Sai Baba by John hislop pg 114 

தமிழாக்கம்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக