தலைப்பு

செவ்வாய், 15 ஜூன், 2021

லாரி டயர்களை தன் உள்ளங்கையால் தாங்கி சிறுவனைக் காப்பாற்றிய சத்திய சாயி!

பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயியின் கருணை என்பது வார்த்தைகளால் விவரிக்க இயலாதது‌. அதை விவரிக்க ஆரம்பிக்கும் இதயம் ஈரப்பஞ்சாக மாறி கண்களை நனைக்கும் அளவிற்கு பரவசப்படும். அப்படி ஓர் பெருங்கருணையும்... குணமாக்கலும் பரவசப்பதிவாக இதோ..


🤷‍♂️பின்வரும் நிகழ்வு ப்ரசாந்தி நிலையம் கேம்பஸில் படித்த முன்னாள் மாணவர் திரு S.சசிதர் அவர்கள் விவரித்தது:-     

1955ம் ஆண்டு பிரசாந்தி மந்திரைச் சுற்றி நிறைய கட்டுமான வேலைகள் நடந்த வண்ணம் இருந்தன, வசிக்கத்தகுந்த குடியிருப்புகள் கட்டப்பட்டுக்கொண்டிருந்தன! பக்தர்களின் குழந்தைகளான பல சிறுவர்கள் இதில் பங்கு கொள்ள வெயிலையும் பொருட்படுத்தாது வந்திருந்தனர். தங்குவதற்கு அறை ஒதுக்கப்பட்ட ஒரு தம்பதியர் தங்களது பிள்ளைகளுடன் வந்திருந்தனர், அந்த சிறுவர்களுள் 11 வயதுடைய ஒரு சிறுவன்தனது சகோதர்களுடன், லாரியிலிருந்து செங்கற்களை கீழே இறக்கும் சேவையைச் செய்து முடித்து, அங்கேயே நின்று தனது சட்டையை தட்டி விட்டுக் கொண்டிருந்தான். அங்கு அவன் நிற்பதை அறியாத லாரி ட்ரைவர் வண்டியை பின்னுக்கு நகர்த்தி ஓட்டிக் கொண்டு வர, பையன் கீழே தள்ளப்பட்டு பின் சக்கரம் காலில் ஏறி, கீழே விழுந்து மயக்கம் அடைந்தான். ஸ்வாமி என்று மட்டுமே கூவி விழுந்து விட்டான். உடனே அங்கிருந்தவர்கள் அவனை வெளியே இழுத்து, ரத்தம் பெருகும் காலை துணியால் சுற்றினர். ஸ்வாமியின் புனித உதவிக்காக அவரிடம் தூக்கிச் சென்றனர். ஸ்வாமி பால்கனியில் நின்றுகொண்டிருந்தது அவர்களுக்கு சற்று நிம்மதி அளித்தது, மந்திருக்கு அருகிலுள்ள டிஸ்பென்ஸரிக்கு அவனை எடுத்துச் செல்லுமாறு ஸ்வாமி கூறினார். 

பையனின் அண்ணா ஸ்வாமியிடம் அழுது “கால் முழுவதும் சிதைந்து விட்டது” என்றான். ஸ்வாமி, ”கவலைப்படாதே அவன் காலுக்கு ஒன்றும் ஆகாது” என்று கூறி தனது ஜிப்பாவின் கைகளைத்தூக்கி காண்பித்தார், அதில் லாரி டயரின் தடம் அழுத்தமாக தெரிந்தது!!!.

அதே சமயம் டிஸ்பென்ஸரியில் அவனது இளம் காலில் ஒரு எலும்பு கூட உடையவில்லை என்று டாக்டர்கள் வியந்து கூறினார்கள். ஸ்வாமியின் இடைவிடாத கவனிப்பாலும், விபூதியாலும் ஒரே மாதத்தில் காலின் வெளிக்காயமும் ஆறிவிட்டது. கால்விரல்களில் இடைவெளி மட்டுமே அதிகமாயிருந்தது. அது ஒன்று தான் விபத்து நடந்தற்கான அடையாளம், சாதாரணமாக கால்கள் இயங்க தொடங்கின

அந்த 11 வயது சிறுவன் வேறுயாருமல்ல, சசிதரின் சொந்த தந்தையே தான்!!! பிற்காலத்தில் அவர் விஞ்ஞானியாகி விட்டார்!


- S. Shashidhar

Alumnus (1995-1997), Department of Management Studies

Sri Sathya Sai Institute of Higher Learning

Prasanthi Nilayam Campus


ஆதாரம்: Sai Nandana 1995- P 9-10

தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.


🌻 சுவாமி இன்றளவும்.. இந்த நொடி வரை பேருயிர்ப்பாய் தன் பக்தர்களை பிரத்யேகமாய் கருணை காட்டி காவல் காத்து வருகிறார் என்பதற்காகவே நாம் அவரின் காலடியில் காலமெல்லாம் விழுந்து கரைந்து கலந்து போவதற்கு ஜென்மந்தோறும் நன்றிக்கடன் பட்டவர்களே! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக