தலைப்பு

செவ்வாய், 10 நவம்பர், 2020

திருப்பதியில் தலைமை அர்ச்சகர் காணும் போது பெருமாளுக்கு பதிலாக நின்று கொண்டிருந்தார் சத்யசாயி பெருமான்!

ஸ்ரீ சத்யசாயி இறைவன் என்பதற்கான ஏராள நிதர்சன அனுபவ சான்றுகள் அநேகம்!! அநேகம்!! அதில் முத்தாய்ப்பான சான்றுகளோடு காஞ்சிப் பெரியவர் சுவாமியை சாட்சாத் திருப்பதி பெருமாளே என உரைத்ததும் ஊர்ஜிதமாகிறது இதோ...


பிருந்தாவன் ஆஸ்ரமம் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட Dr. ரவிக்குமார், சுவாமியின் பள்ளியில் கல்லூரியில் படித்தவர். அவர் கூறியதாவது..... 

"சமீபத்தில், நான் பண்டரிபுரம் சென்றபோது, மூன்றரை மணி நேரம் தரிசனத்துக்காக வரிசையில் காத்திருந்தேன்.

 அப்போது எனக்குத் தோன்றியது, சென்ற அவதாரத்தில் (பகவான் பாண்டுரங்கன்) கோயிலில் வீற்றிருக்கிறார். பக்தர்கள், நடந்து சென்று தரிசிக்கின்றனர்.  

இந்த அவதாரத்தில் (சத்ய சாய்), பக்தர்கள் சௌகரியமாக அமர்ந்து உள்ளனர். பகவான் நடந்து, நடந்து, நடந்து சென்று தரிசனம் தருகிறார். இதுதான் நம் சுவாமி!

 இந்த பிருந்தாவன் ஹாலில், நான் நேரில் கண்ட மூன்று நிகழ்வுகளை உங்களிடம் கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


🌹முதலாவது நிகழ்ச்சி:

ஒரு கோடையில், காலைப்பொழுது. சுவாமி தரிசனம் முடித்து அறைக்கு சென்றுவிட்டார். 


வட இந்தியாவிலிருந்து ஒரு பக்தர் கூட்டம், ஒரு பழைய பஸ்ஸில் வந்தனர். கேட்டில் இருந்த சேவா தளத்தினர் அவர்களிடம், " தரிசனம் முடிந்து விட்டது. மாலை வாருங்கள்."எனக்கூறினார்கள்.

அவர்கள் மனம் நொந்து விட்டனர். ஏனெனில், அவர்கள் வட இந்தியாவிலிருந்து புனித கோவில்களை பார்க்க சுற்றுலா வந்தவர்கள். சுவாமியை பார்க்கும் நிகழ்ச்சி அதில் இல்லை. 

சுவாமி பெங்களூருவில் இருப்பதை அறிந்து டிரைவரை  request செய்து, programமை அட்ஜஸ்ட் செய்து வந்து இருந்தனர். 

அவர்கள் உடனே சென்றாக வேண்டும். பகவான் அறைக்கும் gateட்கும் வெகுதூரம். பகவான் அறையிலிருந்து கேட்டை பார்க்க முடியாது. 

அப்போது சுவாமி அறையில் இருந்து, திடீரென கிளம்பி, கேட்டை நோக்கி நடந்து வந்தார். நான் அதைப்பார்த்து (11ம் வகுப்பு மாணவன்) சுவாமியின் காலணிகளை கையில் எடுத்து சென்று அணிந்துகொள்ள வேண்டினேன்.

சுவாமி, "ஒத்து (வேண்டாம்)", எனக்கூறி நேராக அவர்களை நோக்கி சென்றார் .

சுவாமியைப் பார்த்து அவர்கள் ஆரவாரம் செய்தனர். சுவாமி அவர்களை அழைத்து, ஹாலில் இரு வரிசையாக அமர செய்து, அவர்களை, "எங்கிருந்து வருகிறீர்கள்?" எனக் கேட்டார்.  "பஞ்சாப் அருகே ஒரு கிராமம்." என அவர்கள் கூறினர். 

சுவாமி  அவர்களுக்கு விபூதி, ஸ்வீட், போட்டோ கொடுத்து, மகிழ்ச்சியுடன் அவர்களை வழி அனுப்பி வைத்தார் .

சுவாமி மீண்டும் அறைக்கு நடந்து வரும்போது, என்னை பார்த்து, "பங்காரு! என்னை தரிசிக்க அவர்கள் காலணி அணியாமல் வந்த போது, நான் காலணி அணிந்து செல்லலாமா?" என கேட்டார். 

அதுதான் நம் சுவாமியின் அன்பு.


🌹இரண்டாவது நிகழ்ச்சி:

திரு குரு தத் என்பவர் அந்தக்காலத்தில் ஐசிஎஸ் படித்தவர். பிருந்தாவன் வந்து சுவாமியின் மாணவர்களுக்கு moral கிளாஸ் எடுப்பார். சுவாமியின் அருமையான பக்தர். 

அவர் எங்களிடம் கூறியதாவது, "இந்த பிருந்தாவன் hallலில், டிசம்பர் 5, 1972 இல், நான் மாலை சுவாமியை தரிசிக்க வந்தேன். அப்போது நல்ல மழை.

நான் தரிசன ஹாலுக்கு அருகில் இருந்த பிருந்தாவன் கல்லூரி அருகே உள்ள shedல் மழைக்காக ஒதுங்கினேன். எனது பேரனும் என்னுடன் இருந்தார். ஆனால் என்னுடைய குடும்பத்தினர் முன்பாகவே வந்து தரிசன ஹாலில் அமர்ந்து இருந்தனர். மழை விடுவதாக இல்லை. தரிசனம் முடிந்து விட்டது. எல்லோரும் கிளம்ப ஆரம்பித்தனர். அப்போது சற்று மழை குறைந்தது. அப்போது பகவான் தரிசன ஹாலில் இருந்து நேராக என்னை நோக்கி  தூறலுக்கு இடையே வந்தார். என் அருகில் வந்ததும், என் கையை தன் கையோடு சேர்த்து கொண்டு மெதுவாக நடந்தார். சிறிது தூரம் வந்ததும் "நாளேக பா பங்காரு! (நாளைக்கு வா என் தங்கமே!) என கன்னடத்தில் கூறி அவரது அறையை நோக்கி சென்று விட்டார். 

பகவான் என்னுடன் கைகோர்த்து நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை. அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைந்தேன்.

1937இல் நான் பிரிட்டிஷ் அரசில், மைசூர் நகர மேஜிஸ்ட்ரேட் ஆக இருந்தேன். அப்போது ஒரு கலவரம் ஏற்பட்டது. 

அதில் எனது வலது கையில் அடிபட்டது. என்னால் வலது கையில், chequeகளிலோ, ஆவணங்களிலோ, கையொப்பம் இட கூட இயலாது. 

நான் மிகவும் சிரமப்பட்டு வந்தேன். 

சுவாமி எனது கையை பிடித்த மறுநாள், நான் ஒரு தேவைக்காக காசோலையை நிரப்பும்போது, எனது மகன், "அப்பா! நீங்கள் வலது கையில் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்!" என வியப்புடன் கூச்சலிட்டான்.

நானும் அப்போது தான் கவனித்தேன். ஆம் நான் வலது கையில் எழுதிக்கொண்டிருந்தேன்.

 30 வருடங்களாக இயங்காத எனது வலது கையை, 30 வினாடி ஸ்பரிசத்தால் சரி செய்த லீலா வினோதன் நம் ஸ்வாமி!


🌹மூன்றாவது நிகழ்ச்சி:

1998, டிசம்பர் மாதம், எட்டாம் தேதி, பிருந்தாவனத்தில் பகவான் இருந்தார்.

சுவாமியை தரிசனம் செய்ய, பூரண கும்ப மரியாதையுடன், மங்கள வாத்தியம் முழங்க, புஷ்பம், பிரசாதங்கள் உடன், திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் இருந்து பிரதம அர்ச்சகர் மற்றும் சில அர்ச்சகர்கள் வந்திருந்தனர்... 

சுவாமி அவர்களை நோக்கிச் சென்றார். சுவாமியை கண்டதும் அவர்கள் மன மகிழ்ச்சியுடன் வணங்கினர். சுவாமி அவர்களிடம், "சம்பிரதாயங்களை மீறி, எனது பாதங்களை காணாமல் முகத்தை கண்டீர்கள்." என்றார்.

அவர்கள் பரவசம் ஆயினர். 

சில நாட்களுக்கு முன்னர், திருப்பதியில் நடந்த நிகழ்ச்சி என்னவென்றால், 


திருமலையில் காலை சுப்ரபாத சேவைக்கு முன்னர், பிரதம அர்ச்சகர், கண்ணை கட்டிக்கொண்டு கருவறைக்கு சென்று, பெருமாளின் பாதத்தை தொட்டு நமஸ்கரிப்பார். 

பின்னர், சுப்ரபாத சேவையின் போதுதான், பெருமாளின் முகத்தை பார்ப்பார். தொன்றுதொட்டு நடைபெறும் விஷயம் இது.

சில நாட்களுக்கு முன், தலைமை அர்ச்சகர் கண்ணை கட்டிக்கொண்டு பெருமாளின் பாதத்தை தொட்டபோது, அது கற்பாதமாக இல்லாமல், மென்மையான வெதுவெதுப்பான மானிடப் பாதம் போல் (flesh & blood) இருப்பதை உணர்ந்தார்.

சட்டென்று அவர் தன் கண்ணில் கட்டி இருந்த துணியை அகற்றி பார்க்க, அங்கே பாலாஜிக்கு பதிலாக ஸ்ரீ சத்ய சாய் பாபாவை பார்த்தார்.

அவர் திகைத்து அழைக்க, மற்ற அர்ச்சகர்களும் உடனே விரைந்து வந்து பாலாஜிக்கு பதிலாக சுவாமியை கண்டனர். சிறிது நேரத்தில்  பாபா மீண்டும் பாலாஜி ஆக மாறினார்.

 இதன் பின்னர், தலைமை அர்ச்சகரும் மற்ற அர்ச்சகர்களும் சுவாமியைக் காண பிருந்தாவன் வந்தனர். அப்போது சுவாமி அவர்களிடம் சூட்சுமமாக, "சம்பிரதாயத்தை மீறி என்னை பார்த்தீர்களே?!"எனக் கூறிச் சிரித்தார். தான் திருப்பதியிலும் இருப்பதாக கூறி அவர்களை ஆசீர்வதித்து அனுப்பினார்.

 Dr. ரவிக்குமார்! அவர்கள் மேலும்,  "தரிசனம் பாப நாசனம்".

 "நாம் தரிசனத்தில் சுவாமியை பார்க்கும்போது, நமது பாவங்கள் கரைக்கப்படுகின்றன. ஆனால் பகவான் நம்மை பார்க்கும் பொழுது, நமது சிந்தனையில் பாவ எண்ணங்களே வராமல் சுவாமி பார்த்து கொள்கிறார் ." என்று கூறினார்.

 "இதுதான் நம் சுவாமி!" என்று கூறி அவர் தனது உரையை முடிக்கிறார்.

 ஜெய் சாய்ராம்!

தமிழில் தொகுத்து வழங்கியவர்: திரு. ரமேஷ் சாய்ராம் (Ex-Convenor Salem Samithi) 


🌻 பிரபஞ்சப் பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயி. அவரின் பாதமே நமக்கு போதுமானது. அவரின் இரு பாதத்தையே இடையறாது தியானிப்போம்!! அப்படி தியானிக்கையில் நம் வாழ்க்கை அவர் வாழ்க்கையாகிவிடுகிறது!!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக