தலைப்பு

சனி, 14 நவம்பர், 2020

அகண்ட பஜனால் உங்கள் ஜென்மம் சாபல்யம் அடையும் -- ஸ்ரீ சத்ய சாயி


சதா சத்யசாயி நாமத்தையே மனனம் செய்வது ஆனந்தம். அதையே பஜனை கீதமாக இசைப்பது பேரானந்தம். அந்த பேரானந்தத்தை இடையறாது புரிந்தும்/ சிரவனம் செய்தும் வந்தால் அதுவே பரமானந்தம்.. அதன் முக்கியத்துவத்தையே இதோ இறைவனே விளக்குகிறார்...


”அகண்ட பஜன் என்றால் இறைவனை இடையறாது காலை, மாலை ஏன் இரவில் கூட தியானம் செய்வதே. சந்தேகத்திற்கு இடமின்றி, பலர் இந்நாளில் இறை நாமஸ்மரணை செய்கிறார்கள்; ஆனால் பிரேமையுடனும், நிலையான நம்பிக்கையுடனும் அல்ல. சிலர் மற்றவர்கள் எவ்வாறு பாடுகிறார்கள்; அது ஸ்ருதியுடன் இருக்கிறதா என்பதைப் பற்றியே கவனம் செலுத்துகிறார்கள். இது அலை பாயும் மனதுடன் நாமஸங்கீர்த்தனம் செய்வதற்கு ஒப்பாகும்; பல மணி நேரங்கள் செய்தாலும் கூட, இப்படிப்பட்ட நாமஸங்கீர்த்தனத்தால் எந்த வித மனமாற்றமும் ஏற்படாது. 


மனமாற்றம் பெற, இதை முழு மனக்குவிப்புடனும், நிலையான நம்பிக்கையுடனும் செய்ய வேண்டும். அனைத்து எதிர்மறை எண்ணங்களையும் தவிடுபொடியாக்கும் மனத்தூய்மையைப் பெற, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் இறை நாமஸ்மரணை செய்தால் போதாது. எனவே தான், அகில உலக அகண்ட பஜன் ஒவ்வொரு வருடமும் 24 மணி நேரம் தொடர்ந்து செய்யப்படுகிறது. 

ஒரு அகண்ட பஜனில் பங்கேற்பதை உங்களது பெரிய அதிர்ஷ்டம் எனக் கருதுங்கள். இதை நல்ல முறையில் பயன்படுத்தினால், உங்கள் ஜென்மம் சாபல்யம் அடையும். இறை நாமஸ்மரணையைக் கடைப்பிடித்து, அதை உங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து ஒரு ஆன்மிக சாதனையாக ஆக்கிக் கொள்ளுங்கள்!’. 

- பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா

ஆதாரம் : Divine Discourse, 13 Nov 2007


🌻 ஜென்ம சாபல்யமே ஒவ்வொரு ஜீவனின் நோக்கம்.. உள்ளுறையும் ஆத்மாவின் ஏக்கம்.. அகண்ட பஜனையால் வருகின்ற மன மாற்றத்தை .. குண மலர்ச்சியை .. உள்ளத்தில் எழும் பிரசாந்தியை அணையா அகண்ட ஜோதியாக ஆத்மாவில் நாம் தாங்குவதால் ஆன்மீக முன்னேற்றம் மிக எளிதாகிவிடுவது சர்வ சத்தியம்! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக