தலைப்பு

சனி, 21 நவம்பர், 2020

அலைபேசிகளின் ஆபத்தைக் குறித்து எச்சரிக்கிறார் சுவாமி!

 எந்த ஒரு விஞ்ஞான கருவியையும் நாம் பயன்படுத்த வேண்டுமே தவிர .. அது நம்மை பயன்படுத்தும்படி நாம் நடந்து கொள்ளக் கூடாது.. நேரத்தைக் குடிக்கும் இதைப் போன்ற கருவிகளை எவ்வாறு பயனுள்ளதாக அதே சமயத்தில் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதை சுவாமியே வலியுறுத்துகிறார்.. இதோ..‌ 

இப்போதெல்லாம் பல மாணவர்கள் தங்களது சட்டைப் பையில் சௌகரியத்திற்காகவும் ஏனையோருடன் சுலபமாக தொடர்பு கொள்வதற்காகவும் என்று சொல்லிய வண்ணம் கைபேசியை வைத்துக் கொண்டு திரிகிறார்கள். 

இத்தகைய கைபேசியை உபயோகப் படுத்துவதன் மூலம் தாங்கள் பெறும் தவறான விளைவுகளை மாணவர்கள் உணர்வதில்லை.

தற்போது கைப்பேசிகள் பெரும்பாலும் மாணவ மாணவியர் இடையே தேவையற்ற விரும்பத்தகாத தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவே தவறாகப் பயன்படுத்தப் படுகிறது. இவ்வாறு ஏற்படுத்திக் கொள்ளும் முறையற்ற தொடர்புகளின் மூலம் தீய எண்ணங்களும் தவறான தொடர்புகளும் மாணவர்களிடையே வேரூன்றி விடுகிறது. மன சீர்கேட்டை வளர்க்கும் இத்தகைய கைபேசிகளையும் அதன் மூலம் கிடைக்கும் தேவையற்ற தொடர்புகளையும் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.


அடிமைத்தனம் என்பது ஒரு விஷயத்தில் இருந்து விடுபட முடியாமல் அன்றாட செயல்பாடுகளில் இருந்து துண்டிக்கப் பட்டிருப்பது. எந்த ஒரு மனிதனுக்கும் அவனது மனம் தான் அவன் கொத்தடிமையாக வாழ்வதற்கும் விடுதலை பெறுவதற்கும் அடிப்படை மூல காரணமாக இருக்கிறது.

தற்போது நடைமுறையில் நாம் நம்முடைய கைபேசி எண்ணை தெரிந்தவர்களுக்கு மட்டுமல்லாமல் இதர பலதரப்பட்ட நபர்களுக்கும் கொடுத்து விடுகிறோம். இதனால் என்ன ஆகிறது?? வேண்டாத தீய சகவாசங்கள் உருவாகிறது. 

தேவையற்ற அழைப்புகளால் நாம் அலைக்கழிக்கப் படுகிறோம். இவ்வாறு மாணவ மாணவியரிடம் உருவாகும் தேவையற்ற தொடர்புகள் நம் சமுதாயத்தையே சீரழிப்பதாக உள்ளது. எனவே நான் உங்கள் அனைவரையும் கைபேசியை உபயோகிக்க வேண்டாம் என்று கண்டித்துக் கூறுகிறேன். ஆரம்பத்தில் சௌகரியமாக இருப்பது போல தோற்றமளிக்கும். ஆனால் முடிவில் அதன் பயன்பாடு அழிவையே தரும்.

ஆதாரம்: Sathyasai speaks, Volume 41, October 09, 2008, Prasanthi Nilayam.

தமிழாக்கம்: R வரலட்சுமி, குரோம்பேட்டை.


🌻 அற்றது நீக்கி உற்றதைப் பருகும் அன்னப் பறவை போல உலகமயமாக்கலின் ‘நற்பயன்களை’ மாத்திரம் பெற்றுக் கொண்டு, அதன் தீமைகளில் இருந்து எவரும் தப்பித்துக் கொள்ள முடியாது. ஆனால், தனது பிள்ளை வழி தவறிச் செல்வதை தற்செயலாகவோ அல்லது விஷயம் முற்றி விவகாரமாக வெடிக்கும் போதோ அறிய நேரும் பெற்றோர் அவ்வாறு முடியும் என்று இன்னமும் நம்புகிறார்கள். 🌻



 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக