தலைப்பு

திங்கள், 16 நவம்பர், 2020

நம்பிக்கையற்ற ஒருவருக்கு கிருஷ்ணராக தரிசனம் அளித்த சத்யசாயி!


சுவாமியே பரிபூரண அவதாரம்.. கிருஷ்ணரே சத்யசாயியாக அவதரித்தது. கிருஷ்ண ரூபத்தில் சுவாமி இல்லை என நம்ப மறுத்த ஒருவருக்கு கிருஷ்ணராக காட்சியளித்த சுவாமி தந்த பேரற்புத அனுபவம் இதோ...

குஜராத்தில் மக்வானா எனும் கிராமத்தில் ஒரு சிறிய விவசாயி ரதூதன் சாத்வி. ஒரு முறை கடும் வறட்சியால் பசுமை ஏதும் மலரவில்லை, விலங்குகளெல்லாம் உணவின்றி இறந்தன. மனிதர்களுக்கும் உணவுப்பொருளின்றி வாடும் நிலை ஏற்பட்டது. ராஜ் கோட் அருகே இவரது மாமா வசித்து வந்தார், மாமாவின் இல்லமே ஸாயி சென்டர், பஜனைகள் நடைபெற்று வந்தன. அவரிடம் ரதூதன் சென்று தன் பிரச்னையைக் கூற, மாமா குலாப் தாஸ் ஸாயி விபூதியின் மகிமை பற்றி கூறினர், ஆனால் ரதூதன் இப்படி ஒரு தலை முடி இருப்பவரை பகவான் என ஏற்க முடியவில்லை!, க்ருஷ்ணர் போல் கையில் குழலுடன், சரியான தலையலங்காரத்துடன் இருந்தால் தான் நம்ப முடியும் என்றார். எனினும் மாமா சொன்னதற்காக, விபூதியை கொண்டு சென்று வயல்களில் தூவ, மழையும் பெய்து, பயிரும் விளைந்தன! அவரும் மனம் மாறினார். 


பகவானுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு பர்த்திக்கு வர விரும்பினார், Dr. காதியா வழிகளை விவரிக்க ரதூதன் பர்த்தி வந்தார். இன்டர்வ்யூவிற்கும் அழைக்கப்பட்டார், மற்றவர்களும் அழைக்கப்ட்டனர் அப்பொழுது வயிற்றில் நல்ல வலி ரதூதனுக்கு ஏற்பட்டது. 


எல்லோரையும் அனுப்பிவிட்டு ஸ்வாமி இவரிடம் வந்து, “என்ன, நான் ஆப்ரிக்கர் மாதிரி தலை முடி வளர்த்துக் கொண்டுள்ளதால் என்னை க்ருஷ்ணர் போல் எண்ணமாட்டேன் என்றாயா?” எனக்கேட்டு கையால் ரதூதரின் வயிற்றைத் தட வயிற்று வலி மாயமாயிற்று மேலும், என்னை இப்பொழுது பார் எனக்கூறி, க்ருஷ்ணர் வடிவில் கையில் புல்லாங்குழலுடன் காட்சி அளித்தார். ரதூதன் ஸ்வாமியிடம் மன்னிப்பு கேட்டார். ஸ்வாமி சொன்னார், “நான் உன் பக்தியை மெச்சி இதை எல்லாம் செய்யவில்லை நீ பத்து வருடங்களுக்கு முன்பு ஈடுபட்டிருந்த கொலை, கொள்ளை இவற்றுக்கு மீண்டும் சென்று விடக் கூடாது, அதற்காகத்தான் இந்த பூரண மன மாற்றத்தை (Transformation) கொடுத்தேன்” என்றார்!! காதியாவிடம் சொல்லி “உன் வீட்டை Sai Centre ஆக மாற்றிக்கொள் “ என அனுக்ரஹித்தார். 

பெரிதான அழுகையுடன கால்களில் விழுந்தார் ரதூதன்! எல்லா நல்ல செயல்களும் நடைபெறும் வகையில் ரதூதன் வீட்டில் ஸாயி சென்டர் திறக்கப்பெற்று நன்கு நடந்து வரலாயின, பகவானின் வாயில் காப்போனாகப் பணியாற்றும் பாக்யமும் ரதூதன் பெற்றார்! 

ஸாயி யின் கருணை மனமாற்றத்தை ஏற்படுத்திய விதம்! என்னே லீலா வினோதம்!!!

ஆதாரம்: Sai Smaran, P 218

தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம். 


🌻 சர்வம் சத்யசாயி கிருஷ்ணார்ப்பணமாக வாழ்க்கை சரணாகதியாக மாறினால் ஏக உணர்வில் பூரண பக்தியோடு ஆனந்தமாகவே இகபரம் அமைந்துவிடுகிறது!! 🌻 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக