தலைப்பு

புதன், 25 நவம்பர், 2020

மழையாக வந்து கம்பெனியை மீட்ட சத்யசாயி!


பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயியை நம்பி அவரிடம் நம் கவலைகளை ஒப்படைத்தால் அது மழையில் அடித்துச் செல்லப்படும் கறையான் புற்றாய் கரைந்து காணாமல் போய்விடும் என்பதற்கான அனுபவப் பதிவு இதோ... 

ப்ரொஃபஸர் A. அனந்தராமன் அவர்கள் கெளரவ விரிவுரையாளராக (Honorary Professor)   ஸத்ய சாயி உயர் நிலை கல்வி நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
அவர் தனது முந்தைய பணிக் காலத்தின் பொழுது ஏற்பட்ட ஒரு நிகழ்வை தன் சொந்த வார்த்தைகளில் பகிர்ந்து கொள்கின்றார்.

"1999 இல் இது நடந்தது! நான் யுனைட்டட் ஸ்டேட்ஸில் இருந்த எங்களது தலைமை கம்பெனிக்கான (Mother Company) வேலைகளை கவனிக்க, உயர் காரியதரிசியாக பணியாற்றி வந்தேன். அது சுவிஸ் நாட்டு கம்பெனியுடனான கூட்டு நிறுவனம்! அதில் ஒரு முறை பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது. அதாவது அதிக மூலதனம்  (Capital Money) தேவைப்பட்டது. ஆனால் கம்பெனியின் கடின நிலையை உத்தேசித்து, வங்கிகள் கடனை மறு நீடிப்பு (renewal) செய்ய மறுத்து விட்டன!


ப்ரொஃபஸர் A. அனந்தராமன்


ஆகஸ்ட் மாதம் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. நிர்வாகிகள் நிலைமையை புரிந்து கொண்டனர்; கம்பெனி இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பாராட்டினர்; ஆயினும் தொடர்ந்து நடத்த முடியாமையால்  மூடுவதை தவிர வேறு வழி இல்லை என்றனர். நான் 4 வாரங்கள் கால அவகாசம் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டேன். எப்படியாவது ஊழியர்கள் துன்பப்படாமல் தொடர்ந்து வேலை செய்ய வழிவகை செய்ய முயற்சிப்பதாகச் சொன்னேன். அவர்களும் ஒப்புக்கொண்டனர். ஒரு வெள்ளிக்கிழமை கம்பெனி / தொழிற்சாலை மூடப்பட்டு 4 வாரங்கள் கழித்து எதுவும் செய்ய முடியவில்லை எனில் தொடர்ந்து நிரந்தரமாக மூட வேண்டும் என்றனர்.

இந்த நான்கு வாரகாலம் என் வாழ்வில் மிக நீண்ட நேரமாக எனக்குத் தெரிந்தது. பலரை அணுகி கம்பெனிக்கு நிதி உதவி செய்ய கூடுமா அல்லது கம்பெனியை பழைய ஊழியர்களோடு அப்படியே விலைக்கு வாங்கிக் கொள்ள முடியுமா என்றுகூட கேட்டுப் பார்த்தேன்.  டென்னிசன் கூறியது போல்,  "செயலில் இறங்கினால் பயம் குறையும்" என்ற தத்துவத்தையும் கடைப்பிடித்தேன்.தொழிற்சாலையை மூடாமல் இருக்க மிகுந்த பிரயத்தனப்பட்டேன். இந்த பிரயத்தனைத்தை பாபாவே அருளியதாக உணர்கிறேன். அங்கு வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு இதைத் தவிர வேறு தொழில் தெரியாது. வேறு எங்கும் சென்று பிழைக்க முடியாது. ஒவ்வொரு குடும்பத்திலும் மொத்த உறுப்பினர்களும் இங்கு தான் வேலைக்கு வருகின்றனர். எனவே வேலை போனால் மிகமிக துன்பம் அடைவர். கம்பெனியை வாங்க வருபவர்கள் அடிமட்ட விலைக்கு கேட்டார்கள். மேலும் அதே தொழிலாளிகளை எடுத்துக் கொள்ள உறுதி அளிக்கவில்லை.



4 வாரம் முடிந்து வியாழன் அன்று தொழிற்சாலையை சென்று பார்த்தேன். மழை இலேசாக ஆரம்பித்தது. நாளையோடு கொடுத்த கெடு முடிவடைகின்றது. ஒரேயடியாக மூட வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை. கனத்த மனத்துடன் வீட்டுக்கு திரும்பினேன்.
18 ஆவது அத்தியாயத்தில் கிருஷ்ணர் கூறியது நினைவில் வந்தது.
"பிரதிக்ஞானே பிரியதோஸ்மி" (எனக்குப் பிரியமானவனுக்கான என்னுடைய உத்திரவாதம்! )
தவிர்க்க முடியாத அந்த மூடும் நிகழ்வை நடத்த மறுநாள் காலை தொழிற்சாலை அடைய முற்பட்டேன். போக்குவரத்து தடைப்பட்டு எங்கு பார்த்தாலும் மழை நீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. தொழிற்சாலையை சுற்றி நான்கு அடி ஆழத்திற்கு தண்ணீர் நின்றது! நகர சுற்றுப்புற அதிகாரிகள் எல்லாம் மொத்தமாக குழம்பிப் போயினர். இரண்டு நாட்களுக்குப் பிறகு தான் தண்ணீர் வடிந்து எங்களால் வளாகத்தினுள் போகவே முடிந்தது. அலுவலகத்தினுள்  நுழைந்து என் அறையினுள் சென்று சுவாமியின் போட்டோ தெய்வீகமாக என் மேஜையில் இருந்தது. மீண்டும் பதினெட்டாம் அத்தியாய வரிகள், "என்னை சரணடைந்தவர்க்கு என் உதவி உத்தரவாதம்" என்பது நினைவிற்கு வந்தது. இதுவும் பாபாவின் சங்கல்பமே.

இன்னும் கூறுவதானால், மறுநாள் பயந்தபடி கம்பெனியை மூட வேண்டி இருக்கவில்லை. FEMA (Federal Emergency Management Agency)  என்ற பேரழிவு உதவி நிர்வாகத்தினர் கம்பெனியின் தொழிலாளர்களுக்கு, மறுவாழ்வு நிதியம் வழங்க முற்பட்டு, தொடர்ந்து வேலை நடக்க பண உதவியும் ஏற்பாடு செய்யப்பட்டது! இன்சூரன்ஸ் மூலமாகவும் நஷ்ட ஈடு கிடைத்தது! பழைய   கடன்களை ரத்து செய்து விட்டன! 80 வருடங்களுக்குப் பின் இத்தகைய எதிர் மழை அங்கு பெய்ததால் இத்தனை விஷயங்களும் நடந்தன! தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட்டது! செயல், தியாகம், அன்பு இம்மூன்றின் முயற்சியும் பாபா அருள‌ எப்படியெல்லாம் அது வேலை செய்கின்றது.. லீலை செய்கின்றது என்பதில் பாபா பூரணமாய் ஒவ்வொன்றிலும் நிறைந்திருக்கிறார் !!!

ஆதாரம்: Sai Sparshan, P. 33
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி. 

🌻 மழை கொட்டும் போது கோவர்த்தன குடை பிடித்ததும்.. கம்பெனிக்காக மழையையே குடையாகப் பிடித்ததும் பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயியே! 🌻





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக