தலைப்பு

புதன், 18 நவம்பர், 2020

கண்ணோடு கண் உற்று நோக்கி கண் நோயை குணப்படுத்திய கண்கண்ட கடவுள் சாயி!


இறைவன் ஸ்ரீ சத்யசாயியின் லீலா விநோதங்களை வரிசைப்படுத்தி பட்டியலிட்டால் அதை வாசித்து முடிப்பதற்குள் யுகம் முடிந்து இன்னொரு சாயி அவதாரம் உருவாகி அடுத்த யுக லீலா மகிமைக்கு அழைக்கும். அப்பேர்ப்பட்ட சாயி இறைவனின் லீலா மகிமைகளில் முத்தாய்ப்பாய் மூன்று அனுபவங்கள் இதோ...


டாக்டர். சீதாராமையா, ஜெனரல் ஹாஸ்பிடலில் முதல் மெடிகல் சூப்பரின்டென்ட்; அவர், அதிசயக்கத்தக்கவகையில் குணமான பல நிகழ்வுகளை தனது பத்திரிகையில் பதிவு செய்து உள்ளார், விவரிக்கப்பட்ட அத்தகைய 3 நிகழ்வுகள் இதோ:-


டாக்டர். சீதாராமையா தன் தெய்வத்துடன்.. 

“இது ஆச்சரியமான, பயங்கர கார் விபத்து பற்றிய நிகழ்வு. 28 வயதே ஆன ஒரு ஹைதராபத் பக்தர் அனந்தபூருக்கு 6 மைல் தொலைவில் காரில் வரும் போது, வேகமாக வந்த ட்ரக்கால் தூக்கி எறியப்பட்ட காரின் வெளியே வந்து விழுந்து, 6 தண்டு வட எலும்புகளும், கால் எலும்புகளும், முகக் காயங்களுடன், பகவானின் அறிவுரைப் படி புட்டபர்த்தி கொண்டு வரப்பட்டார். அவருக்கு பகவான் தனி அறை அமைத்துக் கொடுத்து, C.G படேல் என்ற டாக்டரும், நானும் வைத்யம் செய்ய ஸ்வாமியின் அறிவுரைப் படி சிகிச்சை நடந்தது, தினமும் ஸ்வாமி வந்த பார்ப்பார். 10வது நாள் முற்றிலும் குணமாகி நோயாளி சகஜ நிலையை அடைந்தார்.(Normal)            

“புட்டபர்த்தியில் வேத பாடசாலை மாணவன் ஒருவனுக்கு கண்ணில் சிறிய கொப்பளம் வந்து விட்டது. 50% தான் பார்வை இருந்தது, பெங்களூரின் சிறந்த டாக்டர்கள் கூட மருந்துவம் செய்ய முடியவில்லை. பையனின் தாயார் ஸ்வாமியை சந்தித்து வேண்ட ஸ்வாமி பையனின் கண்ணை நன்கு பார்த்துவிட்டு “இது ஒன்றுமே இல்லை!” என்றார், அந்த நொடியே! சரியாகி விட்டது!       

இன்னுமொருஅற்புதமான லீலை! 60 வயது பெண் பக்தை ஒருவர், குடல் மிகவும் பாதிக்கப்பட்டு, வாந்தி,பேதியால் அவஸ்தைப் பட்டார். அவருக்கு ட்ரிப்ஸ் ஏற்றுவதற்காக, ஸ்ட்ரெச்சரில் ஏறச் சொன்னால், தனக்கு ஆஸ்பத்ரி செல்ல வேண்டாம் என ஸ்வாமி கூறியுள்ளதாகச் சொல்லி மறுத்து விட்டார். தனது க்வார்டர்ஸ்- ல் லிருந்து கிளம்ப மறுத்து விட்டார். வாலண்டியர்ஸ் விவாதம் செய்து ஏற்ற முயன்று விட்டு விட்டனர். அவருக்கும் குணமாகி விட்டது.!!! 

ஆதாரம்: Arogyapradayini – P 7,8,9

தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம். 


🌻 சுவாமியே குணப்படுத்துகிறார். மகா மருத்துவ இறைவன் சுவாமி. பக்தி எனும் மருந்தே விஷத்தையும் அமுதமாக்கும். அப்பேர்ப்பட்ட பிரகலாத பக்தியை சுவாமி மேல் அனைத்து பக்தர்களும் வளர்த்துக் கொள்ள வேண்டும்! அதுவே வீடுபேறுக்கான ஆன்ம வாசலை அகல திறந்துவிடுகிறது!! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக