தலைப்பு

செவ்வாய், 24 நவம்பர், 2020

சக்கர நாற்காலியில் முடமாகிக் கிடந்த பெண்மணியை கைப்பிடித்து நடக்க வைத்த காருண்ய சாயி!


சுவாமியால் ஆற்றமுடியாத அற்புதங்கள் ஏதுமில்லை. அவரவரின் கர்மவிதிக்கும் .. அதிலிருந்து விடுபட அவரவர்கள் கொண்டிருக்கும் தூய்மையான பக்திக்கும் தகுந்தபடி மனித கர்மாவை மாற்றி அமைக்கிறார் சுவாமி. அப்படிப்பட்ட ஓர் நிமிட பேரற்புதப் பதிவு இதோ..‌

ஒரு முறை டாக்டர் உபாத்யாயாவும், பிரொபசர் எரிக் அமோட் என்பவரும் புட்டபர்த்தியில் இன்டர்வியூக்கு அழைக்கப்பட்டனர். அவர்கள் வெளியே வந்தபோது, அவர்கள் ஒரு பெண்மணி சக்கர நாற்காலியில் அமர்ந்து இருப்பதை பார்த்தார்கள். சுவாமி அப்பெண்மணியை, "ஏன் உள்ளே வரவில்லை என வினவினார்?" சுவாமி கதவை மூடி விட்டதாகவும், யாரும் இவரை தூக்கி விடுவதற்கு இல்லை" எனவும் கூறினார்.

சுவாமி அப்பெண்மணியை, "ஏன்? எதற்க்கு வீல் சேரில் அமர்ந்துள்ளாய்?" என வினவ, "எனக்கு நடக்க முடியாது சுவாமி" என்றார் அந்தப் பெண்மணி!

சுவாமி ஆச்சரியத்தோடு, "உன்னால் நடக்க முடியாது என யார் கூறியது?" எனக்கேட்டார். 10,000 பேர் இன்ட்டர்வ்யூ ரூமுக்கு வெளியில் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பாபா, தனது அன்பு கரத்தை நீட்டி "என் கையைப் பிடித்துக் கொண்டு எழுந்திருங்கள்" என்றார்! அப்பெண்மணி எழுந்ததும், சுவாமி வீல் சேரை அப்பால் தள்ளிவிட்டு "நீங்கள் இப்பொழுது நடக்க முடியும்" என்றார். அப்பெண்மணியும் நடந்தார்!!!

ஆதாரம்: DR. S.K. UPADHYAY, Inspired Medicine P224

தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம்


🌻 சுவாமியின் பேரன்பு எழுந்து நடக்க பிரபஞ்சம் எல்லாம் இருள் களைந்து வெளிச்சமாகிறது.. சுவாமியின் பெருங்கருணை எழுந்து நடக்க பூமியின் கர்ம துன்பம் எல்லாம் மனித வாழ்வை தொடர முடியாமல் முடமாகிப் போகிறது. அப்பேர்ப்பட்ட எழுச்சியை .. உள்முக மலர்ச்சியை .. நிரந்தர மகிழ்ச்சியை.. நெஞ்சம் நிறைந்த நெகிழ்ச்சியை இறைவன் சத்யசாயி ஒருவரால் மட்டுமே தரமுடியும் என்பது நிதர்சன சத்தியமாகிறது !!! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக