இறைவன் சத்யசாயி லீலைகள் ஏராளம்... அவரின் தீராத மகிமைகளால் வாராது வந்த வசந்த வாழ்க்கை அநேகம்.. அத்தகைய ஓர் அபூர்வ மகிமை ஆத்மார்த்த பக்தர் நாகிரெட்டி குடும்பத்தில் நிகழ்ந்தது இதோ...
திருமதி. நாகிரெட்டி தன் வீட்டு ஸ்வாமி அலமாரியின் முன் அமர்ந்து பகவானின் படத்திற்கு அஷ்டோத்ர பூஜை செய்து கொண்டு இருந்தார். திரு. நாகிரெட்டி அவர்கள் வீட்டில் இல்லை! தாயார் மட்டும் வீட்டில் இருந்தார், திடீரென திருமதி. நாகிரெட்டி மயங்கி விழுந்தார். அவரை எழுப்ப முயன்ற நாகிரெட்டியின் தாயார் எழுப்ப முடியாமல் தவித்தார், தனது மகன் நாகிரெட்டி வரட்டும் எனக் காத்திருந்தார். திடீரென திருமதி. நாகிரெட்டி எழுந்து உட்கார்ந்து, அழ ஆரம்பித்தார், தான் பர்த்தி ஹாலில் பஜனையில் ஈடுபட்டிருந்ததாகவும் – ஏன் தன்னை வலுக்கட்டாயமாக அழைத்து வந்தீர்கள் எனவும் கேட்டார். தாயாருக்கு ஒன்றும் புரியவில்லை! நாம் எங்குமே வெளியே போகவில்லையே என்றார், பின் இந்த வாழைப்பழம் எப்படி என் கையில் வந்தது என்றார். ஆம்! பஜனை பிரசாதம் வாழைப்பழம் கொடுத்தார்கள் என்றார், அவர்கள் அப் பழத்தை ஒரு பாட்டிலில் போட்டு பகவானின் ஃபோட்டோவிற்கு அருகில் வைத்தனர்.
அவர் வந்ததும் நடந்ததைக் கூறி பழத்தைக் காண்பிக்க போனால், அந்த பாட்டிலில் பழம் இல்லை! வெறும் விபூதி மட்டுமே இருந்தது! உரிய காலத்தில் தங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்பதை உணர்த்தவே இப்படி லீலை புரிந்தார் என நினைத்தார்.
3 மாதம் கழித்து பர்த்தி சென்றனர், 15 நாட்கள் காத்திருந்து, பகவான் அழைப்பு கிட்டியது! “பாபா, கள்ளத்தனமாக புன்னகைத்து என்ன பழம் கிடைக்கவில்லையா?” என்று கேட்டுவிட்டு, ஒரு பேரீச்சசம்பழம் வரவழைத்து திருமதி. நாகிரெட்டிக்குக் கொடுக்க அவரும் உண்டார்...பிறகு சரியாக பத்து மாதம் கழித்து அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது, ஸ்வாமியே “சாயி லீலா” என்று பெயர் வைத்தார். பகவானின் கருணை அளவற்றது!.
ஆதாரம்: SANATHANA SARATHY. 1960, P-125
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம்.
🌻 காலைகள் மாலைகள் மாறுகின்றன.. அன்றாட வேளைகளும் மாறுகின்றன.. ஆனால் சத்ய சாயி லீலைகள் மாறுவதே இல்லை.. அவை நம் பக்திக்கான பரிசாக.. சரணாகதிக்கான முரசாக... வழிபாட்டிற்கான ஆரத்தியாக ... லீலைகள் சரணாகதி எனும் கழுத்தில் மாலைகளாக இன்றளவும் விழுந்து ஆசீர்வதித்துக் கொண்டே இருக்கின்றன.. 🌻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக