தலைப்பு

புதன், 11 நவம்பர், 2020

பிரபல மேற்கத்திய யோக நிபுணர் இந்திராதேவி அதிசயித்த சத்யசாயி லீலா விநோதங்கள்!


Indra Devi - The First Lady of Yoga

1937ல் இவர் "முதல் யோகப் பெண்மணி" எனும் தலைப்பு பெற்றவர். இவரே முதன்முதலில் யோக ஞானத்தை மேற்கத்திய நாடுகளில் கொண்டு சேர்த்து அவர்களின் வாழ்வை ஆன்மீகப் பேரானந்தமாய் மாற்றிய முதல் பெண்மணி ஆவார்.

இறைவன் ஸ்ரீசத்யசாயியை உணர்ந்தவர் கொடுத்து வைத்தவர்கள். பூர்வ ஜென்ம புண்ணியவான்கள். அதை அனுபவிக்க தேச பேதம் ஏதுமில்லை என்பதற்கு சான்றானாவர் யோக சிரோன்மணி இந்திரா தேவி அம்மையார். மிகப் பிரபலமான இந்த யோகா ஆசிரியையின் விவரிப்பு இது! பகவான் உலகெங்கிலும் ஆங்காங்கே எவ்விதம் பக்தர்களுக்கு அருளியுள்ளார் என்பதை இவர் விவரிக்கிறார்!. அந்த பேரற்புத அனுபவம் இதோ சத்யசாயி லீலா ஆரமாக...

பல்கேரியாவில் ஜுன் முதல் தேதி, கலை மந்திரியாக இருந்தவரால் நான் யோகா டீச்சர்ஸ் கோர்ஸ் நடத்த அழைக்கப்பட்டேன், பகவானைப் பற்றி அவரிடம் கூறி, 50வது பிறந்த நாள் கொண்டாட்ட CD போட்டுக் காண்பித்தேன். இதனால் உந்தப்பட்டு, ப்ரசாந்தி நிலையம் வந்து தரிசித்து திருப்பினார்!.



பல்கேரியா நாட்டின் தலைநகரான ஸோஃபியா'வில் 150 யோகா பயிற்சியாளர்களைக் கொண்ட வகுப்பு, மிக அழகான அனுபவம் ப்ரபொஸர், டாக்டர், இஞ்ஜினியர், கலைஞர் மற்றும் பலர் இதில் அடங்குவார்கள், ஆஸ்பிடலில் கூட சென்று வகுப்புகள் நடத்தினேன். ஸாயி யோகா என அந்தப்பயிற்சிக்குப் பெயரிட்டேன். பாபா கொடுத்த 108 மணிகள் அடங்கிய ஜபமாலையை மிகவும் முடியாமல் இருக்கும் நோயாளிகளுக்குச் கொடுத்து, அவர்களை குணப்படுத்தி மீண்டும் பெறுவேன், இப்படி பலருக்கு சரியாகியுள்ளதை கண்ணீர் மல்க நன்றியோடு என்னிடம் கூறுவர். ஒருவர் 50 மீட்டர் கூட நடக்க முடியாமல் தவித்தார். டாக்டர்களுக்கு காரணம் தெரியவில்லை, அவர் கையில் ஜபமாலைக்  கொடுத்து, பிராத்தனை செய்ய சொல்லி, விபூதியை நீரில் கரைத்து கால்களில் பூசி, மறுநாளே மிக அதிக தூரம் நடக்கலானார்.
    
ஒரு பிள்ளை பெற்ற பெண்மணி, தனது தந்தையில் மறைவின் துக்கம் தாளாமல் தான் பெற்ற குழந்தையைக் கூட கவனிக்காமல் இருந்தாள், அங்கு சென்று அவரது தாயாரிடம் விபூதி கொடுத்து நீரில் கரைத்து கொடுக்கச் சொல்லி வந்தேன். மறுநாளே அப் பெண்மணி குழந்தைக்கு பால்புகட்டி கவனித்துக் கொள்ளத் தொடங்கினாள்.


ஏதென்ஸ், கலிஃபோர்னியா, மெக்ஸ்கோ, ஸான் ஸல்வேடர் (San Salvador), மற்றும் Guatemala – ஆகிய ஊர்களின் பகவானின் கருணையை கேள்வியுற்று, அநேகம் பேர் “ஸாயிராம்” எனும் நாமம் உச்சரிப்பார்கள்! அநேகர் ஸ்வாமியின் படங்களை வைத்து ஆராதனை செய்வர் ஒரு பெண்மணி ப்ரசாந்தி சென்று திரும்பி வந்தவர், ஒரு Shoe கடை வைத்திருப்பவர், தன்னை துப்பாக்கி முனையில் மூவர் பணம் கேட்டு மிரட்ட, இவர் மனதுக்குள் பாபாவை நினைக்க, அவர்கள், மன்னிக்கவும்! நாங்கள் தவறான செய்தியை பெற்று இவ்வாறு செய்தோம், ஷூக்களை வாங்கிக் கொண்டு போய்விடுகிறோம் என்று அடங்கி பின் வாங்கினர்.


San Salvador'வில் இங்கு பகவானின் பக்தர்களான இருவர் காரில் சென்று கொண்டிருந்த போது காரை நிறுத்தி கொலையாளிகள் கூட்டமாக வந்து இவர்களது துப்பபாக்கியையும், 2000 டாலர்களையும் பிடுங்கிக் கொண்டு, இவர்களது பைகளை குடைந்து கொண்டிருந்தனர், செய்வதறியாது பாபாவின் நாமத்தை உச்சரிக்க, துப்பாக்கியையும் பணத்தையும் திருப்பிக் கொடுத்து விட்டு இருளில் சென்று மறைந்தனர். ஆச்சரியத்தில் தம்பதிகள் வாயடைத்து நின்றனர். 

     
பெரு(பேரு) நாட்டின் தலைநகரான லிமா(lima)வில் எலிசபெத் என்பவர் தனது கணவரின் அலுவலகத்திற்கு அழைத்து சென்றார். அவர் தீராத வியாதியால் அவஸ்தையுற்ற போது கணவருடன் பிரசாந்தி சென்று அங்கு அவருக்கு குணமாகி விட்டதால் தீவிர பக்தையாக திரும்ப தங்கள் நாட்டிற்கு வந்து, ஒரு அறையையே ‘ஸாயி பூஜை அறையாக’ மாற்றியிருந்தனர். அங்கு அவர் வைத்த மஞ்சள் நிற பூக்கள் 1 வாரம் கழித்து மலர்ந்து கீழே ஒரு சிலுவை வடிவில் சிதறி விழந்திருந்தன! எல்லோரும் வந்து பார்த்துச் சென்றனர். பாபாவின் காலடியில் தோன்றியிருந்தது! நான் விழுந்து அவற்றை வணங்கினேன்!

இவ்வாறாக ஸர்வ வியாபியின் லீலைகளை விவரிக்கிறார்!

ஆதாரம்: INDRA DEVI, SANATHANA SARATHI, DEC., 1980
தமிழாக்கம் : திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.

🌻 ஓம் ஸ்ரீசாயி யோகீஷ்வராய நமக எனும் அஷ்டோத்ர மந்திரம் சத்தியமே!! அதை யோக ஞானத்தில் அனுபவம் மிகுந்த  இந்திராதேவி அம்மையார் சத்யசாயி யோகத்தை தானும் .. அவரால் பிறரும் அனுபவித்த தெய்வீகம் வாசிக்க வாசிக்க இதயம் சிலிர்க்கிறது.. கர்வமற்றவரை சுவாமி இவ்வாறே தன் கருவியாகப் பயன்படுத்தி வருகிறார் என்பதற்கும் இந்த சாயி பக்தை முன்னோடியாக திகழ்கிறார்.. 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக