தலைப்பு

வியாழன், 12 நவம்பர், 2020

ஐந்தே நொடிகளில் கொடூரமான காட்டுத் தீயை அணைத்த சத்யசாயி நாமம்!

Shri K.A.A. Raja
First Lieutenant Governor of Arunachal Pradesh

இறைவன் சத்யசாயி ரூபமூம் நாமமும் ஒன்றே.. நாமத்தை அழைத்தால் ரூபம் பிரசன்னமாகி விடுகிறது. எவ்வளவு திடமான / நம்பிக்கையுடன் / விடாப்பிடியாக அழைக்கிறோமோ அவ்வளவு கருணையைப் பொழிய வல்லது சத்யசாயி நாமம் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்கிறோம் இதோ...

கிழக்கு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட திரு. கஸ்தூரி அவர்கள், அருணாசல ப்ரதேச லெஃப்டினன்ட் கவர்னர், மற்றும் Colonel K.A.A  ராஜா அவர்களால் தூண்டப்பட்டடு தேஜ்புர்- ஐ சுற்றிப்பார்க்க இருந்தார். அவரே ராஜ்பவனில் ஒரு மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்து, பகவானின் செய்திகளை அதிகாரிகள், குடிமக்கள், ராணுவத்தினர் ஆகியோருக்கு எடுத்துச் சொல்லி கூட்டத்தில் பேசுமாறு கூறினார். 


கஸ்தூரி அவர்களும் சென்று பேசினார். பேசி முடித்ததும், கவர்னர் தானும் ஒரு தீவிர  சத்ய சாயி பக்தர் என்றும் பல வருடங்களாக தான் சத்ய சாயியின் கருணையை அனுபவித்து வருவதாகவும் கூறினார். 


ராஜ் பவனிலேயே நடந்த ஒரு சம்பவம் பற்றி விவரித்தார். ஒரு முறை கவர்னர் வெளியே சென்றிருந்த பொழுது அவரது எஸ்டேட்டில் சுற்றி நேபாளி வேலையாட்கள் குடிசை போட்டு வசித்து வந்தனர், திடீரென மூங்கில் மரங்கள் உரசி தீப்பிடித்து, படபடவென வெடித்து பரவ ஆரம்பித்தது. கவர்னரின் மனைவி வெளியே வந்து “சாய்ராம்” என்று உரக்க அழைத்தார்! ஐந்தே நொடிகளில் தீ அணைந்து விட்டது, 12 ஃபைர் இஞ்ஜின்கள் வந்தாலும் அணைக்க முடியாத தீயை, சாயி நாமம் அணைத்து விட்டது, எனக்கூறி அணைத்தவைகளை வெளியே அழைத்துச் சென்று காண்பித்தார். கவர்னர் மாளிகையைச் சுற்றி மூங்கில் மரங்கள் நுனிப்பகுதி கருகிய நிலையில் நிறைய இருந்தன! பக்தியுடன் அழைக்கப்பட்ட குரலுக்கு சாயி எவ்வளவு சிக்கிரம் அனுக்ரஹித்துள்ளார் !!!!

ஆதாரம்: Loving God P -332 | Prof. N. Kasturi
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம்.


இறைவன் சத்யசாயி நாமமே கர்மாவை எரித்து பிறவியை குளிர்விக்கிறது. தீய குணங்கள் எனும் உள்ளத் தீயை .‌.. இதயத்தையே சாம்பலாக்கி விடும் அந்த மோசகர மோகத் தீயை சுவாமி நாமம் எனும் மாதவ மாமழையே தணிக்கிறது.. நம்மை நாம அதிர்வலைகள் இருகரம் நீட்டி அணைக்கிறது.

நாம் செய்ய வேண்டியது இரண்டே இரண்டு தான்.. ஒன்று சுவாமியின் பாதத்தில் சரணாகதி அடைவதும்.. சுவாமியின் நாமத்தை சதா அழைப்பதுமே!

அதுவே இகபர வாழ்வியலுக்கு போதுமானது!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக