தலைப்பு

வியாழன், 26 நவம்பர், 2020

பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபா எழுதிய கடிதம் - நான் இருக்க பயமேன்!


இதுவரை இறைவன் எடுத்த அவதாரங்கள் சம்ஹாரம் செய்தன.. ஆனால் கலியில் இறைவன் ஷிர்டி சாயி... சத்ய சாயி.. பிரேம சாயியாக அவதரித்திருப்பது அழிப்பதற்கல்ல.. மறுமலர்ச்சியை அளிப்பதற்கு என்பதனை இறைவனே தன் இதழ் திறந்து பேசுகிறார் இதோ...

பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா தன் பக்தர் ஒருவருக்கு எழுதிய கடிதம் தயவுசெய்து இதை தவறாமல் படிக்கவும்....



மக்கள் செய்யும் தவறுகளுக்கு நான் யாரையும் தண்டிப்பதில்லை. அவர்களை சீர்திருத்தவே இங்கு நான் அவதரித்து உள்ளேன். எனவே எப்போதெல்லாம் நான் உங்களை சோதனைக்குள்ளாக்குகிறேனோ, நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்... அது நான் உங்களுக்கு தரும் பாதுகாப்பு தானே அன்றி தண்டனை அல்ல.

சாயி சாயி என்ற பெயரை நீங்கள் நினைவு கூறும் போதெல்லாம் எல்லா கவலைகளிலிருந்தும் விடுவிக்கப் படுவீர்கள்.

சாயி என்னும் திருநாமத்தின் சக்தி பட்டை தீட்டிய வைரத்தைப் போன்று உங்களிடம் ஒளிர்ந்து கொண்டிருக்கும் போது எந்த தீய சக்தியாலாவது உங்கள் அருகில் வர இயலுமா? அவைகள் வேரோடு அழிக்கப் பட மாட்டாது??  அத்தகைய துர் சக்திகள் உங்களை நெருங்க இயலுமா?? அது எங்காவது சாத்தியமா?? சுவாமி உங்களை எங்காவது கை விடுவேனா??

எந்த ஒரு சந்தேகமும் பயமும் கவலையும் இன்றி எப்போதும்  உங்களுடனேயே இருக்கும் இச்சிறு சாயியை சந்தோஷமாக நினைத்திருங்கள்.

வாழ்க்கையின் எல்லா சந்தோஷங்களும் சுக சௌகரியங்களும் இந்த சாயி எனும் ஒரு சொல்லிலும் அதை நினைப்பதிலும் அடங்கியிருக்கிறது.

-பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபா 

ஆதாரம்: ரேடியோ சாய் 
மொழிமாற்றம்: R. வரலட்சுமி, குரோம்பேட்டை, சென்னை.

🌻 சாயி நமக்குத் தரும் சோதனை நிச்சயமாக கர்ணனின் கவச குண்டலத்தை விட மேன்மை பொருந்தியது. சோதனை எனும் கவசம் அணிந்திருக்கும் நாம் பாதுகாப்பாக இருப்போம். சோதனை தான் இங்கே சோதிக்கப்படுகிறது, நாமல்ல. 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக