தலைப்பு

சனி, 28 நவம்பர், 2020

கனவில் தோன்றி தரிசனத்திற்கு அழைத்து கருணையைப் பத்தாக்கி தந்த பங்காரு பாபா!

சுவாமி காரணம் இன்றி எதையும் சொல்வதில்லை.. செய்வதில்லை.. அவரின் கருணையோ புயல் முடிந்தபின் ஓயும் மழைபோல் அன்றி விடாமல் பொழியக் கூடியது எனும் பரம சத்தியத்திற்கான பேரனுபவம் இதோ...

அவர் ஸ்வாமியின் எண்ணற்ற பக்தர்களுள் ஒருவர். மற்றவர்களைப் போல் அவரும் பஜனை மற்றும் உள்ள விஷயங்களில் பங்கு கொண்டாலும் மக்கள் சேவையை மகேசன் சேவை எனும் குறிக்கோள் உடையவர். தினமும் மாலை வேலையில் இருந்து திரும்பும் பொழுது பருப்பு, காய்கறி வாங்கி வந்து, நறுக்கி சுத்தம் செய்து வைத்து விடுவார். காலையில் சீக்கிரம் எழுந்து சமையல் நிறைய செய்து தனக்கு சிறிதளவு வைத்துக் கொண்டு, மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்து உண்ட பிறகு, எல்லாவற்றையும் அண்டையிலுள்ள ஏழைகளுக்கு கொடுத்துவிடுவார். இதை அடக்கமாக அவர் செய்தாலும் விஷயம் பரவி இன்னும் சிலர் இவரது, சேவாவில் பங்கு பெற்று இன்னும் நிறைய பேர் பலனடையும் படி செய்தனர். ஒவ்வொரு புத்தாண்டின் பொழுதும் ஒரு வாரம் விடுமுறை எடுத்துக் கொண்டு பர்த்தி செல்வார், ஸ்வாமியுடன் இன்டர்வ்யூ கிடைக்கும். ஸ்வாமியும் அவரை ஊக்குவித்து சேவையின் வழி முறைகளை கற்பிப்பார். வருடங்கள் செல்லச் செல்ல இன்டர்வ்யூ கிடைப்பது அரிதாயிற்று, கூட்டம் அதிகரித்தது. 2003 இவர் வழக்கம் போல் அந்த 1 வாரம் சேவாவை நண்பர்களிடம் ஒப்படைத்து விட்டு பர்த்தி வந்தார், ஆனால் அம்முறை கடைசி வரிசையில் தான் இடம் கிடைத்தது ஸ்வாமியுடன் பேச முடியவில்லை. இது தொடர்ந்து நடந்தது. இவரும் பகவானின் விருப்பம் இதுவென விட்டுவிட்டார், 


 ஊருக்குக் கிளம்ப வேண்டிய நேரம் வந்ததும், தனது லாட்ஜிற்கு வந்து தனது உடமைகளை சரிபார்த்து எடுத்துக் கொள்ளும் போது தனது பர்ஸ் எங்கோ தவற விட்டதை உணர்ந்தார். அதில் தான் லாட்ஜுக்கு கட்ட வேண்டிய பணம், ஊருக்குச் செல்ல டிக்கட் இருந்தது! சாப்பாடு கூப்பன் மட்டும் சில கையில் இருந்தன. செய்வதறியாது பெருந் துக்கத்தில் தூங்கியே போய் விட்டார், திடீரென கனவு கண்டார். அதில் ஸ்வாமி தோன்றி,“காலை தரிசனுக்கு வா” என்றார், அதன்படி காலையில் தர்சனுக்கு சென்று அமர்ந்தார். முதல் வரிசையில் இடம் கிடைத்தது ஸ்வாமி அருகில் வந்தார் தன் கையில் வைத்திருந்த கவர்களில் ஒன்றை இந்த பக்தரின் உள்ளங்கைகளில் போட்டுவிட்டுச் சென்றார். இவருக்குப் பின்னால் அமர்ந்த ஒருவர் அதை இவரது மடியில் இருந்து எடுக்க முயன்று அது தன்னுடைய கடிதம் என்றார். இவர் கொஞ்சம் பொறுமையாக இருக்கும் படி கூறி இன்னும் தரிசன் முடியவில்லை, பொறுங்கள் என்றார். பிறகு அநேகமாய் எல்லோரும் கிளம்பி சென்றதும், இந்த பக்தர் ஸ்வாமி காரணம் இல்லாமல் எதையும் செய்வதில்லை. நான் எல்லோரையும் அழைத்து, “இந்த கவர் என் மடியில் ஸ்வாமி போட்டார். இவர் இது இவருடையது என்கிறார்” என்றார். கூட்டம் கூடியதும் அந்த நபர் தன் நிதானம் இழந்து, “இதில் நான் எழுதிய கடிதம் உள்ளது, இவர் இதை தரமறுக்கிறார்”என்றார். எல்லோரும்,”இதை இங்கேயே திறந்து பார்ப்போம் இதில் உங்கள் கடிதம் இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள் என்றனர். அதைத் திறந்தார், அதில் 10 நூறு ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே இருந்தன. கோரப்பட்ட ஆளுக்கு வெட்கமாகி விட்டது. பக்தருக்கு கண்களில் நீர் நிரம்பியது– ஸாயியின் கருணையை நினைத்து, அந்த நபர் குழப்பத்துடன் வெளியேறினார். சுவாமியின் கருணையை பத்து மடங்காகப் பெற்ற இவரோ சுவாமியின் காருண்யத்தால் ஊருக்கு திரும்பிச் சென்றார்!

ஆதாரம்: Prashant P Palekar, Jagadoddhaarana Kaarana Hey, Chapter. 31

தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி. 

🌻 சுவாமியின் கருணை கடலை விடவும் ஆழமானது.. சுவாமியின் அசைவு காற்றை விடவும் சூட்சுமமானது.. சுவாமியின் செயல் நெருப்பை விடவும் வெளிச்சமானது... சுவாமியின் இதயமோ ஆகாயம் விடவும் அகண்டாகாரமானது எனும் பரம சத்தியத்தை உணர்ந்தால் சரணாகதியை தவிர வேறென்ன நம்மால் செய்ய இயலும்!! இதய அர்ப்பணிப்பே இறைவன் சத்யசாயிக்கான பூஜாவிதானம்!! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக