தலைப்பு

சனி, 31 அக்டோபர், 2020

சர்க்கரை நோயினால் வெட்டி எடுக்க வேண்டிய காலையும் கையையும் காப்பாற்றிய சாயி கிருபை!

சுவாமியினால் முடியாதது எதுவுமில்லை. அதற்கு நம் பூர்வீக கர்மாவும் இடம்தர வேண்டி இருக்கிறது. அப்படி சத்கர்மாவாக நாம் புரிகின்ற பக்தியும் சுவாமி மேல் வைக்கின்ற திடமான நம்பிக்கையும் எவ்வாறு அற்புதங்களை நிகழ்த்துகிறது என்பதற்கான அற்புத அத்தாட்சிப் பதிவு இதோ... 


DR. பூர்ணேந்து தத்தா கல்கத்தாவிலும், லண்டனிலும் மருத்துவப்ணியாற்றிய பின் U.S.A – வில் Buffalo School of Medicine –ல் யூனிவர்ஸிடியில் பணிபுரிந்து கொண்டு இருந்தார். 40 வயதுள்ள ஒரு மிகப் பருமனான பெண்மணி கைகளும், புஜங்களும் வீங்கிய நிலையில் இந்த ஹாஸ்பிடலுக்கு வந்தார். அவர் சர்க்கரை நோயும், ஆரோக்ய மற்ற நிலையிலும் இருந்தார். அவரது இரண்டு கைகளையுமே எடுத்து விட வேண்டும் மென கூட டாக்டர் நினைக்கலானார். ஏனெனில் அது gangrene என்ற மாமிசத்தை தின்னும் புண்ணால் ஏற்பட்ட நோய்! எவ்வளவு தூரம் முடியுமோ அந்த அளவு வைத்யம் செய்யுமாறு அப்பெண்மணி கெஞ்சியதால் இவர் பரிதாபம் கொண்டார், சக மருத்துவர்களும் கைகளை எடுக்கவேண்டும் என்றே கூறினர்.


பாபாவை ப்ரார்த்தனை செய்து கொண்டு டாக்டர். தத்தா அப்பெண்மணிக்கு சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க ஊசிமூலம் மருந்து செலுத்தி, லோக்கல் அனஸ்தீஷியா கொடுத்து, கைகளில் உள்ள இறந்து போன செல்களை மட்டும் நீக்கி, மருந்து போட்டு ஆறவிட்டார். மற்ற மருத்துவர்கள் ஆச்சரியமுற்றனர். அப்பெண்மணி கைகளை நன்கு அசைக்க முடிகிறது; விரல்கள் மட்டும் அதிகம் மடக்கி நீட்ட முடியாமல் இருப்பதாக கூறினார், ஆனால் அதற்கு அவர் பழகிவிட்டார். பாபாவின் கருணையால் குணமடைந்து இயல்பு நிலைக்கு வந்தார், பாபாவின் அருள் இல்லையேல் இந்த சிகிச்சை சாத்தியம் இல்லை.       

சில மாதங்களுக்குப் பிறகு வேறு ஒரு ஆஸ்பத்ரியில் ஒரு ஆப்ரிக்க- ஆமெரிக்க பெண்மணி மிகத் தாழ்ந்த பொருளாதார நிலைமையில் உள்ளவர் கால்களில் இதே மாதிரி gangrene என்ற வியாதியுடன் வந்தார்! மருத்துவர்கள் ஆலோசனை கூட்டத்தில் கால்களை எடுப்பது ஒன்றே வழி என்றார். ஆனால் தத்தா அவர்கள் தனது முந்தைய அனுபவம் கொண்டு, அதே போல் இறந்த செல்களை மட்டும் நீக்கி வைத்யம் செய்தார். பாபாவிடம் பிரார்த்தனை செய்து கொண்டார். அப் பெண்மணியும் குணமாகி வீடு திரும்பினார்!.                                                                

சாத்தியமற்ற ஒன்றை, ஸாயியின் கருணை சாத்திய மாக்குகிறது!.


ஆதாரம்: Dr. PURNENDU DUTTA, Inspired Medicine - P 252

தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி. 


🌻 மருத்துவர் சிகிச்சையே அளிக்கிறார் சுவாமியே குணமாக்குகிறார். கருவிகள் இடத்தையே அளிக்கின்றன அதில் அருள் விளையாடலை சுவாமியே நிகழ்த்துகிறார். சர்க்கரையில் குறைபாடு இருந்தாலும் சுவாமி மேல் உள்ள பக்தியில் குறைபாடு இல்லாமல் வாழ்வதே எவ்விதமான நோய்களில் இருந்தும் மனிதனைக் காப்பாற்றுகிறது என்பது புரிந்தால் மட்டுமே ஆன்மாவுக்கான ஆரோக்கியமே ஆரம்பிக்கிறது! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக