தலைப்பு

சனி, 3 அக்டோபர், 2020

பிரபல இந்திய விஞ்ஞானி பகவந்தம் மகனுக்கு திடுக்கிடும் படி அறுவை சிகிச்சை செய்த பாபா!

Former Director of Indian Institute of Science and Defence Research and Development Organisation. He is One of the founding fathers of Defence Research in India. 

டாக்டர். சூரி பகவந்தம்(M.Sc. Ph.D. D.Sc) இந்தியாவின் தலைசிறந்த வேதியல் விஞ்ஞானி ஆவார். டாக்டர் சர்.சி.வி ராமன்(நோபல் பரிசு பெற்றவர்) அவர்களோடு ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டு  பாராட்டையும் பெற்றவர். அகில இந்திய விஞ்ஞான கழகத்தின் இயக்குனராக மற்றும் இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு விஞ்ஞான ஆலோசகராகவும் பணி ஆற்றியவர்.


இறைவன் சத்ய சாயி எதையும் சாதிக்க வல்லவர் என்பதற்கான கோடிக்கான சான்றுகளில் இதோ ஓர் துளி...

பெங்களுரில் Dr.   பகவந்தம் அவர்கள் வீட்டிற்கு 1960 ல் பாபா சென்றார். Dr. பகவந்தம் அவர்களின் மைந்தர்களில் ஒருவனுக்கு 11 வயது இருக்கும் கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார், சிலி மருத்துவர் இவனுக்கு தண்டுவடத்தில் (Spine)  ஒரு சிறிய துளை (Puncture)  செய்து மூளைக்கும் செல்லும் திரவத்தில் ஏற்படும் அழுத்தத்தை வெளியேற்ற வேண்டும் எனக் கூறினாராம்!

இந்த சந்தர்ப்பத்தில் தான் பாபா சென்றிருந்தார் அவர்கள் வீட்டிற்கு! குழந்தைகள் மேல் அன்பும் புரிதலும் உள்ள பாபா அவனைப்பற்றி விசாரித்தார் கருணையோடு! மருத்துவ அலசல் பற்றியும் கேட்டார்!.

லம்பர் பங்ச்சர் செய்தால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி விடுவான் என பாபா சொன்னார், பிறகு சர்வ சாதாரணமாக தானே அவ்வப்பொழுது அந்த சிகிச்சை செய்து விடுவேன் என்றாறே பார்க்கலாம்!.

டாக்டர் திகைத்து விட்டார். சந்தேகமும் பயமும் அவரது எண்ணங்களில் ஓடலாயின. ஏனெனில் அத்தகைய சிகிச்சை செய்வது தொழில் ரீதியான மருத்துவப் பயிற்சி பெற்றவர்களால் தான் முடியும்! அவர் வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசுவதற்கு முன்பாக பாபா தன் கரங்களை அசைத்து விபூதி வரவழைத்து பையனின் முதுகில் தடவினார். மற்றொரு கையசைவில் 4 அங்குல நீளமுள்ள ஊசியை வரவழைத்தார். (குழாய் போன்றது) புரிந்து கொள்ள முடியாத நிலையில் அப்பா இருந்தார். பாபாவையும், மகனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே பிரார்த்தனை பண்ணிக் கொண்டிருந்தார்

விபூதியின் பயனாக பையன் மயக்க நிலையை அடைந்ததாக தெரிந்தது. பாபா ஊசியை சரியான இடத்தில் செருகினார். ஊசி மறைந்தது. கிட்டத்தட்ட 1 க்யூபிக் சென்டிமீட்டர் அளவு திரவத்தை வெளியே எடுத்தார் தந்தையின் இதயம் படபடவென அடித்துக் கொண்டது எப்படி ஊசி வெளியே கொண்டு வரப்படும் என்று ! பாபா ஒரு வித்தியாசமான முறையில் அழுத்தம் கொடுக்க ஊசி வெளியே வந்து விட்டது! பக்கத்தில் ஒரு நர்ஸ் இருப்பது போல் அவரிடம் ஊசியைக் கொடுப்பது போல் செய்தார். அந்த அறையில் இருந்தவர் அனைவரும் வியந்து பார்த்தனர்.

ஸர்ஜிகல் ட்ரஸ் (bandage) கொண்டு வரும்படி பாபா கூறினார். வெளியே இருந்து கொண்டு வர 10 நிமிடம் ஆகும் என்றனர். பாபா சிரித்து விட்டு அவ்வளவு நேரம் கழித்தா கட்டு போடுவார்கள் என நகைத்து, தனது கைகளை அசைத்து, சரியான வகை ட்ரஸ்ஸிங் பேண்டேஜை தானே வரவழைத்து, ஒரு பயிற்சி பெற்ற உதவியாளரிடம் இருந்து பெறுவது போல் பெற்று வேலையை முடித்தார்.

கவனமாக பையனின் முதுகை கையாண்டு அவனை நினைவிற்குக் கொண்டுவந்தார். ஆபரேஷனுக்குப் பிறகும் கூட பையன் எந்த வலியும் இல்லாதது போல் உணர்ந்தான்.  அறுவை சிகிச்சைக்குப் பிறகு பையன் முன்னேறி வருவதாக தெரிந்தது. அவன் பெரியவனாகும் வரை முன்னேற்றம் படிப்படியாக இருக்கும் என பாபா கூறினார்.

ஆதாரம்: Man of Miracles.  P- 178, 1960.

தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.

🌻 சுவாமியால் எதை சாதிக்க இயலாது! பரபஞ்ச உலகையும் .. மனித வாழ்க்கையையும் சுவாமியே சங்கல்பிக்கிறார்.. தினசரி சம்பவங்களும் சுவாமி நிகழ்த்துவதே! இதை உணர்ந்து அவர் பதம் சரணடைந்து உய்வோமாக! 🌻

1 கருத்து: