இது தான் இதே தான் கேள்விகளுக்குள் எல்லாம் பிரம்ம சாரமாக இருக்கிறது. மிகப் பயனுள்ள கேள்வி....
We have Born for not to Born again ... நாம் பிறந்ததே மீண்டும் பிறக்காமல் இருப்பதற்காகவே என்கிறார் இறைவன் ஸ்ரீ சத்யசாயி.
ஆன்மாவின் அடிப்படை நோக்கமே .. மனித ஆன்மாவின் அடிப்படை ஏக்கமே இந்தப் பிறவா நிலையை அடைவது தான்.
அதற்காகவே இந்த ஆன்மாவுக்கு கிடைத்த கடைசி வாய்ப்பு (last possibility) தான் மனித உடம்பே.
ஆன்மாவானது பல ஜந்துக்களாக .. விலங்குகளாக பிறந்தே மனித உடலை அடைகிறது. அதை அடைகின்ற நோக்கமே பிறவா நிலையை அடைவது தான்.
Last possibility எப்போதும் lost possibilityயாக மாறவிடக் கூடாது.
மனித உடம்பு தான் முக்திக்கான சாதனமே!
இந்த முக்தியை / பிறவா நிலையை enlightment என்கிறோம்.
Enlightment is purity என்கிறார் சுவாமி.
மனம் / வாக்கு / காயம் மூன்றையும் முதலில் சுத்தீகரிக்க வேண்டும். இதுவே திரிகரண சுத்தி.
சுவாமி சொல்லும்
See Good
Do Good
Be Good என்பதே அந்த மூன்றையும் சுத்தீகரிக்கவே!
முக்திக்கு எது தடையாக இருக்கிறது தெரியுமா? மனம் தான்.
நீங்கள் மணம் தடையா எனக் கேட்பதற்கே சம்சார வாழ்க்கையில் முக்தி கிடைக்குமா என கேட்கிறீர்கள் அல்லவா.
மணம் அல்ல தடை.. மனமே தடை.
"நான்" "எனது" எனும் எண்ணக் குப்பைகளே தடை..
நான் அவன்.. நான் இவன்..
நான் இந்தப் பதவி.. அந்தப் பதவி..என நினைப்பது எவ்வளவு அறியாமை ?
அது என்ன சுவாமி தரும் வைகுண்ட பதிவியை விட அவ்வளவு பெரிய பதிவியா?
இதைப்போன்ற பயனில்லா எண்ணக் குப்பைகளை இறைவன் ஸ்ரீ சத்யசாயி பாதங்களில் கொட்டிவிட வேண்டும்.
நம்மையே சுத்தம் செய்பவர்.. நம் எண்ணங்களையும் சுத்தம் செய்வார்.
ஓம் ஸ்ரீ சாயி சம்ஹாராய நமக ..
எண்ணங்களை சம்ஹாரம் செய்பவர் சுவாமியே !
அதற்கான சாதனையே
நாமஸ்ரமணம்... தன்னலமில்லா தூய சேவை... தியானம் என்கிறார் சுவாமி.
மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை..
தொடர் நாமஸ்ரமணமே தூய சேவையாற்ற வைக்கும்..
தூய சேவையே நம் அகந்தையை கரைத்து தியான நிலைக்கு அழைத்துச் செல்லும்!
எண்ணங்களை துறப்பதே சன்யாசம். Let go இது தான் சன்யாஸ் என்பதற்கான அர்த்தம்.
தேக சன்யாசம்.. மனோ சன்யாசம்.. ஆத்ம சன்யாசம் என மூன்று வகையான சன்யாசம் இருக்கிறது என்கிறார் சுவாமி.
வெறும் புற அடையாளங்கள் மட்டும் தேக சன்யாசம்.
மனதின் எண்ணத்தை துறப்பது மனோ சன்யாசம்.
ஆத்மாவில் நிறைந்திருத்தல் ஆத்ம சன்யாசம். அதுவே அமிர்த சன்யாசம் என்கிறார் சுவாமி.
இப்போதுள்ள காலகட்டத்தில் பலபேர் தேக சன்யாசிகளிடமே சிக்கி திரிந்த பாலாய்.. பாழாய்ப் போகிறார்கள்.
சன்யாசத்தில் இருந்து சம்சாரமாய் வாழ்ந்தால் தான் பாவமே அன்றி
சம்சாரத்தில் இருந்தபடியே சன்யாசமாய் வாழ்வது தெய்வக் கொடுப்பினை.
சக்கரவர்த்திகளான ஜனகர்.. அஸ்வபதி... தீலபர் இவர்கள் எல்லாம் ஷத்ரியர்களாக.. சம்சாரிகளாக இருந்தே முக்தி அடைந்தவர்கள்.
கர்ம மூட்டையைக் காலி செய்யும் வரை பிறவிகள் வந்து கொண்டே இருக்கும்.
அந்த மூட்டையை கொஞ்சம் திறந்து பாருங்கள்.. உங்களின் பாசம் ..பந்தம்.. அகங்காரம் .. இவைகளே இடத்தை நிரப்பியபடி இருக்கும்!
பஞ்சு மிட்டாய் பார்ப்பதற்கு புஸ் என பெரிதாக இருக்கும்.
அதை கைக்குள் வைத்து நன்றாக அமுக்குங்கள் கடுகாகி விடும்.
அப்படிப்பட்டவை தான் இந்த மாயையான பந்த பாசம்.. நான்/ எனது எனும் நினைப்பு .
புரிகிறதா..
அதை கையில் வைத்து அமுக்கும் செயல் போல் தான்
விவேகம்.. வைராக்கியம்.
இந்த இரண்டே பற்று அற்ற நிலை தரும்.
எவை நிகழ்ந்தாலும் சுவாமி சங்கல்பமே எனும் சத்தியம் உணருங்கள். அது மனதின் அலைபாய்தலை நிறுத்தும்.
நமது பாரத பண்பாடு..
பிரம்மச்சர்யம் .. கிரகஸ்தம்.. வனபிரஸ்தம் .. சன்யாசம் என கிளை கொண்டது தான்..
காலக்கொடுமை.. கிரகஸ்தத்தோடே நிறுத்திவிட்டது கலிமாயை.
வனபிரஸ்தமாக வனத்திற்கு போகவேண்டிய அவசியமில்லாமல் மனபிரஸ்தமாய் மனதிற்குள்ளேயே தியானம் வழி செல்லுங்கள்.!
நன்றாக உணருங்கள்..
உங்கள் பணத்தைத் தான் பங்கு போட காக்காய் உறவுகள் வருமே தவிர
உங்கள் பாவத்தையோ / கர்மாவையோ பங்கு போட்டால் ஈ காக்காய் கூட எட்டிப் பார்க்காது.
இறைவன் ஸ்ரீ சத்யசாயியை வழிபடுவதே இந்த மாயையிலிருந்து தப்பிப் பிழைத்து முக்தி பெறுவதற்கான ஒரே வழி.
முக்தியே முகம் எடுத்து சத்யசாயியாய் அவதரித்தது.
அவரால் மட்டுமே நமக்கு முக்தி தர முடியும்.
வேலையே செய்யாமல் நாம் கூலி கேட்டால் எப்படி?
சுவாமி விதித்த ஆத்ம சாதனை துணை கொண்டு .. எழுகின்ற அலைகளாய் எழுகின்ற எண்ணங்களைக் கடந்து ஆத்மா எனும் ஆழ்கடலில் மூழ்கி முக்தி எனும் முத்தெடுப்போம்!
அற்றது பற்று எனில் உற்றது வீடு.
அந்த வீட்டில் தான் நமக்காக நம் சுவாமி காத்துக் கொண்டே இருக்கிறார்.
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக