தலைப்பு

வெள்ளி, 9 அக்டோபர், 2020

அழுத குழந்தையின் கண்ணீரை தன் கைக்குட்டையால் துடைத்த தாயுமானவ சாயி!

யாருக்கு என்ன பிரச்சனை..? யாருக்கு எது ஆறுதல்..? என அறிந்து அதை உடனே சங்கல்பித்து செயல்படுத்துபவர் சுவாமியே.. எத்தனைப் பெரிய கூட்டம் என்றாலும் சுவாமிக்கு தனித்தனியாக வந்திருப்பவரின் உள்ளம் தெரியும். அவரவர்களுக்கு பிரத்யேக ஆனந்தம் அளிப்பவர் சுவாமியே என்பதை உணர்த்தும் நெகிழ்வான பதிவு இதோ...

2004ல் பகவானின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்த பொழுது பகவான் குழந்தைகள் மீது கொண்டிருந்த இயல்பான கருணை வெளிப்பட்டது.  

19ம் தேதி நவம்பர் மாதம், எல்லா மாணவர்களும் குழந்தைகள் ஆடிக் கொண்டிருந்த நடன நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். திடீரென ஒரு மிகச் சிறிய  பெண் குழந்தை கண்களில் கண்ணீரோடு காணப்பட்டாள்!  இதை அனைவரும் கவனித்தனர். ஏன் என்று எல்லோரும் உணரும் முன், பகவான் புரிந்து கொண்டார்; எரியும் மெழுகுவர்த்தியில் இருந்து சூடான ஒரு துளி மெழுகு அவள் கைகளில் பட்டுவிட்டது என்பதை!  உடனே அவளை மேடைக்கு அழைத்து அவள் உள்ளங்கையை தன் கையில் ஏந்தி மெதுவாக, அந்த இறுகிப் போன மெழுகை நீக்கி விட்டு, தனது கைக்குட்டையால் அவள் கண்ணீரைத் துடைத்தார்!!. அவளது கண்ணீர் வேதனையானதா, ஸ்வாமியின் அன்பினால் ஏற்பட்ட ஆனந்தக்கண்ணீரா என யாருக்குத் தெரியும்?  பகவான் தனது கைக்குட்டையால் தானே அல்லவா துடைத்திருக்கிறார்!. 

ஆதாரம்: Sai Sparshan, P-327

தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி. 


🌻 எந்த பக்தரின் எந்த கண்ணீர் துளியும் தப்பித்து தரையில் வீணாய் சிந்திட சுவாமி அனுமதிப்பதே இல்லை. தன்னையே கைக்குட்டையாக்கி அதைத் துடைப்பவர் சுவாமியே! அந்தக் குழந்தை எவ்வளவு கொடுத்து வைத்திருக்கிறது! ஒரு மெழுகு இதயம் மெழுகால் பட்ட காயத்தை சூரியனையே உற்பத்தி செய்பவரிடம் மறைக்க முடியுமா? இந்த கருணை மிகுந்த காட்சியை கவனித்திருக்கும் காயம் ஏற்படுத்திய அந்த மெழுகுவர்த்தி தன் தவறை நினைத்து பரவசத்தில் சுடச்சுட கண்ணீரை அல்லவா  சிந்திக் கொண்டிருக்கும்! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக