தலைப்பு

புதன், 14 அக்டோபர், 2020

பாரத ரத்னா பஜித்த சாயி பகவான் பாதுகை!


இறைவன் ஸ்ரீ சத்யசாயி தன் பக்தர்களுக்காக எல்லாவற்றையும் தருகிறார் என்பதை கடந்து பெருங்கருணையில் நம் சத்யசாயி பரம்பொருள் தன்னையே பக்தர்களுக்கு தருகிறார் என்பதே சர்வ சத்தியம். அப்படி நிழல் மீராவுக்கு நிஜ கண்ணன் வழங்கிய தன் பகவத் பாதுகை மகிமை இதோ..

சாய்ராம்.. சில வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீமதி M. S. சுப்புலட்சுமி அம்மையார் அவர்களோடு எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை நினைவு கூற விரும்புகிறேன்.

அப்போது நான் சென்னை தி.நகர் சமிதியின் கன்வீனராக இருந்தேன். அச் சமிதியின் ஆண்டுவிழா ஒவ்வொரு ஆண்டும் பெரிய நிகழ்ச்சியாக நடக்கும். குறிப்பிட்ட அந்த வருடம், ஸ்ரீமதி. M. S. அம்மையாரை சிறப்பு விருந்தினராக அழைக்க விரும்பினேன். அந்த விழா, மேற்கு மாம்பலத்தில் அமைந்துள்ள அயோத்தியா மண்டபத்தில் நடந்தது.

கோடம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள ஸ்ரீமதி. M.S. சுப்புலக்ஷ்மி அவர்களின் இல்லத்திற்கு நானும் சாய் பிரேமி, திரு. பாலகிருஷ்ணன் அவர்களும் சென்றோம். நிகழ்ச்சிக்கு வருகை தந்து துவக்கி வைக்க அம்மையார் அவர்களும் கனிவோடு ஒப்புக்கொண்டார்கள்.
பகவான் அம்மையாரின் இல்லத்திற்கு விஜயம் செய்ததை பகிர்ந்து கொண்டார்கள். விஜயம் முடிந்து திரும்பும் ஸ்வாமி, தனது காலணிகளை விட்டு சென்றார். காரில் ஏறும் போது ஸ்ரீ சதாசிவம் மற்றும் ஸ்ரீமதி M. S. பகவானின் காலணிகளை எடுத்து சென்று வழங்கினர்.


தான் மறந்து போய் காலணிகளை விட்டு வரவில்லை, எனது பிரசாதமாக விட்டு வந்தேன் என ஸ்வாமி அவர்களுடன் கூறியுள்ளார்.
அப்போது முதல் அந்த பாதுகையை சாயி அஷ்டோத்தர நாமாவளி கூறி தான் வழிபட்டு வருவதாக அம்மையார் கூறினார்.

ஸ்ரீ சதாசிவம் மற்றும் ஸ்ரீமதி M. S. அயோத்தியா மண்டபத்திற்கு வருகை புரிந்தனர். வைதிக மரியாதையுடன் அவர்களை வரவேற்றோம்.
நிகழ்ச்சியின் துவக்கத்தை குறிக்கும் வண்ணம் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். 

அந்த நிகழ்ச்சி மேற்கு மாம்பல சமிதியின் துவக்கமாகவும் அமைந்தது.
பக்தர்களுடன் தரையில் அமர்ந்த ஸ்ரீமதி. சுப்புலக்ஷ்மி இரண்டு சாயி பஜன்களையும் பாடினார்.

அன்புடன்
பாம்பே ஸ்ரீநிவாசன்.

ஆதாரம்: திரு. பாம்பே ஸ்ரீனிவாசன் அவர்களின் முகநூல் பகிர்வு.
https://m.facebook.com/story.php?story_fbid=10156293228681470&id=613541469

தமிழாக்கம்: mnv_mdu

🌻சுவாமியின் பாதாரவிந்தமே பக்தர்கள் பிடித்துக் கொள்ள வேண்டியது.. சுவாமியின் பாதமே நிரந்தரம் எனும் சத்தியம் உணர்வது ... அதுவே பேரானந்தம்.. அதுவே பேரமைதி.. அதுவே பேரற்புத பெருவாழ்வு தரும்! 🌻


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக